For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்

புதிய வைரஸ் ஒன்று உலகம் முழுவதும் பரவும் என்று எட்டு மாதத்திற்கு முன்பே கணித்திருக்கிறார் அபிக்யா ஆனந்த் என்கிற ஜோதிட சிறுவன்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஊறடங்கு அறிவித்தும் யாரும் அதை கேட்டு அடங்கி இருப்பதாக தெரியவில்லை. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ். இந்த வைரஸ் பற்றி கடந்த ஆகஸ்ட் மாதமே கணித்திருக்கிறார் ஒரு இந்திய சிறுவன், அவரது பெயர் அபிக்யா ஆனந்த். உலகத்தில் புதிய வைரஸ் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கும் என்றும் இந்த வைரஸ் பாதிப்பு 2020 ஏப்ரலில் தீவிரமடையும் என்றும் மே மாதம் 29ஆம் தேதி முடிவுக்கு வரும் என்றும் கணித்திருக்கிறார்.

Recommended Video

    வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு - வைரல் வீடியோ

    அபிக்யா கணித்தது போலவே சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் தனது கோர முகத்தை வெளிக்காட்டி வருகிறது உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் இதற்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் உலகம் முழுவதும் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.

    இந்த வைரஸ் பற்றி கணித்த அபிக்யா ஆனந்த் மீண்டும் தனது யுடுயூப் சேனலில் பேசியிருக்கிறார். அதாவது மார்ச் 29 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை கிரகங்களின் கூட்டணி சேர்க்கை மற்றும் பார்வையால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாகும் என்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் அபிக்யா ஆனந்த். ஏன் இந்த பாதிப்பு என்று கேட்பவர்களுக்கு அனைவருக்கும் புரியும் விதமாகவே நாம் சொல்வோம்.

    குரு பெயர்ச்சி

    குரு பெயர்ச்சி

    கடந்த நவம்பர் மாதம் குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அந்த ராசியில் ஏற்கனவே சனியும் கேதுவும் இணைந்திருக்க கூடவே குரு தனது வீட்டிற்குள் சென்று சனி கேது உடன் இணைந்தார். அப்போது ஆரம்பித்தது ஆட்டம். நவம்பர் 30ஆம் தேதி தனுசு ராசியில் சந்திரன், சுக்கிரன் குரு, கேது, சனி ஆகிய ஐந்து கிரகங்கள் இணைந்தன. பின்னர் சுக்கிரன் ஒருவழியாக இடப்பெயர்ச்சி அடைந்தாலும் டிசம்பர் மாதத்தில் அதே தனுசு ராசியில் சூரியன், சனி, கேது, குரு, சந்திரன், புதன், ஆகிய ஆறு கிரகங்கள் இணைந்தன.

    கிரகண சேர்க்கை

    கிரகண சேர்க்கை

    இந்த காலகட்டத்தில்தான் சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. ஏற்கனவே தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை பற்றி பலமுறை எச்சரித்து நாம் பல பதிவுகளை போட்டிருக்கிறோம். அதே போலவே அபிக்யா ஆனந்தும் தனது ஜோதிட ஆய்வின் படி நவம்பரில் வைரஸ் பாதிப்பு உலகத்தை பீதியடைய வைக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.

    சனி, குரு, செவ்வாய்

    சனி, குரு, செவ்வாய்

    இன்றைய தினம் திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் அதிசாரமாக மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இது சனியின் வீடு. குரு பகவான் நீசம் பெறும் வீடு. ஏற்கனவே இந்த வீட்டில் சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க, அதே நேரத்தில் செவ்வாயும் இணைந்துள்ளார். மகரம் ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் இணைந்துள்ளது உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார் அபிக்யா ஆனந்த்.

    கவனம் அதிகம்

    கவனம் அதிகம்

    மார்ச் 31ஆம் தேதி சந்திரன் மிதுனம் ராசியில் நுழைகிறார். மாலையில் திருவாதிரை நட்சத்திற்குள் நுழையும் சந்திரன் அங்கு ஏற்கனவே இருக்கும் ராகு உடன் சஞ்சரிக்கப்போகிறார். சந்திரன் வேகமாக நகரும் கிரகம். ராகுவும் வேகமாக நகரும் கிரகம். சந்திரன் தண்ணீர் கிரகம். ராகு காற்றைப் போல வேகமாக செல்பவர். அசுர முகமும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, அசுர உடலும் பாம்பு முகமும் கொண்டவர் கேது. சந்திரன் ராகு ஒரே ராசியில் சஞ்சரிக்க தனுசு ராசியில் இருந்து கேதுவின் பார்வையும் படுகிறது.

    நோய் பாதிப்பு அதிகம்

    நோய் பாதிப்பு அதிகம்

    இந்த கிரகங்களின் சேர்க்கை பார்வையால் சளி தொந்தரவுகள் அதிகமாகும். ராகுவினால் இந்த பாதிப்புகள் எளிதாக மக்களுக்கு பற்றி பரவும் என்று கூறியுள்ளார் அபிக்யா ஆனந்த். மார்ச் 29 இரவு முதல் ஏப்ரல் 2 வரையிலான காலகட்டத்தில் நோய் தாக்குதல் அதிகமாகி பரவும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே நல்லது என்கிறார் அபிக்யா ஆனந்த்.

    எந்த மாநிலங்களில் பாதிப்பு

    எந்த மாநிலங்களில் பாதிப்பு

    இந்த கிரகங்களின் சேர்க்கையால், ஆந்திரா, ஒரிஸா, நாட்டின் வடகிழக்கு பகுதிகள், வடமேற்கு பகுதிகளில் மிக அதிகமான பாதிப்பு இருக்கும் என்றும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மக்கள் துளசியை அடிக்கடி சாப்பிடுங்க. சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பது நல்லது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் மஞ்சள், இஞ்சி, வேப்பிலை சேர்த்து ஆவி பிடிப்பது சளி தொந்தரவுகள் தாக்காமல் காக்கும் என்றும் கூறியுள்ளார் அபிக்யா ஆனந்த்.

    இந்திய பொருளாதாரம்

    இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் மே 29ஆம் தேதிவரை அதிகமாக இருக்கும் என்றும் அதன்பின்னர்தான் மருந்துகளுக்கு கட்டுப்படும் என்றும் கணித்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலினால் அதளபாதாளத்திற்கு போன இந்தியாவின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான் மீண்டு எழும் என்றும் கணித்திருக்கிறார். மக்களே வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டிற்குள்ளே இருப்பதுதான் அனைவருக்கும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

    English summary
    An Indian boy 14 year old name Abighya Anand has predicted that the world will enter into a tough phase starting November 2019 to April 2020 on his YouTube channel conscience. At the height of it all will be March 31st which will mark the climax of this state, with the world looking tense.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X