For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி வெள்ளியில் முழு சந்திர கிரகணம் : நூற்றாண்டின் மிக நீண்ட சிவப்பு நிலா

ஆடி 11ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமையன்று சந்திர கிரஹணம் ஏற்பட உள்ளது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட ரத்த சிவப்பு நிலவாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட ரத்த சிவப்பு நிலா வரும் வெள்ளிக்கிழமை வானில் தோன்றுகிறது. இந்த முழு சந்திர கிரகண நாளில்

பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி ஆடி வெள்ளிக்கிழமையன்று வானில் சூப்பர் தோன்ற உள்ள பிளட் மூன் மிக நீண்ட நேரம் மக்களுக்கு காட்சியளிக்கும். இந்த ஆண்டிலேயே ரத்தச் சிவப்பு நிலா தோன்றப் போவது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஒருமுறை பிளட் மூன் வந்து போனது. அன்று வரும் சூப்பர்மூன் தான் இந்த நூற்றாண்டில் மிக அதிக நேரம் வானில் தோன்றும் ப்ளட் மூன் என்னும் சிறப்புக்குரியது. இதற்கு முன்பு வந்தது 58 நிமிடங்கள் 58 நொடிகள் வானில் இருந்தது. ஆனால் இப்போது வரப்போகும் சூப்பர் மூன் அதிக நேரம் வரை வானில் இருக்கும்.

வானிலே சிவப்பு நிலா

வானிலே சிவப்பு நிலா

ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஜூலை 27ஆம் தேதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் நன்றாக தெரியும் என்பதால் அனைவரும் பார்க்கலாம். உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கக் கூடாது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம்

இரவு 11.53 க்கு தொடங்கும் கிரஹணம் நள்ளிரவு 12.59க்கு முழு கிரஹணமாக வானில் நீடிக்கிறது. முழு கிரஹண மத்தி ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 1.51வரை நீடிக்கிறது. நள்ளிரவு 2.43க்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 கிரகணம் முடிந்த பின் குளிக்கவும்

கிரகணம் முடிந்த பின் குளிக்கவும்

வழக்கத்தை விடவும் அதிக நேரம் இந்த முறை சந்திர கிரகணம் இருக்கும் என்பதனால், இது மற்ற கிரகங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக சந்திர கிரகணம் மற்ற கிரகங்களைப் பாதிக்கும் என்பதால் இயல்பாகவே அதன் பாதிப்பு நமக்கும் இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட ராசிகளை சந்திர கிரகணம் பாதிக்கும். அதனால் தான் பொதுவாக சந்திர கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்துப் பின், சாப்பிட வேண்டும் என்றும் காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம்.சந்திர கிரகணம் முடிந்த பின்னர் ரிஷபம், சிம்மன், கன்னி, மகரம், கும்பம், ஆகிய ராசிகளில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்

 எந்த நட்சத்திரக்காரர்களுக்கு பாதிப்பு

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு பாதிப்பு

இந்த முறை வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி நிகழப் போகின்ற சந்திர கிரகணத்தில் சில குறிப்பிட்ட ராசிகள் மட்டுமே அதிகமாகப் பாதிப்படையப் போகின்றன. அதிலும் குறிப்பாக, பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிக அதிகமாக இந்த சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று ஜோதிடர்களால் கணிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் ரிஷபம், சிம்மன், கன்னி, மகரம், கும்பம், ஆகிய ராசிகளில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்

English summary
Experts Said, Deep Red Blood Moon on July 27 to be the 'longest lunar eclipse of the century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X