For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல சாவா? துர்மரணமா? தற்கொலையா? - ஜாதகத்தில் எந்த கிரகம் எப்படி இருக்கு

உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்று ஒரு சிலரை சபிப்பார்கள். மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு பூ மலர்வது போல மரணம் வந்தால் அது கொடுப்பினை. விபத்து, தற்கொலை, என துர் மரணங்கள் நிகழ்வதும்

Google Oneindia Tamil News

சென்னை: இப்பத்தான் பார்த்துட்டு வந்தேன் அதுக்குள்ள இறந்து போனதா தகவல் வருதே என்பார்கள். சிரித்துக்கொண்டே இறந்தவர்கள் இருக்கிறார்கள். சொந்த பந்தங்கள் புடை சூழ பார்த்துக்கொண்டே இறந்தவர்களும் உண்டு. விபத்தில் உடல்கள் சிதறி மரணித்தவர்களும் இருக்கின்றனர். "ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" என்பதை உணர்ந்து தர்ம நெறி தவறாமல் அமைதியாக வாழ்ந்தால் நிம்மதியான மரணம் நிகழும்.

கடன் தொல்லை, நோய்களின் தீவிரத்தினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் நன்றாக படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தால் ஜாதகத்திலேயே தற்கொலைக்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.

சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்கு பிடிக்காது. ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும்.

ஆயுள் காரகன் சனி

ஆயுள் காரகன் சனி

ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7, 11ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம். ஓருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் ஏற்படுகிறது.

 ஆயுள் முடியும் நேரம்

ஆயுள் முடியும் நேரம்

மாரகாதிபதிகளின் தசாபுத்திகாலத்தில் லக்னத்திற்க்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பை பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது. மரணத்திற்கு அதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது.

எப்படி மரணம் ஏற்படும்

எப்படி மரணம் ஏற்படும்

அந்த நேரத்தில் லக்னமோ அல்லது லக்னாதிபதியோ 6/8/12 அதிபதிகளின் தொடர்பு கொள்ளும்போது மரணம் சம்பவிக்கிறது.

சூரியன் அல்லது குருவின் சேர்கை பெற்றால் புனித தினங்களிலோ அல்லது கோயில் போன்ற தெய்வீகத்தன்மைகள் நிறைந்த

இடத்தில் நிகழும். சுக்கிரன் சேர்க்கை பெற்றால் சுகமான மரணமும் மருத்துவமனை போன்ற இடங்களிலு பலர் சேவை செய்ய மரணம் நிகழும்.

விஷத்தினால் மரணம்

விஷத்தினால் மரணம்

சனி சேர்க்கை பெற்றால் பொது இடங்களிலிலோ அல்லது தர்ம ஸ்தாபனங்கள் போன்ற இடங்களிலோ மரணம் நிகழும்.சந்திரன் சேர்க்கை பெற்றால் நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது பயணத்திலோ மரணம் நிகழும். செவ்வாய் சேர்க்கை பெற்றால் விபத்துகளாலும் அகால மரணமும் புதன் சேர்க்கை பெற்றால் அவஸ்தைகளுடன் கூடிய மரணமும் நிகழும். ராகு அல்லது கேது தொடர்பு கொண்டால் விபத்து, பாம்பு, தேள், உள்ளிட்ட விஷ பூச்சிகளாலோ அல்லது விஷம் குடித்தல், தற்கொலை போன்றவைகளினால் மரணம் நிகழும்.

 சனிபகவானை சரணடையுங்கள்

சனிபகவானை சரணடையுங்கள்

இதற்குப் பரிகாரமாக ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானை வணங்குவது மற்றும் பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது. தர்ம காரியங்கள் செய்யலாம். ஆண்டு தோரும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் ம்ருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்யலாம். எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியை பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திரநாட்களிலும் வணங்குவது நன்மை தரும்.

English summary
The death should be predicted through the evil effect arising from the 8th house. 8th house is occupied or aspected by a planet, death should be declared to be caused by diseases relating to that planet. When there are no planets occupying or aspecting the 8th house, death is caused through diseases arising from the nature of the sign representing the 8th house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X