• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிம்ம ராசிக்காரர்களே... எந்த வம்பு தும்புக்கும் போகாதீங்க - இன்றைய பலன்கள்

|

சென்னை: சந்திரனின் சஞ்சாரம் இன்றைக்கு மீனம் ராசிக்குள் இருக்கிறது. மனக்குழப்பத்துடன் இருந்தாலும் கவனமாக இருக்கவும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்களைப் பார்க்கலாம்.

மிதுனத்தில் சூரியன், கடகம் ராசியில் புதன், ராகு, சிம்ம ராசியில் சுக்கிரன், துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், மகரம் ராசியில் கேது செவ்வாய், மீனம் ராசியில் சந்திரன் என இன்றைக்கு கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இன்றைய தினம் சீமந்தம் செய்ய, புது வண்டி வாங்கலாம், தோஷ பரிகாரம் செய்யலாம். ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம். காது குத்தலாம். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால் எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 3, 9.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் நீடிப்பதால் வேற்றுமதத்தவர் உதவுவார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடப்பது வெற்றி பெற உதவும். அலைச்சல் ஏற்படலாம். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண்கள் 3, 6.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். தம்பதிகளிடையே இருந்த இடைவெளி குறையும். ராசியான நிறம் நீலம், ஆரஞ்சு ராசியான எண்கள் 6, 9.

கடகம்

கடகம்

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். இன்று திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். ராசியான நிறம் நீலம், பச்சை, ராசியான எண்கள் 2, 7.

சிம்மம்

சிம்மம்

இன்று 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் வாயை விட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்படும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். காதலன் அல்லது காதலியிடம் கவனமாக பேசவும். வீட்டிலும், வெளியிடத்திலும் இன்று மவுனமாக இருக்கவும். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 3, 5. இன்றைக்கு சுமாரான நாள்தான். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதி தரும்.

கன்னி

கன்னி

ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரன் சம சப்தம பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார். திருமணம், காதல் வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத இனிமையான நாளாகும். இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை ராசியான எண்கள் 1, 9.

துலாம்

துலாம்

ராசிக்கு 6 வது இடத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் இன்று கவனமாக இருக்கவும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த வேலைகளை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண்கள் 4, 6.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் இருப்பதால் குழந்தைகளின் உடல்நலனில் அக்கறையும் கவனமும் தேவை. இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 3, 5.

தனுசு

தனுசு

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தவர்களால் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வண்டி வாகனங்களை பராமாரிக்கும் செலவு ஏற்படும். ராசியான நிறம் வெள்ளை, பிரவுன் ராசியான எண்கள் 2, 6.

மகரம்

மகரம்

ராசிக்கு 3வது வீட்டில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளார் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் வெற்றி ஏற்படும். சிறு பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும் இன்று உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். செவ்வாய் ராசியில் அமர்ந்துள்ளதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, வெளிர் பச்சை ராசியான எண்கள் 1,5.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணம் வரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, ராசியான எண்கள் 3, 5.

மீனம்

மீனம்

ராசிக்குள் இன்று சந்திரன் அமர்ந்துள்ளார் மனக்குழப்பம் ஏற்படும் எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். எதை பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பண பிரச்சனை தீரும் என்றாலும் சந்திரனின் சஞ்சாரத்தால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். ராசியான நிறம் வெள்ளை, சிவப்பு ராசியான எண்கள் 6, 9.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Today's Horoscope, Daily Horoscope for Thursday, July 5, 2018. Daily Horoscope and daily Zodiac sign based astrology readings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more