For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாசி மகம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல அனுமதி

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 24ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாசி மாத வளர்பிறை பிரதோஷம் மற்றும் மாசி மகம் விழாவை முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Devotees permission to visit the Sathuragiri Sundaramakalingam Temple for 4 days

இந்நிலையில் மாசி மாதம் வளர்பிளை பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 24ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக முழு பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மலைப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும்.

கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

English summary
Devotees have been given permission to visit the Sathuragiri Sundaramakalingam Temple for 4 days from February 24 to 27 ahead of the Masi Month Waxing Festival and Masi Magam Festival. Devotees have been denied permission to stay overnight at the temple premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X