For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்டோபர் சந்திராஷ்டம நாட்கள் : 12 ராசிக்காரர்களும் இந்த நாட்களில் ரொம்ப கவனமாக இருங்க

சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாட்கள் ஆகும். அக்டோபர் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் வருகிறது என்று உங்க டைரியில குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.

இந்த நாட்களை உங்க டைரியில குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

Chandrashtama period for the month of October 2020

மேஷம் ராசிக்கு 19-10-2020 அதிகாலை 12.47 மணி முதல் 21.10.2020 அதிகாலை 02.12 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். மிளகு பனங்கல்கண்டு சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம். வாகனங்களில் போகும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.

ரிஷபம் ராசிக்கு 21.10.2020 அதிகாலை 02.12 மணி மணி முதல் 23-10-2020 காலை 07.02 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. இந்த 2 நாட்களில் பாதிப்புகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம் ராசிக்கு 23-10-2020 காலை 07.02 மணி முதல் 25-10-2020 பிற்பகல் 03.26 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிடுங்கள்.

கடகம் ராசிக்கு 25-10-2020 பிற்பகல் 03.26 மணி முதல் 28-10-2020 அதிகாலை 02.31 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்வது நல்லது. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

சிம்மம் ராசிக்கு அக்டோபர் 01 முதல் அக்டோபர் 03 காலை 8.50 மணிவரைக்கும் 28-10-2020 அதிகாலை 02.31 மணி முதல் 30-10-2020 பிற்பகல் 02.57 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். வாகன போக்குவரத்தில் எச்சரிக்கை தேவை. பேச்சில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

காரிய தடை நீக்கும் ஸ்ரீ ராம ஜெயம் - குபேர வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு எழுதி கொடுக்கலாம் காரிய தடை நீக்கும் ஸ்ரீ ராம ஜெயம் - குபேர வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு எழுதி கொடுக்கலாம்

கன்னி ராசிக்கு 03-10-2020 காலை 08.50 மணி முதல் 05-10-2020 இரவு 09.41 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. மாத இறுதியில் 30-10-2020 பிற்பகல் 02.57 மணி முதல் மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் நான்கு நாட்களும் கவனமாக இருப்பது அவசியம். பேச்சில் நிதானம் தேவை. கோபமாக பேசவேண்டாம்.

துலாம் ராசிக்கு 05-10-2020 இரவு 09.41 மணி முதல் 08-10-2020 காலை 09.47 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்.

விருச்சிகம் ராசிக்கு 08-10-2020 காலை 09.47 மணி முதல் 10-10-2020 இரவு 07.09 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. சின்ன சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை.

தனுசு ராசிக்கு 10-10-2020 இரவு 07.09 மணி முதல் 13-10-2020 அதிகாலை 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் வெளியே செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.

மகரம் ராசிக்கு 13-10-2020 அதிகாலை 12.29 மணி முதல் 15-10-2020 அதிகாலை 02.02 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம் ராசிக்கு 15-10-2020 அதிகாலை 02.02 மணி முதல் 17-10-2020 அதிகாலை 01.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம் நிதானம் தேவை.

மீனம் ராசிக்கு 17-10-2020 அதிகாலை 01.21 மணி முதல் 19-10-2020 அதிகாலை 12.47 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் எச்சரிக்கை தேவை. மவுன விரதம் இருப்பது நல்லது.

English summary
அக்டோபர் சந்திராஷ்டம நாட்கள் Chandrashtama days for the Month of october. Here is the table with ready reference to your Chandrashtama days for the month of October 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X