For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமையில் மோடியை சந்தித்த ட்ரம்ப் - இரண்டு பேரோட ராசியும் எப்படி இருக்கு பாருங்க

மிதுனம் சூரியனின் பிறந்த டொனால்ட் ட்ரம்ப் கன்னி ராசியில் சூரியன் இருக்க பிறந்த மோடியுடன் பிரதமை நாளான இன்று குஜராத்தில் சந்தித்து பேசியுள்ளார். இருவருமே நண்பேண்டா என்கிற ரேஞ்சுக்கு வலம் வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார். மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் அவர் இந்தியா வந்துள்ளது பற்றிதான் இப்போது நாம் பேசப்போவது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக என்று சொல்ல முடியாது ஏற்கனவே எத்தனையோ முறை அமெரிக்க அதிபர்கள் இந்தியா வந்து வணக்கம் சொல்லி விட்டு தாஜ்மகாலை ரசித்து போட்டோ எடுத்துக்கொண்டு காந்தி ஆசிரமத்திற்கு கை ராட்டையை பார்வையிட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இப்போதய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மும் இதையேதான் செய்திருக்கிறார். ட்ரம்பின் இந்திய வருகைதான் இன்றைய பரபரப்பு இரு நாட்டு தலைவர்களின் ராசியின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுமுறை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ட்ரம்ப் மோடி இருவருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள். புதனை சூரிய ராசி அதிபதியாகக் கொண்டவர்கள். அதனால்தான் இருவமே பேச்சுத்திறமையால் மக்களை கவர்ந்துள்ளனர். மோடிக்கு ஏழரை சனி முடிந்துள்ளது. ட்ரம்புக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பித்துள்ளது. இருவருக்குமே இது பிரகாசமான எதிர்காலம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் 1948 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஒரு முழு சந்திரகிரகண நாளில் அதாவது ப்ளட் மூன் என்று சொல்லக்கூடிய நாளில் பிறந்தவர். மிதுனம் ராசியில் சூரியன் இருக்க தனுசு ராசியில் சந்திரன் இருக்க பவுர்ணமி ராசியில் பிறந்த ட்ரம்ப், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இப்போது கன்னி ராசியில் சூரியன் இருக்க விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சரிக்க பிறந்த மோடியை சந்தித்து கை குலுக்கி பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு பற்றி ஜோதிடர் ஆச்சார்யா ஆதித்யா புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.

சாதகமான கிரகங்கள்

சாதகமான கிரகங்கள்

சூரியன் சந்திரன்,புதன் கும்பம் ராசியில் இருக்க மிதுனத்தில் ராகு, தனுசு ராசியில் செவ்வாய் கேது குரு மகரத்தில் சனி சஞ்சரிக்கின்றனர். மேஷ லக்னத்தில் ட்ரம்ப் இந்தியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இரு நாடுகளுமே தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம் இரு நாட்டு உறவுகளுக்குமே சாதகமாக இருக்கிறது.

இந்தியா அமெரிக்கா

இந்தியா அமெரிக்கா

இந்தியாவின் ஜாதகம் செவ்வாய் கிரகத்தினால் ஆளப்படுகிறது. செவ்வாய் கிரகம் தற்போது தனுசு ராசியில் குரு, கேது உடன் இணைந்துள்ளார். இது சாதகமான நிலை குரு மங்கல யோகம் நிகழ்கிறது. இதே போல அமெரிக்காவின் ஜாதகம் சுக்கிரனால் ஆளப்படுகிறது. செவ்வாய் சுக்கிரன் கூட்டணி ஏற்கனவே அன்பை அன்பால் இணைக்கும், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவும் அப்படித்தான். பல ஆண்டு காலமாகவே நட்பு ரீதியாக பிணைப்பை கொண்டிருக்கிறது.

சந்திப்பு சாதகம்

சந்திப்பு சாதகம்

சூரியன் சஞ்சாரம் இரு நாட்டு உறவுகளுக்கும் சாதகமாக இருக்கிறது. இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் அற்புதமாக உள்ளது. இரு நாட்டு இடையே இணக்கமான உறவும் நட்பும் பலப்படும். தீவிரவாத ஒழிப்புக்கு எதிராக இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட வாய்ப்பு உள்ளது.

உறவு பலப்படும்

உறவு பலப்படும்

ஜோதிட ரீதியாக தனுசு ராசியில் உள்ள செவ்வாய் கிரகத்தின் பார்வை மீனம் ராசியில் உச்சம் பெற்று உள்ள சுக்கிரன் மீது விழுகிறது. செவ்வாய் சுக்கிரன் பார்த்துக்கொண்டாலோ, சேர்ந்து இருந்தாலோ அந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நட்பும் அன்பும் அதிகமாகும். இந்தியா அமெரிக்கா இடையேயான உறவும் பலமாகும் என்கின்றனர் ஜோதிடர்கள். எது எப்படியோ பிரதமை திதியில் சதயம் நட்சத்திரத்தில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்னென்ன சாதிக்கப் போகிறார் என்று பார்க்கலாம்.

English summary
Donald Trump India Visit prathamai tithi meet Modi in Gujuarat. Donald Trump born in Mithunam sun sign Modi Born in Kanni Sun sign Let us see how the relationship between the two Leaders and India US relationship. Donald Trump along with wife and delegation would be visiting India on 24th Feb 2020. It would be his first visit to India since he was elected as the President of the USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X