For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீ ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் துர்முகி புத்தாண்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: துர்முகி" என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. "துர்முகி" என்று இந்த புத்தாண்டின் பெயர் இருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது.

துர்முகி புத்தாண்டின் பெயரில் தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Durmuki is Hayagiriva's Daughter

"துர்முக" என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை ஸ்ரீ ஹயக்ரீவர் . ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான்.

இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஸ்ரீஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், ஸ்ரீ ஹயக்ரீவர் பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு "துர்முகி" என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சமமாக எடுத்துக்காட்டுகிறது.

English summary
here is the meaning of Tamil new year Dhurmuki.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X