For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூன்றாம் பிறை சந்திரனை இன்று பாருங்க - மனக்குழப்பம் நீங்கி தைரியம் அதிகரிக்கும்

திங்கட் கிழமையுடன் மூன்றாம் பிறை வரும் போது சோம வாரம் என்பார்கள் அந்நாளில் சந்திர தரிசனம் செய்தால் வருடம் முழுக்க சந்திரனை வணங்கிய பலனை அடையலாம். இன்றைய தினம் மாலையில் சந்திர தரிசனம் செய்தால் மன தைரிய

Google Oneindia Tamil News

மதுரை: மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும். செல்வங்களைச் சேர்க்கும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் வல்லமை படைத்தது. திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும் போது சோம வாரம் என்பார்கள் அந்நாளில் சந்திர தரிசனம் செய்தால் வருடம் முழுக்க சந்திரனை வணங்கிய பலனை அடையலாம். இன்றைய தினம் பிறைச் சந்திரனை வணங்க அனைத்து வித மனக்கஷ்டங்கள், குழப்பங்கள் நீங்கி வாழ்வில் செல்வச் செழிப்பை அடையலாம். ஆனி மாதம் சந்திர தரிசனம் செய்பவர்கள் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழும்.

கொரோனா நோய் தொற்று பரவும் இந்த காலத்தில் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் மன தைரியம் குறைந்து தன்னம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இந்த நேரத்தில் நம் வீட்டின் மொட்டை மாடியிலோ, வாசலிலோ நின்று சந்திரனை தரிசிக்க தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

 இன்றைய ராசி பலன் இன்றைய ராசி பலன்

சந்திரன் தரும் சந்தோஷம்

சந்திரன் தரும் சந்தோஷம்

வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது நம்பிக்கை. சந்திரன் தாய் காரகன். மனிதர்களின் உடல், மனம், புத்தி போன்ற முக்கியமானவைகளுக்கு காரக கிரகமாக அமைவது சந்திரன். சந்திரனின் தோற்றத்தில் ஏற்படும் நாளில்தான். எனவேதான் எண்ண அலைகள் எழுவதும் வீழ்வதும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பொறுத்தது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

சந்திர தரிசனம் பயன்கள்

சந்திர தரிசனம் பயன்கள்

சோமவாரம், சந்திரனுக்கு உகந்த நாள் இந்த நாளில் மூன்றாம் பிறை அமைவது புண்ணியம். சிவபெருமான் பிறை சூடியவர். இந்த பிறையை வணங்கினால் சிவனின் சிரசில் அமர்ந்துள்ள பிறையை வணங்கியது போல நன்மைகள் நடைபெறும். சந்திரன் சர்வ கலாவிதம் என்பார்கள். சந்திர தரிசனம் செய்தால் முன்னேற்றம் உண்டாகும், தடுமாற்றம், தாழ்வு மனப்பான்மை நீங்கும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு

பிரச்சினைகளுக்கு தீர்வு

மூன்றாம் பிறை சந்திரன் ஒளி நம்முடைய இதயத்தில் நம்பிக்கை நிம்மதியை தரும். அமாவாசை, பிரதமை முடிந்து மூன்றாம் பிறை வணங்கினால் வம்சம் விருத்தியாகும். ஆயுள் பலம் அதிகரிக்கும். ஆயிரம் பிறை கண்டவர் என்று அபூர்வமாக கூறுவார்கள். ஆயிரம் பிறை கண்டவர்களின் ஆசியை பெறுவது சிறப்பு. மூன்றாம் பிறை பார்த்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிந்தனையும் தெளிவும் அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

நவ கிரக தோஷங்கள் நீங்கும்

நவ கிரக தோஷங்கள் நீங்கும்

தெரிந்தோ தெரியாமலோ அம்மாவின் மனதை காயப்படுத்தி அதனால் சாபம் பெற்றவர்கள் மூன்றாம் பிறை சந்திரனை பார்த்து சாபம் நிவர்த்தி அடையலாம். வற்றாத செல்வம் கிடைக்கும். வாழையடி வாழையாக நம்முடைய சந்ததி தழைக்கும். சந்திரன், ராகு அல்லது கேது அல்லது சனியோடு இணைந்திருப்பவர்கள் மூன்றாம் பிறை சந்திரனை தரிசனம் செய்தால் பாவ கிரக சேர்க்கை நீங்கும். காலத்தே எல்லா யோகங்களும் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் பெருகும். நவ கிரக தோஷங்களும் நீங்கும்.

செல்வ வளம் பெருகும்

செல்வ வளம் பெருகும்

சந்திரனை ராஜ கிரகம் என்று கூறுவார்கள். மேலும் செல்வங்களை தரும் மகாலட்சுமியை சந்திரன் சகோதரி என கூறுவார்கள். எனவே சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு சந்திரனின் சகோதரியான மகாலட்சுமியின் அருள் கிடைத்து அனைத்து செல்வங்களையும் சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷங்களை நீக்கும்.

சிவன் அருள் கிடைக்கும்

சிவன் அருள் கிடைக்கும்

சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி சந்திர மௌலீஸ்வரராக காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் மட்டுமல்ல சாட்சாத் பரமேஸ்வரனின் சிரசை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

சந்திர தரிசனம் புண்ணியம்

சந்திர தரிசனம் புண்ணியம்

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

அம்மன் வழிபாடு

அம்மன் வழிபாடு

சந்திர தோஷம் இருப்பவர்கள் தெற்கு நோக்கிய அம்மனை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வு அமையும். ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திர பரிகாரத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க நன்மைகள் நடைபெறும். திருப்பதி, திங்களூர் சென்று வரலாம். கொரோனா நோய் தொற்று பற்றிய பயம், பதற்றம் நீங்க இன்று மறக்காமல் சந்திர தரிசனம் பண்ணுங்க நன்மையே நடக்கும்.

English summary
Chandra Darshan is the observance of sighting the moon after the Third day of Amavasya Thuvithiya thithi after Amavasya is celebrated as Chandra Darshan in the honour of the Moon God.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X