For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா? தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்

திருமணம் என்பது ஆணையும், பெண்ணையும் உடல் ரீதியாக சேர்த்து வைத்தல். அதற்கடுத்தது குழந்தை பாக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை உள்ளிட்டவை இடம்பெறும்.

Google Oneindia Tamil News

மதுரை: செவ்வாய் பகவான் தாம்பத்ய உறவுக்கு உரிய கிரகமாகவும் செவ்வாய் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவரது உடலில் காமத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடியதும் செவ்வாய்தான். தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்படும். தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள ஆணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் போது தாம்பத்ய வாழ்க்கையில் அதிகளவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சில விதிவிலக்குகளும் உண்டு.

இதேபோல் ரத்தத்தில் ஆர்.எச் பேக்டர் என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால் குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களுக்கு திருமண தடைபடும் என்று ஜோதிடர்கள் கூறுவதுண்டு. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செவ்வாய் பகவான் புராண கதை

செவ்வாய் பகவான் புராண கதை

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும் என்று வேண்டினான்.

அசுரனுக்கு வரம்

அசுரனுக்கு வரம்

பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான். வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.

செவ்வாய் அவதாரம்

செவ்வாய் அவதாரம்

ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன. அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அங்காரகன்

அங்காரகன்

அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும். பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான். பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், செவ்வாய் என்று பெயரை அடைந்தான். கிரேக்க பாசையில் மார்ஸ் எனப் போற்றப்பட்ட இக்கிரகம் நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம் பராக்கிரமம், வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம், ஆண்மை போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்

ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம். இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள் இரண்டை சேர்ப்பதன் மூலம், தோஷம் சமன் அடைகிறது. பெரும்பா லான ஜாதகங்களில் அதாவது 90 சதவிதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக செவ் வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்து தோஷ நிவர்த்தி ஆகி இருந்தால், அதே போல் 2, 4, 7, 8, 12ல் உள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும். 1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துடன் சேர்க்க கூடாது.

தோஷ நிவர்த்தி

தோஷ நிவர்த்தி

செவ்வாயை குரு பார்த்தாலும் தோசம் இல்லை என்ற கருத்தும்,குளிர்ச்சியான கிரகம் என்றதால் ஏற்பட்டது ரிஷபம்,கன்னி என்ற இரண்டு ராசிகளும் நீர் தன்மை உடையது இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் நிவர்த்தி ஆகிறது. மகரமும் நீர் ராசி என்பதால்,செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிறது.

மேஷம் ,விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் இல்லை, காரணம் லக்னாதிபதியாக வரும் கிரகம் சாதகருக்கு நன்மைதான் செய்வார் என்பதால் தோஷம் இல்லை. மேலும் சூரியன்-சந்திரன் இரண்டும்,செவ்வாய் இருக்கும் இடத்தை பார்த்தால் தோஷம் இல்லை காரணம் சூரியனும் சந்திரனும் அம்மை அப்பனாக கருதப்படுகின்றனர்.

செவ்வாய் தோஷ பரிகாரம்

செவ்வாய் தோஷ பரிகாரம்

குரு,சுக்கிரன்,புதன் இவர்களால் நீக்க இயலாத தோசத்தையும் சூரியன் -சந்திரன் இவர்களால் நீக்க முடியும் எனவே செவ்வாய்,சூரியன் -சந்திரன் பார்வை பெறுவது தோச நிவர்த்தி ஆகிறது. இதுபோன்று செவ்வாய் தோஷ அமைப்பை ஆய்வு செய்து ஆராய்ந்து பலன் கூற வேண்டும். தோஷம் இருப்பவர்கள்

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.

தேவிப்பட்டணம் செவ்வாடைக்காரி

தேவிப்பட்டணம் செவ்வாடைக்காரி

ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் பாதையில் தேவிப்பட்டணம் இருக்கிறது. மகிசாசுரனை வதைத்த இடம் என்பதால் இதற்கு தேவி பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் செவ்வாடைக்காரி என்னும் சிறப்பு பெற்றவள். கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் அன்னையாக காளியம்மன் இங்கு அருள் பாலிக்கிறாள். திருமணதடை பட்டவர்கள் செவ்வாய் கிழமையில் இங்கு வந்து செவ்வாடை உடுத்தி தட்டாங்குளத்தில் குளிக்க வேண்டும். ஈரத்துணியுடன் கோவிலை 9 முறை சுற்றிவர வேண்டும். மஞ்சள் அல்லது கருப்பு கயிற்றினை விநாயகருக்கு எதிரே உள்ள அரச மரத்தில் கட்டிவிட்டு வணங்கவேண்டும். 9 செவ்வாய் கிழமை தொடர்ந்து இடைவிடாமல் காளியை வணங்கினால் நிச்சயம் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் பிரச்சினை, பொருளாதாரத் தடை, பில்லி, சூனியம், எல்லாவற்றுக்கும் தடைக்கற்கள், மருத்துவர்களால் கவனிக்க முடியாத நோய்கள், மற்றும் படித்து வேலையில்லாமல் அவதிப்படுவோர்க்கும் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

யார் எந்த தெய்வத்தை வணங்குவது

யார் எந்த தெய்வத்தை வணங்குவது

செவ்வாய் தசையில் செவ்வாய் புத்தி நடப்பவர்கள் சூரிய காயத்ரி ஜபித்து வரவும், சூரியனை வழிபட்டு வரவும். செவ்வாய் தசையில் ராகு புத்தி நடப்பவர்கள் ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வரவும். செவ்வாய் தசையில் குரு புத்தி நடப்பவர்கள் பிரதோஷ வழிபாடு செய்யவும். செவ்வாய் தசையில் சனி புத்தி நடப்பவர்கள் நீலகண்டர் திரிசதி யை பாராயணம் செய்து வரவும். செவ்வாய் தசையில் புதன் புத்தி நடப்பவர்கள் சூரிய காயத்ரி ஜபித்து வரவும்.

செவ்வாய் தசையில் கேது புத்தி நடப்பவர்கள் காலபைரவரை செவ்வாய் தோறும் வணங்கி வரவும். செவ்வாய் தசையில் சுக்கிரன் புத்தி நடப்பவர்கள்:

வரலட்சுமி பூஜை செய்து வரவும். செவ்வாய் தசையில் சூரியன் புத்தி நடப்பவர்கள் கோ பூஜை வெள்ளி தோறும் செய்து வரவும். செவ்வாய் தசையில் சந்திரன் புத்தி நடப்பவர்கள் அஷ்டலட்சுமிகளை வணங்கி வரவும்.

எப்படி பரிகாரம் செய்வது

எப்படி பரிகாரம் செய்வது

செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது. இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்

English summary
Chevvai dosham is one of the dosham which is most feared one since it is going to create the life risk for the match. It is also known as Manglik dosha. When the planet Mars is placed in 2nd, 4th, 7th, 8th or 12th houses from lagna chandran or Sukran in a natal chart, then native is considered as suffering from Chevvai Dosham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X