For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்ராபவுர்ணமி: தன்வந்திரி பீடத்தில் 468 சித்தர்கள் யாகம் - குடும்ப நல வேள்வி

By Staff
Google Oneindia Tamil News

வேலூர் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் 22-ஆம் ஆண்டு மஹேஸ்வர பூஜையுடன் 468 ஹோமகுண்டங்களில் 468 சித்தர்கள் யாகமும் ஜோதிடர்கள் குடும்பநல வேள்வியும் நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 468 குண்டங்களில் 468 சித்தர்கள் யாகம், ஸ்ரீசத்யநாராயண ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் நடைபெற்றது.

மஹா தன்வந்திரி ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஜோதிடர்கள் குடும்ப நல வேள்வி மற்றும் 22ஆம் ஆண்டு மகேஸ்வர பூஜை குரு அருளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறவும் யாகம் நடைபெற்றது.

சித்ரா பவுர்ணமி யாகம்

சித்ரா பவுர்ணமி யாகம்

குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி குழந்தை பாக்யம், போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கவும் யாகம் நடைபெற்றது.

சித்தர்களுக்கு பூஜை

சித்தர்களுக்கு பூஜை

இந்த யாகத்தில் பெற்றோர்களும், குழந்தைகளும் பங்கேற்றனர். பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் 468 சித்தர்களுக்கு கலசங்கள் கொண்டு பக்தர்களின் திருக்கரங்களால் மஹா அபிஷேகமும் நடைபெற்றது. ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் பக்தர்களுக்கு ஆசியுடன் அருட் பிரசாதம் வழங்கினார்.

மகா அபிஷேகம்

மகா அபிஷேகம்

பிற்பகலில் ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும் ஆன தந்தை ஸ்ரீமான் K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மகாஅபிஷேகமும் சப்தரிஷி பூஜையும் நடைபெற்றது.

ராகு கேது பூஜை

ராகு கேது பூஜை

மாலையில் இராகு-கேது அன்னாபிஷேகமும், இதில் எண்ணற்ற சாதுக்கள், சிவனடியார்கள், ஜோதிடர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து ஸ்ரீ மகா பெரியவா புகழ் பி.சுவாமிநாதன் அவர்களின் ஆன்மீக உரையும் நடைபெற்றது. இதில் துர்கா பவன் உரிமையாளர் திரு. உதயசங்கர், பிரபல ஜோதிடர் திரு. ஆதித்யகுருஜி, சென்னை ரமணா எண்டர்பிரைசஸ் திரு. குணசேகரன், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

English summary
Chitra pournami day 468 siddhar yagam with Saptha Rishi pooja on Danvantri arokiya peedam at Walajapet, Vellore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X