• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திங்கட்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசிப்பதால் என்ன நன்மை தெரியுமா?

|

சென்னை: திங்கட்கிழமையன்று திருப்பதியில் ஏழுமலையால் எழுந்தருளியுள்ள மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும் என்பது ஐதீகம். இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால்தான் அங்கு சென்று வந்தாலே மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.

திருப்பதி சென்று திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தாலேவாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் தான் அரசியல்வாதிகளும், விஐபிக்களும், ஏழை, நடுத்தர மக்களும், பணக்காரர்களும் ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

Facts you probably know about Tirumala Tirupathi

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,திருப்திக்கு செல்ல ஸ்பெஷல் நாட்கள்இருக்கு.அது பற்றி பணவளக்கலை என்ன சொல்கிறது என்பதைபார்க்கலாம். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை திருப்பதி சென்றால்,நம் வாழ்வில் அனைத்தும் ஐஸ்வர்யம் தானாம்.

7 மலையை ஏறி இறங்கும் போது, நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்னை இறங்கு முகமாகிவிடும். நம் வாழ்வோ மேலோங்கி செல்லுமாம்

திருப்பதி திருமலை ஏழுமலையானை நாம் தரிசிக்கும் முன் திருச்சானுரில் உள்ள பத்மாவதி தாயாரை தான் முதலில் தரிசிக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்பதால் விசேஷ பலன் கிடைக்கும் .

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார். கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை நீங்குவதோடு சந்ததி விருத்தி உண்டாகும்.

வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டடுள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம்.

திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு பிடிக்கும் லக்னம். மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் விருச்சிகம் , மகரம், மீனம். வருடம் ஒரு முறை செல்ல வேண்டிய லக்னம் காரர்கள் :சிம்மம் , தனுசு , கும்பம்.

7 மலையும் சூட்சமான கிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. நாம் ஒவ்வொருமலையும் ஏறி இறங்கும் போது தோஷம் பாவங்கள் நீங்கி விடும். திருப்பதி வெங்கடாசலமும்,மகா லட்சுமியும் சர்வ ஐஸ்வர்யம் தருவார் பத்மாவதி தாயார் வாழ்வில் அனைத்து வசதியும் தருவார்.

ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம். சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி. அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது. கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்.

ஒவ்வொரு தமிழ் மாதம். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை கண் கூடாக பார்க்க முடியும்.12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம். தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் படிப்படியாக சென்று வர கண்டிப்பாக செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்துள்ளது.

ஜாதகத்தில் சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு ஏழுமலையான் ஆலயம் சிறந்த பரிகார தலமாகும். திருமலையில் திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும். திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும். என்ன ஏழுமலையானை தரிசனம் செய்ய கிளம்பிட்டீங்களா?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
20 facts you probably didn't know about Tirumala Tirupathi Visited by about 50,000 to 100,000 pilgrims daily; while on special occasions and festivals like the annual Brahmotsavam, the number of pilgrims shoots up to 500,000 and more, making it the most-visited holy place in the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more