For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மார்கழி மாதத்தின் சிறப்புகள்

Google Oneindia Tamil News

ஜோதிடவியலில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாக கூறப்படுகிறது. சூரியன் தனுசுராசியில் சஞ்சரிப்பது மார்கழி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரம் என கருதப்படுகிறது.

குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் சூட்டுவது மரபு என்றாலும் மார்கழி மாதம் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு செல்லப் பெயராக வாசுதேவன் என்றும் பெண் குழந்தைகளுக்கு செல்லப் பெயராக வாக்தேவி என்றும் பெயர் சூட்டலாம் என சில நூல்கள் குறிப்பிடுகின்றன.

Danur masam of the Hindu calendar Margazhi

மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ணன் கூறுகிறார், அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த மாதமான மார்கழி மாதத்தின் விசேஷ நாட்களை தெரிந்து கொள்ளலாம்.

மார்கழி 1ம் தேதி 16-12-2014 செவ்வாய் கிழமை ஆலய தனுர் மாத பூஜை ஆரம்பம். திருமணமாகாத பெண்கள் இன்று முதல் இம்மாதம் முழுவதும் தினசரி பெருமாள் கோயிலுக்கு சென்று தினமும் ஒரு பாசுரம் வீதமாக திருப்பாவை படித்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

மார்கழி 6ம் தேதி 21-12-2014 ஞாயிறு கிழமை அனுமன் ஜெயந்தி. இன்று சிறிய திருவடியான ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமாக அனைத்து துன்பங்களையும் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

மார்கழி 7ம் தேதி 22-12-2014 திங்கள் கிழமை இன்று மூலம் நட்சத்திரம். இன்று சிறிய திருவடியானஆஞ்சநேயரை அபிஷேகம் செய்து வெண்ணெய் மற்றும் வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் ஜாதகத்தில் மூலம் நட்சத்திர தோஷம் நிவர்த்தியாகும்.

மார்கழி 13ம் தேதி 28-12-2014 ஞாயிறு கிழமை பானு சப்தமி - விஜய சப்தமி. இன்று சூரியனை வழிபடுவதற்கும், முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்து வழிபடுவதற்கும், யாகங்கள், ஹோமங்கள் செய்வதற்கு உகந்த நாள்.

மார்கழி 17ம் தேதி 01-12-2015 வியாழன் கிழமை வைகுண்ட ஏகாதசி. இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டு பரமபத வாசலை கடந்தால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறும்.

மார்கழி 20ம் தேதி 04-01-2014 ஞாயிறு கிழமை லவண தானம்.
இன்று உப்பு தானம் செய்தால் தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்

மார்கழி 20ம் தேதி 04-01-2014 ஞாயிறு கிழமை ஆருத்ரா அபிஷேகம். இன்று இரவு சிவன் கோயிலுக்கு சென்று நடராஜரை அபிஷேகம் செய்து வழிபட்டால் பாபங்கள் விலகும்.

மார்கழி 21ம் தேதி 05-01-2014 திங்கள் கிழமை ஆருத்ரா தரிசனம். இன்று சிவன் கோயிலுக்கு சென்று நடராஜரை வழிபடுவது தோஷங்கள் நீங்கும்.

மார்கழி 21ம் தேதி 05-01-2014 திங்கள் கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று பெரிய திருவடியான கருடாழ்வாரை வழிபட்டால் புதிய வாகனம் வாங்கும் யோகமும் நிலம் வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

மார்கழி மாதத்தில் பொதுவாக சுப முகூர்த்தங்கள் கிடையாது. வாஸ்து பூஜையும் கிடையாது.

English summary
The month of Margazhi (Margasirsh in Sanskrit) or Danur masam of the Hindu calendar is considered extremely holy. Shivas ArudraDarshan comes in this month. Vaikunda Ekadasi comes in this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X