For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து அசைவ உணவு சாப்பிடுவது ஏன்

தீபாவளி பண்டிகை இதோ அதோ என்று பக்கத்தில் வந்தாச்சு. புத்தாடை, பட்டாசு, பலகாரம் வீடு நிறைய சொந்தங்கள் உறவுகள் என நிறைந்துள்ளனர். நல்லெண்ணெய் குளியல் போட்டு சாமிக்கு படையல் போட்டு மட்டன் சாப்பிட ஆரம்பித

Google Oneindia Tamil News

Recommended Video

    தீபாவளியில் நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அவசியம் என்ன ?

    சென்னை: தீபாவாளி பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை பட்டாசு பலகாரம்தான். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை, பலகாரம் வைத்து சாமிக்கு படைத்து அதை அணிந்து கொண்டு சுடச்சுட கறிக்குழம்பு ஊற்றி இட்லி சாப்பிடுவது என தமிழகத்தில் பல குடும்பங்களின் பழக்கமாக உள்ளது. ஆனால் தீபாவளி நாளில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதற்கான காரணத்தையும் பட்டியலிட்டுள்ளனர் படியுங்கள்.

    தீபாவளி நாளில் நரகாசூரனை மகிழ்விக்க நல்லெண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணியவேண்டும் என்பது மரபு. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் நல் எண்ணெய்யில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதன் மூலம் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் எழுந்தருள்கிறார் என்பது ஐதீகம்.

    தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் கிடைக்கும். வெந்நீரில் கங்கை எழுந்தருள்கிறார் என்பதால்தான் அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என்கின்றனர்.

    தீபம் ஏற்றுவோ

    தீபம் ஏற்றுவோ

    தீபாவளி என்பது தீபங்களின் வரிசை எனவேதான் தீபாவளி அன்று நம் வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். இதன்மூலம் நம் வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.

    மகாலட்சுமி வழிபாடு

    மகாலட்சுமி வழிபாடு

    தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விலக்குகளை ஏற்றி வழிபாடு செய்வதனால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.

    முன்னோர்களுக்கு படையல்

    முன்னோர்களுக்கு படையல்

    தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தபிறகு புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் நம் வீட்டிற்குள் வருவதாக ஐதீகம். வீட்டில் செய்த பண்டங்களை சாமிக்கு நிவேதனமாகப் படைக்கவேண்டும். புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடம் வீட்டுப் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் சிறப்புமிக்கது.

    கணவன் மனைவி ஒற்றுமை

    கணவன் மனைவி ஒற்றுமை

    தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். தீபாவளி நாளில் கேதார கொளரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

    அசைவ உணவு

    அசைவ உணவு

    தீபாவளியை வட இந்தியாவில் விளக்கை ஏற்றி மூன்று நாட்கள் தீப ஒளி திருநாள் அனுசரிப்பார்கள். சில மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு நாளில் முடிந்து விடுகிறது. நல்லெண்ணெய் குளியல் முடித்து புத்தாடை அணிந்து கொண்டு அசைவ உணவு சாப்பிடுவார்கள். மகாலட்சுமி வீட்டிற்கு வரும் அந்த நல்ல நாளில் அசைவம் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.

    விரதநாட்களில் அசைவம் கூடாது

    விரதநாட்களில் அசைவம் கூடாது

    பொதுவாகவே சில திதிகள் வரும் நாட்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. சதுர்த்தி, ஏகாதசி, தமிழ் புத்தாண்டு, திருக்கார்த்திகை, தை பொங்கல், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் அசைவம் தவிர்க்க வேண்டும் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

    அமாவாசை

    அமாவாசை

    தீபாவளி திருநாள் என்பது ஐப்பசி மாத அமாவாசையில் வரும். நீச்ச சூரியன் அமாவாசை சந்திரனோடு பலம் குறைந்து கடும் பகைவரான சுக்கிரன் வீட்டில் இருப்பார்கள். ஜோதிட ரீதியாக சூரிய சந்திரர்களே தாய் தந்தை ஆகியோருக்கு காரகம். அவர்களே பிற கிரகங்களுக்கு தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து ஒளியை வழங்குகிறார்கள். தீபாவளி அன்று சூரியன் நீச்சனாகவும் சந்திரன் பூரண இருள் பொருந்திய அமாவாசை சந்திரனாகவும் இருப்பார்கள்.

    தீபாவளியில் விளக்கு

    தீபாவளியில் விளக்கு

    அதாவது ஒளியை கொடுக்கும் கிரகங்கள் பலம் குறைந்து இருள் கிரகங்கள் பலம் பெற்று காணப்படும்.அதனால் தான் தீபாவளி அன்று கிருஷ்ணர் சத்யபாமாவின் துணையுடன் நரகாசுரன் அழித்தார் என்கிறது புராண கதை. எனவேதான் அன்றைய தினம் இறைவனை வழிபட்டு நன்மைகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தீபாவளி திருநாள் கொண்டாடுகிறோம்.

    குல தெய்வ வழிபாடு

    குல தெய்வ வழிபாடு

    தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடும் அதே சமயம் அசைவம், மது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. அது அனைத்தும் ராகுவின் இயல்பாகும். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, ஆலயம் செல்வதன் மூலம் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

    பிரியாணி போட்டே ஆகணும்

    பிரியாணி போட்டே ஆகணும்

    தீபாவளி நாளில் அசைவ உணவு இல்லாமல் எப்படி என்று இளைஞர்களும், சிறுவர்களும் கேட்பார்கள். மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, போன்லெஸ் ப்ரை, மீன் பொறியல் முட்டை அவியல் என பல ஐயிட்டங்களை கலந்து கட்டி சாப்பிடுவார்கள். கூடவே டிவியில் சிறப்பு திரைப்படங்களும் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதுதான் தீபாவளியின் சிறப்பம்சமாகிவிட்டது. உங்க ஊர்ல தீபாவளி எப்படி கொண்டாடுவீங்க எங்களுக்கும் கொஞ்சம் எழுதுங்க.

    English summary
    Hindus do not eat non vegetarian food like chicken, meat or fish or any other Non Vegs Chaturthi, Ekadashi, Gudhipadwa, Akshaytrutiya, Diwali Deepavali, the entire family takes oil bath first. Then we burst some firecrackers, go to the temple. Then, I make something really special like Chicken Biryani, Mutton Curry or cutlets. It is very important for us to eat non-vegetarian food on the Diwali day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X