For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா? - ஜோதிட பரிகாரங்கள்

சர்க்கரை நோய் பெயர்தான் இனிப்பானது ஆனால் மெல்லக்கொல்லும் இந்த நோய் கசப்பானது. சுகர் வந்தா சுகமெல்லாம் போச்சுன்னு பயப்பட வேண்டாம். அந்த சுகரை கண்ட்ரோலா வச்சிக்கிட்டா போதும் எந்த பாதிப்பும் இல்லை என்கின

Google Oneindia Tamil News

மதுரை: சர்க்கரை நோய் பரம்பரையால் ஏற்படுகிறது என்றாலும் அதற்கு ஜாதக காரணங்களும் இருக்கின்றன. சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் ஆசிய இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். உலக சர்க்கரை நோய் தினமான நவம்பர் 14ஆம் தேதியன்று சர்க்கரை நோய் பாதிப்புக்கான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம். நீரிழிவுக்கு உடல் பருமன் முக்கிய காரணம், இன்றைக்கு வாழ்க்கை முறை மாறியுள்ளது. உணவுக்கட்டுப்பாடு தேவை. மன உளைச்சலும் கூட நீரிழிவுக்கு காரணம். பரம்பரை வியாதியாக இருந்தாலும் அனைவருக்கும் நீரிழிவு வருவதில்லை. எனவே நீரிழிவை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவமே நவம்பர் 14ஆம் தேதி நீரிழிவு விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கின்றனர்.

குடும்பத்தில் இருப்பவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஆண்டு Diabetis and family என்ற தீம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு வந்திருந்தால் அவர்களை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே இதை குறிப்பிட்டுள்ளனர். உடற்பயிற்சிக்கு உதவி செய்யலாம். உணவு தனியாக செய்ய வேண்டாம். நாம சாப்பிடும் உணவு எப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு தகுந்த மாற்றி மாற்றலாம்.

சர்க்கரை நோய் என்றால், சர்க்கரை சாப்பிட்டால் வரும் நோய் என்று அப்பாவியாக புரிந்து வைத்திருந்தவர்கள் பலர். ஆனால் இன்றைக்கு ஒரு தெருவில் 20 பேருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறது. அது அவர்கள் பேசும் பேச்சில் இருந்தே புரிந்து கொள்ளலாம். மெல்லக்கொல்லும் இந்த நீரிழிவு பற்றி பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியுள்ளது. விழிப்புணர்வு தொடரும்பட்சத்தில் இந்தியாவை விட்டு நீரிழிவை விரட்டவும் நம்மால் முடியும். சர்க்கரை நோய் டைப் 1, டைப் 2 மற்றும் பெண்கள் கருவுற்ற காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய் மூன்றாவது வகையாகும். குழந்தை பிறந்தவுடன் தானாகவே இந்த வகை நோய் வந்த சுவடு எதுவும் தெரியாமல் மறைந்துவிடுகிறது. ஆனாலும், எதிர்வரும் காலங்களில் தாய் மற்றும் குழந்தைக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சர்க்கரை நோய் பாதிப்பு

சர்க்கரை நோய் பாதிப்பு

டைப் 1 சர்க்கரை குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மற்றும் இளம்வயதினர் ஆகியோரைப் பெருமளவில் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுடைய இன்சுலின் சுரப்பிகள் செயல்படும் தன்மை சிறிதளவு கூட இல்லாமல் காணப்படும். இந்த பிரச்னை காரணமாக கணையம் செயல் இழத்தல், இன்சுலின் சுரக்காமை போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதோடு கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம் வரவும் வாய்ப்பு உள்ளது. இன்சுலின் மருந்தைத் தொடர்ந்து எடுத்து கொள்வதுதான் இதற்கான ஒரே சிகிச்சை முறையாகும். இரண்டாம் வகை நீரிழிவு முதியவர்களிடம் அதிகம் ஏற்படுகிறது. நம்முடைய உடலில் போதுமான அளவிற்கு இன்சுலின் சுரக்காமல் இருத்தல் அல்லது சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிராக மாற்று வினை உண்டாகுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குரு சுக்கிரன்

குரு சுக்கிரன்


நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சர்க்கரை நோய் பரம்பரையால் ஏற்படுகிறது என்றாலும் அதற்கு ஜாதக காரணங்களும் இருக்கின்றன.
நவகிரகங்களில் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிடைக்கும். குருவும் சுக்கிரனும் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்து விட்டால் நல்லதே நடக்கும். அதே நேரத்தில் குரு, சுக்கிரன் மறைந்திருந்தாலோ மகரத்தில் குரு நீசமடைந்திருந்தாலோ கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைந்திருந்தாலோ ஜாதகருக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள்.

சுக்கிரனால் பாதிப்பு

சுக்கிரனால் பாதிப்பு

ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற சுக்கிரன் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, ஆண்களுக்கு வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற சுக்கிரன் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, ஆண்களுக்கு வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். சுக்கிரன் 12ல் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு ஏற்படும்.

குரு ஏற்படும் நீரிழிவு

குரு ஏற்படும் நீரிழிவு

ஜாதகத்தில் குரு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குருஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி பெற்று மருந்து மாத்திரைகளுடன் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் குரு நீசம் வக்ரமடைந்தவர்களுக்கு எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் நோய்கள் கட்டுப்படுவதில்லை.எந்த லக்னமானாலும் அதன் ஆறாம் வீட்டில் குருவும் சுக்ரனும் மறைவு ஸ்தானங்களான 6,8,12 அதிபதிகளாகி அசுபத்தன்மை பெற்று நிற்பது. கால புருஷனுக்கு பன்னிரெண்டாம் வீடாகிய மீனத்தில் குரு ஆட்சி பெறுவது அல்லது சுக்கிரன் உச்சமடைவது சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது.

ஆண்களுக்கு பாதிப்பு

ஆண்களுக்கு பாதிப்பு

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.

விந்தணு குறைபாடு

விந்தணு குறைபாடு

ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன் போன்றவைகளும் ஆண்களுக்கு சர்க்கரை வியாதி வர காரணமாக அமைகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், பாலியல் உணர்ச்சி குறைந்துவிடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

குருபகவான் நீசம்

குருபகவான் நீசம்

வியாழனாகிய குரு பகவான் பாதிக்கப்படுவதற்கான விதிகள் என்ன என்று பார்த்தால் நோய் ஸ்தானமான ஆறாம் வீட்டின் உபநட்சத்திராதிபதி குருவாகி லக்னத்தை குறிகாட்டுதல். மிதுன லக்னத்தில் பிறந்தவர்க்கும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்க்கும் குரு பாதகாதிபதியாக கொடிய பாவியாதல்
குரு லக்னத்திற்கு ஆறில் நின்று தனது பகை வீடுகளான ரிசபம், துலாம், மிதுனம், நீச வீடான மகரம் இருந்தால் நீரிழிவு ஏற்படும். குரு மகரத்தில் நீசமாகி நின்று தனது பலம் குறைந்த பாகையாகிய 5 டிகிரியில் நின்றால் சுகர் வரலாம். இதற்கு பரிகாரமாக அமிர்தகடிகை நேரத்தில் மருந்து சாப்பிடலாம்.
திருச்செந்தூர் சென்று வழிபட்டு வரலாம்.

கோவிலுக்கு தானம்

கோவிலுக்கு தானம்

சரியான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, எதற்கும் கலங்காத மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும் எந்த நோயையும் எதிர்கொள்ளலாம். ஜாதக ரீதியான பரிகாரங்களையும் மேற்கொள்ளலாம். ஜாதகத்தில் குரு பாதிக்கப்பட்டவர்கள் கோவிலில் சர்க்கரை பொங்கல் படைத்து பிரசாதம் கொடுக்கலாம். வெள்ளை நிற பசுவிற்கு வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு சப்பாத்தி செய்து கொடுக்கலாம். இதன் மூலம் மரபு ரீதியாக ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். நெய், சர்க்கரை ஆகியவைகளை கோவிலுக்கு தானமாக அளிக்கலாம்.

சுகரை குறைக்க சூரிய நமஸ்காரம்

சுகரை குறைக்க சூரிய நமஸ்காரம்

தினசரி அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்யலாம். இது சிறந்த பரிகாரம். ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். யோகா, தியானம் செய்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும்.

English summary
Diabetes awareness day on November 14 diabetes Lord Guru and Lord Sukhran these two planets are analysed. If Jupiter is not placed well in the horoscope, it can lead to obesity and pancreatic issues which then leads to insulin imbalance, and therefore, type II diabetes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X