For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்ராபௌர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய நாட்கள் என்னென்ன இருக்கு தெரியுமா

சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு தொடங்கி சித்ரா பவுர்ணமி, அட்சய திருதியை உள்ளிட்ட பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமாகும். சூரியன் மேஷத்தில் உச்சமடையும் காலம். இந்த மாதத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமடைகிறார். புதன் நீசபங்கமடைகிறார். மாத இறுதியில் உச்சமடைந்துள்ள சூரியனுடன் புதனும், சுக்கிரனும் கூட்டணி அமைக்கின்றனர்.

திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். சித்திரை மாதத்தில்தான் மகான்கள் அவதரித்துள்ளனர். சித்திரையில் சித்ர குப்தன் பிறந்துள்ளார். சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம்.

Chithirai month importance days

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.

சித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள் சித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்

சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கான விழா நடைபெறுகிறது.

Chithirai month importance days

சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரையில் இந்த மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சித்திரை முதல் நாள், ஏப்ரல் 14ஆம் தேதியன்று ஞாயிறு தமிழ் வருடப்பிறப்பு அன்று குல தெய்வத்தையும் சூரியபகவானையும் கனிவகைகளுடன் புதுப்பஞ்சாங்கம் வைத்து வழிபடலாம் நன்மைகள் நடைபெறும்.

சித்திரை 6 ஏப்ரல் 19ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமியன்று சத்ய நாராயண பூஜை செய்ய ஏற்ற நாள்.

சித்திரை 24, மே மாதம் 7ஆம் தேதி செவ்வாய்கிழமை அட்சய திருதியை அன்று தான தர்மங்கள் செய்ய புண்ணியம் பெருகும். தங்கம், வெள்ளி வாங்க நல்ல நாள்.

சித்திரை 26 மே 9ஆம் தேதி வியாழன் அன்று ஸ்ரீ சங்கரா ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி, இன்றைய தினம் ஸ்ரீ சங்கரரையும், ஸ்ரீ ராமானுஜரையும் வழிபட குரு தோஷங்கள் விலகும்.

இந்த மாதத்தில் முக்கிய முகூர்த்த நாட்கள்:

திருமணம், சீமந்தம், உபநயனம், வாசல்கால் வைக்க, மாங்கல்யம் செய்ய, புது வண்டி வாங்க, வித்யாரம்பம், தொழில் தொடங்க, கடன்வாங்க முக்கிய நாட்கள் உள்ளன. சித்திரை 4, 5,9,13,16,19,25,27 ஆகிய நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாம்.

அக்னி நட்சத்திரம் உள்ள நாட்களான சித்திரை 25,27 ஆகிய தேதிகளில் கிரக ஆரம்பம் வாசல்கால் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

சித்திரை 4,13,19 ஆகிய நாட்களில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

ஆபரேசன் செய்து குழந்தை பெற நல்ல நாட்கள்

சித்திரை 3,4,5,6,7,9,12,13,16,18,19,20,24,25,27,28,31 ஆகிய நாட்களில் ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

English summary
Chithirai month muhurtham date and auspicious time for wedding days.Chitra Purnima is also famous as Chitirai Purnima. It is primarily a Tamil festival that is observed on the Purnima during the month of Chitirai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X