For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திர கிரகணம்: கர்ப்பிணிகள், இதயம் பலகீனமானவர்கள் கவனமாக இருக்கணும்

கிரகணம் நிகழும் போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Recommended Video

    கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?- வீடியோ

    ராகுவுக்கு சர்ப்பி எனும் பெயர் உண்டு. சர்ப்பி என்றால் ஊர்ந்து செல்லுதல், பரவுதல், நகருதல் என்று அர்த்தம். பாம்பு ஊர்ந்து செல்லும். ஆகவே, ராகு சர்ப்ப கிரகம். ராகு, பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறான். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறான். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம்.

    Chandra grahanam 2020: Dos and Donts for pregnant women Lunar Eclipse

    கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவேதான் கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
    ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள்.

    வைகாசி விசாகம் 2020: முருகனுக்கு விரதமிருந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்வைகாசி விசாகம் 2020: முருகனுக்கு விரதமிருந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்

    கிரகண நேரத்தில் நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. எனவேதான் கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. அந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது என்கின்றனர். வீட்டில் சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். ஃபிரிட்டில் வைத்திருக்கும் உணவுகளில் கூட தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கிரகணம் முடிந்த பின்னர் பரிகாரம் முடிந்த பின்னர் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். கூர்மையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது, முக்கியமாக கத்தரி கொண்டு துணிகளை வெட்டக்கூடாது என்றும் அதையும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த பாதிப்பை கிரகணமூலி' என்றும் சொல்கிறார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் பத்திரமாக இருப்பது நல்லது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சந்திர கிரகணம் இரவு நேரத்தில் நிகழ்வதால் பேசாமல் நேரத்தில் உறங்கி நன்றாக விடிந்த பின்னர் கிரகணம் விட்ட பின்னர் எழுவதே நல்லது.

    English summary
    Chandra grahanam is considered as a special event and it happens when the Moon moves into the Earth's shadow pregnant woman should not view Grahan with naked eyes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X