For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு காலத்திற்கு முன் மராட்டிய முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் - அதிசயம் நிகழ்த்திய ஜாதகம்

அரசியலில் எதுவும் நடக்கலாம் அதிசயம் நடக்கலாம் என்பார்கள். மகாராஷ்டிராவில் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 12 மணிநேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக தேசிய வாத கா

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    சென்னை: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம். இரவு வரை உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என்று கூறி வந்தார்கள். முதல்வர் கனவோடுதான் உத்தவ் தாக்கரே உறங்க போயிருப்பார், ஆனால் திடீர் திருப்பமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகியுள்ளார் அவரை முதல்வர் பதவியில் அமர்த்தியவர் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார்தான். உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என்று சொன்ன சரத்பவார்தான் தேவேந்திரா பட்னாவிஸ் முதல்வராக காரணமாக இருந்துள்ளார். அவரது அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆட்சி அமைக்க நேரடியாக மறைமுக பேச்சுவார்த்தைகள் பல இடங்களில் நடந்தாலும் தேவேந்திர பட்னாவிஸ் ஜாதகம் இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது.

    சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு மாதம் நடந்த பின்னரும் மகாராஷ்டிரா அரசியல் களம் படு பரபரப்பாகவே காணப்பட்டது. கூட்டணி அமைத்து போட்டியிட்டு 105 இடங்களை வென்ற பாஜகவும் 56 இடங்களை வென்ற சிவசேனாவும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. காரணம் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற உத்தவ் தாக்கரேயின் ஆசைதான். அவரது ஆசையை ஒதுக்கி தள்ளியது பாஜக.

    இதனால் பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. கர்நாடகாவில் நடந்தது போல காங்கிரஸ் கட்சி உள்ளடி வேலையை தொடங்கியது. பாஜகவை வீழ்த்தவும் ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் தடுக்கவும் பரம வைரியான சிவசேனாவிற்கு ஆதரவு தர முடிவு செய்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையே குடியரசுத்தலைவர் ஆட்சியும் மகராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டது.

    முதல்வராக வேண்டும் என்று முழு மூச்சுடன் இறங்கிய சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து பேசினார். இறங்கியும் பேசினார். சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியானதாகவே கருதப்பட்டது. உத்தவ் தாக்கரேதான் முதல்வராவார் என்று சரத்பவார் நேற்றிரவு அறிவித்தார். முதல்வராக பதவியேற்கும் கனவோடு உறங்கப்போனார் உத்தவ் தாக்கரே. விழித்து எழுந்த நேரத்தில் காட்சி மாறி ஆட்சியும் மாறிவிட்டது.

    முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

    முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

    மராட்டிய அரசில் திடீர் திருப்பமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்று காலையில் பொறுப்பேற்றது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

    எல்லாம் கணக்குதான்

    எல்லாம் கணக்குதான்

    ஆட்சியமைப்பதற்கு 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் 105 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்கள் இணைந்து தற்போது ஆட்சியமைத்துள்ளன. ஒரே இரவில் அதிசயம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஜாதகம் உதவி செய்துள்ளது.

    தேவேந்திர பட்னாவிஸ் ஜாதகம்

    தேவேந்திர பட்னாவிஸ் ஜாதகம்

    தேவேந்திர பட்னாவிஸ் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தால் அவர் கடக லக்னம், லக்னத்தில் சூரியன், செவ்வாய், புதன் கும்ப ராசியில் சந்திரன், கூடவே ராகு, சிம்மத்தில் கேது சுக்கிரன், துலாம் ராசியில் குரு, மேஷ ராசியில் சனி. இவரது ஜாதகத்தில் செவ்வாய் நீசம், சனி நீசம்
    நீசம் பெற்ற செவ்வாய் லக்னத்தில் சூரியன் புதனோடு இணைந்து நீசபங்கமாகியிருக்கிறார். நீசம் பெற்ற சனிக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. செவ்வாய் ஐந்தாம் அதிபதி பத்தாம் அதிபதி, இரண்டாம் அதிபதி சூரியன், மூன்றாம் அதிபதி, 12ஆம் அதிபதி புதனோடு இணைந்து லக்னத்தில் இருக்கிறார். கேம துரும யோகம் பெற்றிருந்தாலும் கும்ப ராசியில் உள்ள சந்திரனை ஒன்பதாம் அதிபதி குரு துலாம் ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக பார்வையிடுகிறார். இதனால் இது ராஜயோக அமைப்பை பெற்றுள்ளது.

    யோகம் செய்த செவ்வாய்

    யோகம் செய்த செவ்வாய்

    1970 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி நாக்பூரில் பிறந்திருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். பிறக்கும் போது வியாழ மகாதிசை 15 ஆண்டுகள் இருக்கிறது. 1986ஆம் ஆண்டு வரை வியாழ திசை முடிந்து சனி திசை தொடங்கியுள்ளது. 1999 ஆண்டு சனி தசை செவ்வாய் புத்தியில் தேவேந்திர பட்னாவிஸ் அரசியல் வளர்ச்சி தொடங்குகிறது. 2007 ஆம் ஆண்டு புதன் திசை தொடங்குகிறது. 2014ஆம் ஆண்டு புதன் திசை செவ்வாய் புத்தி நடைபெறும் போது மராட்டிய மாநில முதல்வராக பதவியேற்றார். இங்கேதான் செவ்வாய் யோக காரகராக செயல்பட்டு அவரை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியுள்ளார்.

    ராகு காலத்திற்கு முன் பதவியேற்பு

    ராகு காலத்திற்கு முன் பதவியேற்பு

    2019 அக்டோபர் முதல் புதன் திசை சனி புத்தி தொடங்கியுள்ளது. ஜூன் 2022 வரை இந்த தசாபுத்தி காலம் செயல்படுகிறது. இந்த முதல் 105 இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் முதல்வராக கடுமையான போராட்டங்களை சந்தித்து திடீர் என முதல்வராக பதவியேற்றுள்ளார். சனிக்கிழமையான இன்று 9 மணிக்கு மேல் ராகு காலம் தொடங்குகிறது. ராகு காலத்திற்கு முன்பே நல்ல நேரத்தில் முதல்வராக பதவியேற்றிருக்கிறார். பதவியேற்ற போது கிரக நிலைகளை பார்த்தால் இன்றைய கிரக நிலையில் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சனி, சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் சந்திரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், 12ஆம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் அமைந்துள்ளன.

    சமாளிப்பாரா பட்னாவிஸ்

    சமாளிப்பாரா பட்னாவிஸ்

    தேவேந்திர பட்னாவிஸ் ராசி கும்பம் என்பதால் இப்போது கிரக நிலைகளும் சாதகமாக உள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஏழரை சனி காலமாகும். 2020 ஆண்டு ஜனவரி மாதம் சனி பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு செல்கிறார். கும்ப ராசிக்கு ஏழரை சனி காலம் ஆரம்பமாகிறது. என்னதான் உத்தவ் தாக்கரே குடைச்சல் கொடுத்தாலும் திறமையாக சமாளித்து விடுவார் தேவேந்திர பட்னாவிஸ் என்பதை அவரது ஜாதகம் சொல்கிறது.

    English summary
    BJP’s Devendra Fadnavis takes oath as the Maharashtra Chief Minister for a second term at Raj Bhavan before rahu kalam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X