For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வளம் தரும் சித்திரை மாத ராசி பலன்கள்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

சென்னை: சூரியன் மேஷ ராசிக்குள் புகும் நாள்தான், சித்திரை முதல்நாள். இதுவே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது.

சூரியன் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ ராசியில் உதயமாகும். இதுவே சித்திரை வருடப்பிறப்பு ஆகும்.

சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன.

சித்திரை மாதம் வரும் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில்தான் ராமர் பிறந்தார். அன்றைய தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச அவதாரம் செய்தார். அன்றைய தினம் மத்ஸ்ப ஜெயந்தியாக நடக்கிறது. சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான்.

சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திர புத்திரர் தோன்றினார். ஒவ்வொருவரின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக ஒருவரை, சித்திரம் போல் வரைந்தார் சிவபெருமான். அந்த சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்றவர் சித்திர புத்திரன். இவர் எமதர்மனின் கணக்கராக இருப்பதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சித்திரை மாதத்தில் 12 ராசிகளுக்கும் உரிய பலனைக் காண்போம்.

மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அம்பாள் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேச்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப் பிரசித்தம்.
அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர் மலையில் இருந்து புறப்பட்டு, ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும் அருள்பாலிப்பார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரை மாத ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

சித்திரை மாதம் கிரகங்களின் ராசி மாற்றம்

சித்திரை மாதம் கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 12ம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்:

மேஷம்:

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி தேடி வரும் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற விஷயங்களிலும் மின்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் தேவை. புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதி நுட்பம் அதிகரிக்கும் தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பில் மேன்மை உண்டாகும் பூர்வீக சொத்துகளில் பங்கு கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் மாதத்தின் பிற்பகுதியில் முக வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் வருமானம் உண்டாகும் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும் மனதில் சஞ்சலம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைத்தது எல்லாம் நடக்கும் தொழில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்:

ரிஷபம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்திவிடுவது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும் இயந்திர தொழில் சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் வெளிநாட்டு வியாபார தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் கல்வியில் மேன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும், மாதத்தின் பிற்பகுதியில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எண்ணை வியாபாரம் விருத்தியடையும் பணியாட்களின் நிலை சிறப்படையும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை பழுதுபார்க்கும் நிலை உண்டாகும் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் வெற்றி கிடைக்கும் சிறிய வகை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்:

மிதுனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் கூர்மையான் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் நினைப்பதெல்லாம் நடக்கும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாறும் நிலை உண்டாகும் வெளியூர் பயணம் செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சிறப்படையும் மாதத்தின் பிற்பகுதியில் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் அப்பாவுடன் சச்சரவு வேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் தகவல் தொடர்பு சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகளை பராமரிக்கும் நிலை உண்டாகும் குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள்.

கடகம்:

கடகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள் புது வீடுகட்டி குடுபுகுவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சம்பந்தப்பட்ட படிப்பு மேன்மையடையும் பலசரக்கு வியாபாரம் மேன்மையடையும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும் மாதத்தின் பிற்பகுதியில் ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பழைய பரம்பரை வீட்டை பராமரிப்பீர்கள் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் கோபத்தை தவிர்க்கவும் வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை.

சிம்மம்:

சிம்மம்:

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் நன்மை உண்டாகும் குல தெய்வ அருள் கடாட்சம் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை மாதத்தின் பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் உண்டாகும் அம்மாவின் ஆரோக்கியம் சிறப்படையும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் உறவு சிறப்படையும் வெளியூர் பயணம் செய்யும் நிலை உண்டாகும்.

கன்னி:

கன்னி:

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் தந்தையுடன் தகராறு செய்ய வேண்டாம். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து ஊருக்கு செல்வீர்கள் அண்ணன் தம்பிகளால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் கவனம் தேவை ஷேர் மார்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாடு நன்மைகளைத் தரும் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அந்நியோனியம் அதிகரிக்கும் மாதத்தின் பிற்பகுதியில் செலவுகளால் மன கஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும் சிறு தூர பயணம் உண்டாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.

துலாம்:

துலாம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்த தொழில் மேன்மையடையும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் பண வரவு அதிகரிக்கும் பேச்சில் கவனம் தேவை. புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் வியாபாரம் விருத்தியடையும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கௌரவம் அதிகரிக்கும் பணவரவும் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு வேண்டாம். மாதத்தின் பிற்பகுதியில் பெண்களால் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குதற்கமான பேச்சை தவிர்க்கவும் செல்வச் சேமிப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் மனதைரியம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

விருச்சிகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளை விரோதம் செய்து கொள்ள வேண்டாம் உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவை தவிர்க்கவும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாட்டை தவிர்க்கவும் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அழகு சாதன பொருட்கள் வாங்குவீர்கள் மாதத்தின் பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் பாரத்தையும் மன சஞ்சலத்தையும் தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபார நிறுவனத்தின் புதிய கிளையை துவக்குவீர்கள் நிறுவன விரிவாக்க நடவடிக்கையை மேற்கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள் வாகன யோகம் உண்டாகும்.

தனுசு:

தனுசு:

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வேலை வாய்ப்புக்கான தேர்வில் வெற்றி கிடைக்கும் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டை பராமரிப்பதற்காக செலவுகள் செய்வீர்கள் பூர்வீக சொத்து விற்கும் நிலை உண்டாகலாம். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபம் தரும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் அப்பாவின் மூலம் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் மாதத்தின் பிற்பகுதியில் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொடர்புகள் சிறப்பைத் தரும் விவசாய நிலங்களில் முதலீடு செய்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உருவாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நெருங்கிய உறவினர்களால் நன்மை உண்டாகும் வீடு மாறும் நிலை உண்டாகும்.

மகரம்:

மகரம்:

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் கோதுமை வியாபாரம் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் தொழில் மேன்மை அடையும் புதிதாக தொழிலுக்கு இயந்திரங்கள் வாங்குவீர்கள். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை குழந்தைகளின் விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்ளவும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும் மாதத்தின் பிற்பகுதியில் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியதெல்லாம் எளிதில் நிறைவேறும். தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விவாதத்தை தவிர்க்கவும் பண விஷயங்களில் கவனம் தேவை.

கும்பம்:

கும்பம்:

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு முறை பயணம் உண்டாகும் அரசுடன் செய்துகொண்ட தொழில் ஒப்பந்தம் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் மேன்மையடையும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்துசேரும் புத்தி கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் அந்தஸ்து உயரும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் மாதத்தின் பிற்பகுதியில் வெளியூர் பயணம் செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொட்டதெல்லாம் துலங்கும் எடுத்த காரியமெல்லாம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும் தகவல் தொடர்பு சிறப்படையும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும் மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.

மீனம்:

மீனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் பண வரவு கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் தன வரவு உண்டாகும் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் வசீகரம் அதிகரிக்கும் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் மாதத்தின் பிற்பகுதியில் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் துணிந்து எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பிரயாணம் செல்வீர்கள் தான தர்மம் செய்வீர்கள்.

English summary
Rasipalan for the Tamil Month of Chithirai April 14 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X