• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோர்வா இருக்கிறீர்களா? சுறுசுறுப்படைய பில்டர் காபி சாப்பிடுங்கள்!

By Staff
|

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

மகா பெரியவரின் நகைச்சுவை கதை:

காஞ்சிமகாப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப் பார்த்து, ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார். சீடரும், 'ஆச்சு' என்று தலையசைத்தார்.

coffee can help people feel less tired and increase energy levels

அதற்கு மகா பெரியவர், 'சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு நான் கேட்கலை... ஆச்சான்னு தான் கேட்டேன்" என்றார்.

சீடர் ஒன்றும் புரியாமல் குழம்பினார்.

மகா பெரியவர் சீடரிடம், "சுக்லாம் பரதரம் சொல்லு பார்ப்போம்" என்றார்.

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்

சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்

சர்வ விக்னோப சாந்தயே" என்று சீடர் சொன்னார்.

மகா பெரியவர், "இதற்கு அர்த்தம் தெரியுமோ?" என்று கேட்டார்.

"தெரியும்" என்று பதிலளித்த சீடர், ''வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லா தடைகளும் கவலைகளும் நீங்கும்,'' என்றார்.

"இதற்கு வேறொரு அர்த்தமும் இருக்கு... அது உனக்குத் தெரியுமோ? என்று சொல்லி சிரித்தார்.

"சுக்லம்' என்றால் 'வெள்ளை'... அதாவது பால்;

'விஷ்ணும்' என்றால் 'கருப்பு' அதாவது 'டிக்காஷன்';

'சசிவர்ணம்' என்றால் கருப்பும், வெள்ளையும் கலந்தது...

அதாவது காபி; 'சதுர்புஜம்' என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக் கொடுக்க, மாமாவின் இரு கைகள் அதைப் பெற்றுக் கொள்ளும். 'த்யாயேத்' என்றால் 'நினைத்தல்'. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது. பிரசன்ன வதனம்' என்றால் 'மலர்ந்த முகம்' அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின் முகம் மலர்ந்து விடும்.

'சர்வ விக்னோப சாந்தயே' என்றால் 'எல்லா கவலையும் நீங்குதல்'. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி மனம் சாந்தமாகி விடும்.

'சுக்லாம் பரதரம் ஆச்சா?' என்பதில் 'காபி குடிச்சாச்சா' என்பதும் அடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட சீடர்கள் தங்களை மறந்து சிரித்தனர்.

காபியின் பாரம்பரியம்:

தமிழநாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பிராமணர்கள் காலையில் கண்விழிப்பதே காபியின் முகத்தில்தான்.

காலையில் ஒருமுறை - மதியம் ஒருமுறை சுட சுடகாபி உள்ளை சென்றால்தான் வேலையே ஓடும். அதிலும் ஆண்களுக்கு பயித்தியமே பிடித்துவிடும். காபி ...அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.

எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும். அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.

காபி போடுவது என்பதே ஒரு தனிக்கலை. அது எல்லொருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை பெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு. அளவாக சர்க்கரை போட வேண்டும் ஒரு மிதமான கசப்பு தான் அதன் தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.

ஜோதிடமும் காபியும்:

கும்பகோணம் டிகிரியில் தொடங்கி ஸ்டார்பக்ஸ் எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் பீத்தோவன், பெஞ்சமின் ப்ராங்களின் பல ஜீனியஸ்கள் கூட காபி பைத்தியங்களாக இருந்தது தெரிகிறது. காபி குடித்தால் உற்சாகம் பொங்குகிறது. மனம் புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுறுசுறுப்பு அடைகிறது.

இதற்கெல்லாம் யாருங்க காரணம்? மங்கள செவ்வாயதாங்க காரணம்.

காலபுருஷ ராசியில் மேஷம் தலை, மூளை, ஆத்மா ஆகியவற்றை குறிக்கிறது. அதன் அதிபதிதான் காபி எனும் அற்புத பானத்தின் காரகர் ஆவார்.

காபியை தனியாக கருப்பு காபியாகவும் குடிப்பார்கள். அவ்வாறு குடிக்கும்போது செவ்வாய் தனித்த காரகம் பெறறுவிடுவார். ஆனால் பால் சேர்த்த காபியை பொருத்தவரை சந்திர மங்கள யோகத்தை தரும் செவ்வாய்-சந்திரன் இருவரும் காரகம் பெருகின்றனர்.

காபி யார் அதிகம் குடிப்பார்கள்?

1. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் எல்லோரும் அதிக காபி பிரியர்களாக இருப்பார்கள் என ஆய்வு கூறுகிறது. மேஷராசியை லக்னமாகவோ அல்லது சந்திர ராசியாகவோ கொண்டவர்கள் காபி அதிகம் பருகுவது ஆய்வில் தெரியவருகிறது.

2. மேஷத்தை லக்னதாக அல்லது ராசியாக கொண்டு செவ்வாய் அங்கு ஆட்சி பலமும் பெற்றுவிட்டால் அவர்கள் காபிக்காக உயிரை கூட கொடுப்பார்கள்.

3. விருச்சிகத்தை லக்னமாகவோ அல்லது ராசியாகவோ கொண்டவர்கள் மற்றும் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றவர்கள் கடும் காபி எனப்படும் பால் சேர்க்காத காபி பிரியர்களாக இருக்கிறார்கள். பாலை குறிக்கும் சந்திரன் இங்கு நீசமடைந்துவிடுவதால் பாலை சேர்பதில்லை போலும்.

4. ஜாதகத்தில் குரு சந்திர சேர்க்கை பெற்றவர்கள், குரு வீட்டில் செவ்வாய், செவ்வாயின் வீட்டில் குரு என பரிவர்தனை பெற்றவர்கள், குரு சாரத்தில் செவ்வாய் நிற்க்க பெற்றவர்கள், குருவீட்டில் சந்திரன் நின்று செவ்வாய் பார்வையால் சந்திர மங்கள யோகம் பெற்றவர்கள் ஓரிரு முறை காபி குடித்தாலும் சுவை சிறிதும் குறையாத பில்டர் காபி பிரியர்களாக இருக்கிறார்கள்.

5. மீன லக்னம், துலா லக்னம் ஆகியவற்றிர்க்கு போஜன ஸ்தானாதிபதியாக செவ்வாய் அமைந்து ஆட்சி உச்சம் பெறுவது அல்லது லக்னத்திலேயே நிற்பது போன்றவை சுவையான காபியின் அடிமைக்கு ஆதாரமாகும்.

6. காற்று ராசிகளான மிதுன, துலாம், மற்றும் கும்ப ராசியில் செவ்வாய் நிற்க் பெற்றவர்கள் நுறை ததும்பும் காபியின் பிரியர்களாக இருப்பார்கள்.

7. சனியின் மகரத்தில் சுக்கிர சேர்கை பெறாமல் செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் சுவையை பற்றியெல்லாம் கவலை படாமல் காபி என்று ஏதோ ஒன்றை குடித்துக்கொண்டே இருப்பார்கள்.

8. ராகுவோடு செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் கப்பிச்சினோ, எக்பிரஸோ என விதவிதமாக காபி குடிப்பார்கள். சுக்கிர சேர்க்கையும் பெற்றுவிட்டால் ஐஸ் காபியை விரும்பி குடிப்பார்கள்.

9. மேஷத்தில் உச்ச சூரியனோடு செவ்வாய் இருக்க பெற்றவர்கள், சிம்மத்தில் செவ்வாய் நிற்க்க பெற்றவர்கள் பித்தளை டம்ளரில் காபி குடிக்கும் பிடிவாத காரர்கள் ஆவர்.

 
 
 
English summary
Tamil Brahmins created utensils that would accommodate their notions of purity. Coffee was served in metal tumblers with rims, so that it could be drunk without sipping and thereby reducing the risk of pollution. The attributes of good coffee, also referred to as ‘degree coffee’ included no chicory, cow’s milk (not buffalo milk, which was seen as a sign of cultural and moral degeneration), and was to be savoured at frequent intervals in small tumblers (not large ones), at a temperature that could be gulped down without burning the tongue. Remember that the right way to drink coffee was to tilt one’s head, raise an arm and pour coffee into the mouth from at least a foot away to avoid the risk of the lips touching the rim.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X