For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்ப ராசிக்காரர்களே... இன்னும் 2 நாளைக்கு சந்திராஷ்டமம் இருக்கு!

கும்ப ராசிக்காரர்களுக்கு குறிப்பாக அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம். எனவே அதற்கான பரிகாரத்தை செய்து விட்டு பணியை செய்யலாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சனி பெயர்ச்சி 2017-2020: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்- வீடியோ

    சென்னை: சந்திராஷ்டமம் என்றாலே பலரும் சங்கடமாக உணர்கிறார்கள் கும்பராசிக்காரர்களுக்கு 10ஆம் தேதி நேற்று இரவு 11-39 மணி முதல் 13 ஆம் தேதி காலை 08-04 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.

    எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

    ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறோம். குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

    எரிச்சல், கோபம்

    எரிச்சல், கோபம்

    இன்றைக்கு ஏன் மேனேஜர் சிடு சிடுன்னு இருக்கிறார் என்று அலுவலகத்தில் உள்ளவர்கள் பேசிக்கொள்ளலாம். அதே போல காரணமே இல்லாமல் மனதில் இளம் புரியாத பயமும் கூட சிலருக்கு ஏற்படும். இதற்குக் காரணம் சந்திரனே. காரணம் சந்திரனை மனநிலைக்கு உரியவன் என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    வாகன போக்குவரத்தில் கவனம்

    வாகன போக்குவரத்தில் கவனம்

    மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமையில்லாமல் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், குடும்பத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். சந்திராஷ்டம காலத்தில் எரிச்சலோடும், கோபத்தோடும் வெளியில் செல்லும் போது, வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை. அதனால்தான் பயணங்களை தவிர்த்து விடுமாறு கூறுவார்கள். அப்படியே வெளியில் செல்லவேண்டிய அவசியம் இருந்தாலும் அதற்கான பரிகாரத்தை கொண்டு செர்ர அவண்டும்.

    எட்டாம் இடத்தில் சந்திரன்

    எட்டாம் இடத்தில் சந்திரன்

    வளர்பிறையைக் காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது.
    பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள்.

    டிச.13 வரை கும்பத்திற்கு சந்திராஷ்டம்

    டிச.13 வரை கும்பத்திற்கு சந்திராஷ்டம்

    கும்பராசிக்காரர்களுக்கு நேற்றிரவு முதல் சந்திராஷ்டமம் தொடங்கியுள்ளது. டிசம்பர் 13வரை நீடிக்கிறது.
    சந்திராஷ்டமம் தினத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். மவுனமாக பணியை கவனிக்கலாம் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மவுனமே சிறந்த மருந்தாகும். குருவின் ஆதிக்கம் பெற்ற விரலி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

    விநாயகரை வணங்குங்கள்

    விநாயகரை வணங்குங்கள்

    சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது. விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

    தோஷம் விலக பரிகாரம்

    தோஷம் விலக பரிகாரம்

    சந்திராஷ்டம தினத்தில் பால் திரிவது, சாதம் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவது, வெண்ணிற ஆடையில் அசுத்தம் மற்றும் கரை படுவது போன்றவை இயற்கையாக நேர்ந்துவிட்டால் சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.
    திரிந்த பாலில் செய்யப்படும் ரசகுல்லா போன்ற இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு சாப்பிட சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

    English summary
    When the Lord of mind enter into 8th house from the Moon sign (Janmarasi) particularly in the 17th star fro birth star, Moon is getting malefic so that bad results are happening. It is called Chandrastama.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X