For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தையர் தினத்தில் சூரிய கிரகணம் வருவதால் எந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி தெரியுமா

தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ள ஞாயிறு கிழமை இந்த ஆண்டு சூரிய கிரகணம் நிகழப்போகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ள ஞாயிறு கிழமை இந்த ஆண்டு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. ஜூன் 21ஆம் தேதி நிகழப்போகும் இந்த கிரகணம் இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். இது மிதுனம் ராசியில் ராகு உடன் சூரியன் சந்திரன் இணையும் போது ஏற்படும் ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆகும். 6 மணி நேரம் வானத்தில் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். இந்த சூரிய கிரகணத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Recommended Video

    நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்

    மிதுனம் ராசியில் சூரியன், சந்திரன், ராகு, புதன் என நான்கு கிரகணங்கள் கூட்டணி அமைத்திருக்கும் சூழ்நிலைகளில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. முதன் முதலில் காலை 9:15:58 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 12:10 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பிற்பகல் 3:04 மணிக்கு உச்சத்தை அடைகிறது. தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும் கோவையில் 10:12 மணிக்கும் இந்த கிரகணத்தை பார்க்கலாம். மதுரையில் 10:17:05 மணிக்கும் திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம்.

    சூரிய கிரகணம் வட இந்தியாவில் தெரியும் தென் இந்தியாவிலும் நன்றாக பார்க்கலாம். பாகிஸ்தான், சீனா, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பார்க்கலாம். வானத்தில் நெருப்பு வளையத்தை கண்டு ரசிக்கலாம். இந்த கிரகணத்தை சாதாரண கண்களால் காணக்கூடாது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    சூரிய கிரகணம் 2019: அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ணுங்கசூரிய கிரகணம் 2019: அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ணுங்க

    கிரகணத்தினால் யாருக்கு அதிர்ஷ்டம்

    கிரகணத்தினால் யாருக்கு அதிர்ஷ்டம்

    சூரிய கிரகணம் மிதுனம் ராசியில் மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தரப்போகிறது. மேஷம், சிம்மம், கன்னி, துலாம், மீனம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. கிரகணத்தால் யோகங்கள் கிடைக்கப் போகின்றன.

    மேஷம்

    மேஷம்

    மேஷம் ராசிக்கு மூன்றாம் வீடான தைரிய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. யோகமான நாளாக அமையப்போகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரருக்கு உங்களால் நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை தைரியமாக முடிப்பீர்கள். இந்த கிரகணத்தினால் உங்களுக்கு தீமை எதுவும் இல்லை. உங்களின் முன்னேற்றமும் ஆளுமைத்தன்மையும் அதிகரிக்கும்.

    சிம்மம்

    சிம்மம்

    சிம்மம் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் உங்களின் வேலை மற்றும் தொழிலில் லாபத்தை தரப்போகிறது. உங்களின் பொருளாதார நிலைமை உயர்வடையும். உறவினர்கள், நண்பர்களுடன் உறவு வலுப்படும். இந்த கிரகணம் உங்க ராசிக்கு உயர்வையும் சிறப்பையும் தரப்போகிறது.

    கன்னி

    கன்னி

    கன்னி ராசிக்கு பத்தாம் வீடு வேலை தொழில் ஸ்தானம். இந்த வீட்டில் நிகழப்போகும் கிரகணத்தினால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் செயல்திறன் கூடும். உயர்பதவி கிடைக்கும். சம்பள உயர்வும் தேடி வரும். வராமல் இருந்த சம்பள பாக்கி வரும் பொருளாதாரம் சிறப்படையும். உங்களின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    துலாம்

    துலாம்

    துலாம் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. தந்தையர் தினத்தில் தந்தை ஸ்தானத்தில் இந்த கிரகணம் நிகழ்வதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இந்த ராசிக்காரர்கள் அக்கறை காட்ட வேண்டும். நிறைய பாக்கியங்கள் தேடி வரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நல்ல செய்திகள் தேடி வரும்.

    மீனம்

    மீனம்

    ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணத்தினால் நிறைய நல்ல செய்திகள் தேடி வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் எனறாலும் உங்களுடைய ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க.

    English summary
    Now we are getting ready to witness the first solar eclipse of 2020 on 21 June. The third Sunday of the year, also happens to be Father’s Day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X