• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சித்திரை மாத ராசி பலன் 2021: உச்ச சூரியனால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைகிறார். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் தேரோட்டம் என களைகட்டும். மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இந்த மாதத்தில்தான். பல்வேறு சிறப்புக்கள் கொண்ட சித்திரை மாதத்தில் உச்சம் பெற்ற சூரியனால் வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு பெற்று உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷ ராசியில் உச்சம் பெற்ற சூரியன், சுக்கிரன், ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் கேது மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் நீசம் பெற்ற புதன் என கிரகங்கள் பயணிக்கின்றன.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் புதன் 3ஆம் தேதி இடப்பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு வருகிறார். 17ஆம் தேதி ரிஷப ராசிக்கு பயணம் செய்கிறார். சுக்கிரன் 21ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பயணம் செய்கிறார். மற்ற கிரகங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. நவகிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதம் முத்திரை பதிக்கும் மாதமாக அமையப்போகிறது. காரணம் உங்கள் ராசியில் சூரியன் உச்சம் பெற்று உங்கள் ராசியில் பயணிக்கிறார். கூடவே சுக்கிரனும் இணைந்துள்ளார். சந்திரனும் மாத துவக்கத்தில் உங்கள் ராசியில் இருப்பது சிறப்பு. புதனும் விரைய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, மூன்றாம் வீட்டில் செவ்வாய்,எட்டாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் குரு என நவ கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது.

அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடி உங்களை வரும். முக வசீகரம் அதிகரிக்கும் தங்க நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். உங்களின் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். தாய் மாமனுக்காக செலவழிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். தொட்டது துலங்கும் மாதம் பங்குச்சந்தைகளில் நம்பி முதலீடு செய்யலாம். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.

தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும் திருப்திகரமாக செய்து முடிப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். எவ்வளவுதான் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், செயல்கள் எல்லாம் சிறப்படையும்.

ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். சிவ ஆலயம் சென்று பாலபிஷேகத்தில் பால் வாங்கி கொடுக்கலாம். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிர பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதத்தில் சூரியன், சுக்கிரன், புதன், என முக்கிய கிரகங்கள் விரைய ஸ்தானத்தில் இருக்கின்றன. ராசியில் ராகு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணிக்கின்றன. சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்திவிடுவது சிறப்பு.

அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வருமானம் உண்டாகும். உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும், வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினை உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

புதன்பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, சித்திரை மாதத்தில் சூரியன், சுக்கிரன், புதன் லாப வீட்டில் பயணிக்கின்றனர். ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபம் அதிகரிக்கும் வீடு மனை மூலம் வருமானம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், செல்வ நிலை சிறப்படையும்.

சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பாரம் அழுத்தும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நோயினால் மனதில் பயம் உண்டாகும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன்,ஐந்தாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்.

செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் அதிகமான கோபம் ஏற்படும் கட்டுப்படுத்திக் கொள்ளவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் திடீரென்று பணம் கிடைக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும் பெண்களால் நன்மை உண்டாகும்.

சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வியாபாரக் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதத்தில் உங்கள் ராசிநாதன் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்று வலுவான நிலையில் பயணம் செய்கிறார். கூடவே சுக்கிரன் புதன் இணைந்திருக்க, பத்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் பயணிக்கின்றன. உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், அப்பாவின் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும்.

செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதிதாக வீடு மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு நீடிக்கும், உறவினர்களின் செயல்கள் சாதகமாக இருக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் செய்யும் தொழிலில் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் பயம் அதிகரிக்கும், எதிரிகளால் தொல்லை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி நாதனானக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே இந்த சித்திரை மாதத்தில் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. ஒன்பதாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் கவனம் அதிகரிக்க வேண்டும், அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோக வகையில் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும், பணம் கொடுக்கல் வாங்கலில் சிரமம் உண்டாகும் . சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. அப்பாவின் ஆலோசனை தொழில் முன்னேற்றத்திற்கு உதவும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை, பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் வில்லங்கம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவு ஏற்படும்.

துலாம்

துலாம்

சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கிரகங்கள் அருமையான நிலையில் பயணம் செய்கின்றன. களத்திர ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன.

சூரியன் உச்சமடைந்திருக்க கூடவே சுக்கிரன்,சில நாட்களில் புதனும் பயணிக்கின்றனர். இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணிக்கின்றன. சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு உண்டாகும், அதிகாரிகளிடம் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நன்மையைத் தரும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து கொள்வது நல்லது,அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மன சஞ்சலத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சினை தவிர்க்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, சித்திரை மாதத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. களத்திர ஸ்தானத்தில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் இணைந்துள்ளன. சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு உண்டாகும், அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை, கூர்மையான பொருட்களை கையாளும் போதும் நெருப்பினை கையாளும் போதும் கவனம் தேவை. பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் மேலும் அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும்.

சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், வீடு மாற்றம் செய்யும் சூழ்நிலை உண்டாகும்.


ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதத்தில் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் குரு பகவான், ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், ஆறாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்பவர்களுக்கு வியாபாரம் சிறப்படையும். திருமண சுப காரியங்கள் கைகூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். ராசிநாதன் குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாற்ற வேண்டும் நினைத்திருந்தவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும், அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினையை தவிர்க்கவும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற பேச்சில் கவனம் தேவை, பொருளாதாரத்தில் தடைகள் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே இந்த மாதம் உங்கள் ராசிக்குள் சனிபகவான், இரண்டாம் வீட்டில் குரு, நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சூரியன், கூடவே சுக்கிரன், புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. ஐந்தாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும், வண்டி வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவும் பேச்சில் இனிமையும் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு அழகு சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும், வேலைப் பளு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசிக்குள் குரு பகவான் பயணம் செய்கிறார். மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரியன், சுக்கிரன், புதன், நான்காம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைக்காக வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், தலைமை அலுவகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சமயத்திற்கு தகுந்த படி பேசுவீர்கள் செய்யும் தொழிலில் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், மனதில் அமைதி அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும், ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மராமத்து வேலையை செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். வேலையில் உற்சாகம் பிறக்கும். புதிய வேலை கிடைக்கும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த மாதத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் சூடு உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். முன்னோர்கள் எழுதி வைத்த உயில் மூலம் பரம்பரை சொத்து கிடைக்கும்.

புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்.

சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புதிய வீட்டுக்கு மாறும் சூழல் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள்.

English summary
Chithirai Matha Rasi Palan From April 14th 2021 to May 14th 2021 prediction for Mesham, Rishabam, mithunam,katagam, simmam, kanni, thulam, viruchigam, dhanusu, makaram, kumbam, meenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X