For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஸ்து 2019: வீட்டிற்கு நான்கு திசையிலும் வரும் காற்று நல்லா இருந்தா நோய் பாதிக்காது

உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு சமயத்தில் நோயினால்

Google Oneindia Tamil News

சென்னை: எட்டு திசைகளிலும் சரியாக அமையப்பெற்ற வீட்டில் ஆரோக்கிய லட்சுமி மட்டுமல்லாது அஷ்ட லட்சுமிகளும் குடியேறுவார்கள்.

வாஸ்து நன்றாக இருப்பது பண வருமானத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஒருவர் நிறைய சம்பாதித்தும் நோயினால் பாதிக்கப்பட்டு அந்த பணத்தை மருத்துவமனைக்கு கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

வாடகை வீட்டில் இருந்த போது ஆரோக்கியமாக இருந்த நபர் சொந்த வீட்டிற்கு வந்த பின்னர் நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிடுவார். இதற்கு காரணம் வாஸ்துதான். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய சுமூகமான தினசரி நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும். நீங்கள் குடியிருக்கும் வீடே உங்களது ஆரோக்கியத்தையும், வருமானத்தையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. வீட்டின் எந்த திசை பாதிக்கப்பட்டால் எந்த நோய் வரும் என்று தெரிந்து கொள்ளலாம்.

பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் நம் நாட்டின் அனைத்து கலைகளுமே தோன்றியுள்ளன. நம் நாட்டின் கலைகளில் சித்த மருத்துவமும், இயற்கை மருத்துவமும் பஞ்ச பூத சக்திகளில் ஒன்று கூடுவதாலோ அல்லது குறைவதாலோ தான் மனிதனுக்கு நோய் வருகிறது என்றும், அவற்றை சரி செய்தாலோ அல்லது சமன் செய்தாலோ நோய் தீரும் என்பதையும் விளக்குகிறார்கள்.

திசைகளும் காற்றும்

திசைகளும் காற்றும்

ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் இருந்து காற்று வரும்பொழுது அதில் ஆக்ஸிஜன் நிறைந்து இருக்கிறது. வடகிழக்கு மூலையில் இருந்து வரும் காற்றில் நீர் நிறைந்து இருக்கிறது. தென்கிழக்கு மூலையில் இருந்து வரும் காற்றில் வருடத்தின் மிகுந்த நாட்களில் வெப்பம் மிகுந்து காணப்படுகிறது. தென்மேற்கு மூலையில் இருந்து வரும் காற்றின் வறட்சி அதிகமாக இருக்கிறது.

எந்த திசையில் என்ன வரலாம்

எந்த திசையில் என்ன வரலாம்

விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் நம் வீட்டு வடக்கு, கிழக்கு திசையில் இருக்கலாம். விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், வேறு காலி மைதானங்கள் மேற்கேயும், தெற்கேயும் இருக்ககூடாது. தெற்கில் அதிக காலி இடம், பள்ளங்கள் அந்த வீட்டில் உள்ள பெண்களை பாதிக்கும். மேற்கில் அதிக காலி இடம் இருந்தால் அந்த வீட்டின் ஆண்களை பாதிக்கும்.

கிழக்கு சூரியன்

கிழக்கு சூரியன்

ஒவ்வொரு வீடும் கிழக்கிலிருந்து சூரிய ஒளி பெறும் வகையில் அமைக்க வேண்டும். சூரிய ஒளி இல்லாவிட்டால் வைட்டமின் பற்றாக்குறையினால் கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு ஆகியவைகளின் வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும்.

ஒவ்வொரு வீடும் கிழக்கிலிருந்து சூரிய ஒளி பெறும் வகையில் அமைதல் வேண்டும். சூரிய ஒளி இல்லையேல் வைட்டமின் பற்றாக்குறையினால் கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும்.

நோய்களை தடுக்கும் வைட்டமின் டி

நோய்களை தடுக்கும் வைட்டமின் டி

வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடலில் உள்ள அணைத்துத் திசுக்களுமே பொதுவாகப் பாதிக்கப்படக்கூடும். இந்த பாதிப்பின் அடையாளங்களும் அறிகுறிகளும் ஒவ்வொருவருக்கும் பலவகையான நோய்களை குறிப்பாக மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை, இரத்த கொதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சூரிய ஒளியின் மூலம் நாம் பெறும் 'வைட்டமின் டி' நம்மை பல வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. கிழக்கு திசையில் சூரிய ஒளியில் உருவாகும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இவை இரத்த சிவப்பணுக்களின் ஆயுளை அதிகரிக்கவும் உதவுகின்றன.

ஆண்களுக்கு அவசியம்

ஆண்களுக்கு அவசியம்

கிழக்கு திசையின் சூரிய ஒளியால் உருவாகும் வைட்டமின் டி சத்துக்களினால் ஆணின் விந்து சந்தி அதிகரிக்கும். மேலும், குழந்தைகளுக்கு அதிகாலை சூரிய ஒளி உடல் வளர்ச்சியையும் எலும்புகள் வளர்ச்சி அடையவும், கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

எனவேதான் குழந்தைகளை காலை நேரத்தில் வெயிலில் காண்பிக்கும் பழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

பெண்களின் ஆரோக்கியம்

பெண்களின் ஆரோக்கியம்

வடக்கு திசை செல்வத்தின் தன்மை, மகிழ்ச்சி, அறிவு, ஆற்றல், பெண்களின் வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும். வடகிழக்கு உடல்நலம், அறிவு, முன்னேற்றம், புகழ், செல்வம், வம்ச விருத்தி ஆகியவற்றைக் குறிக்கும். கிழக்கு ஆண்களின் உயர்வுக்கும், புகழுக்கும் உரிய திசை. அறிவு, ஆற்றல், தந்தை, கௌரவம், பதவி ஆகியவற்றைக் குறிக்கும் திசையாகும். தென்கிழக்கு சுபகாரியம், பெண்களின் உடல் நலம், ஆண்களின் நன்நடத்தை, காமம், கலைகளில் தேர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும்.

ஆண்களுக்கு பாதிப்பு

ஆண்களுக்கு பாதிப்பு

தெற்கு பெண்களின் தன்மை, நீதி, நேர்மை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிக்கும். தென்மேற்கு புத்திரபாக்கியம், குடும்பத் தலைவன், மூத்த மகன், மூத்த மகள் ஆகியவர்களின் குணங்கள், உடல்நலம், நல்லெண்ணம், தொழில் ஆகியவற்றைக் குறிக்கும். மேற்கு ஆண்களின் புகழ், கௌரவம், உடல் நலம் ஆகியவற்றைக் குறிக்கும். வடமேற்கு குடும்ப உறவுகள், உடல் உறவுகள், மனநிம்மதி, நட்பு, வியாபாரம், வழக்குகள், அந்தஸ்து ஆகியவற்றைக் குறிக்கும்.

 நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

கிழக்கு பகுதி முழுவதும் அடைப்பட்ட வீட்டில் கண்பார்வை கோளாறு. தைராய்டு பிரச்சனை, வைட்டமின் பற்றாக்குறை,மனநலம் தொடர்பான பிரச்சனைகள்,இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும். வடக்கு பகுதி முழுவதும் அடைப்படும் போது கோமா நிலை, மனநல பாதிப்பு,மூளை தொடர்பான அனைத்து விதமான நோய்களும் ஏற்படும். பக்கவாதம் எற்படும்.

இதயம் பாதிக்கும்

இதயம் பாதிக்கும்

தெற்கு பகுதியில் தவறு வரும் போது பெண்களின் உடல் நலம் மட்டும் கெடும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இரத்த நாளங்கள் தொடர்பான அனைத்து விதமான நோய்களும் ஏற்படும். கேன்சர், குடல் சம்பந்தமான அனைத்து விதமான நோய்களும் ஏற்படுகிறது. தென்மேற்கு பகுதியில் தவறாக அமைந்தால் கிட்னி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஆண்களுக்கு இதயம் பாதிக்கும்.3. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளும், பித்தப்பை, கல்லீரல், கணையம், முதுகு தண்டுவடம், பாலின உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும்.

வாஸ்து கோளாறுகளை நீக்கலாம்

வாஸ்து கோளாறுகளை நீக்கலாம்

மேற்கு மற்றும் வடமேற்கு தவறாக இருக்கும் பட்சத்தில் எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை ஏற்படும். முழங்கால் வலி, மூட்டு அறுவை சிகிச்சை செய்வது, கால்களில் அடிக்கடி முறிவு ஏற்படுவது. கைகளில் அடிக்கடி முறிவு ஏற்படுவது. கால் பாதங்களில் அடிக்கடி பிரச்சனை வருவது.

மனநலம் கெடுவது, கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கர்ப்பப்பை அகற்ற வேண்டியிருக்கும். குழந்தை பாக்கியம் பாதிக்கும். வீடு அமைப்பில் தவறு இருக்கும் பட்சத்தில், அந்த தவறான அமைப்புக்கு உண்டான நோய் ஏற்படும். வாஸ்து கோளாறுகளை சரி செய்தால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

English summary
vastu shastra at your home not only helps in getting profits, gaining respect and dignity in the society, but also helps in maintaining one’s health. If your home is not constructed according to vastu rules, the inhabitants may suffer from life-endangering diseases. Expert SK Mehta reveals how vastu doshas affect the health of occupants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X