For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேஷம் லாபம்... ரிஷபம் புது வேலை - பிப்ரவரியில் 12 ராசிக்கும் பலன் எப்படி?

பிப்ரவரி மாதம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் எப்படி என்று அறிந்து கொள்வோம்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: பிப்ரவரி மாதம் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. உலக காதலர்கள் ஒருவாரம் இந்த காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு இந்த பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

மகரத்தில் உள்ள சூரியன் பிப்ரவரி மாதம் முதலில் சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற உள்ளது. நடுவில் கும்ப ராசிக்கு பிரவேசிப்பார். கூடவே புதனும் பிப்ரவரி 15 முதல் சூரியன், சுக்கிரனுடன் குடித்தனம் செய்வார்.

இந்த மாதம் ராகு கடகத்திலும் மகரத்தில் கேதுவும் அமர்ந்திருப்பார்கள். தனுசுவில் சனி, விருச்சிகத்தில் செவ்வாய், துலாமில் குரு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. பிப்ரவரி மாதம் சூரியகிரகணமும் நிகழ உள்ளது.

மேஷம்

மேஷம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். லாப ஸ்தானமான 11ஆம் இடம் என்பதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் அஷ்டமத்திலேயே அமர்ந்திருப்பது மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி கும்ப ராசியான 11வது இடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது மனைவியால் பண வரவை அதிகரிக்கச் செய்யும். குரு ஏழாம் இடத்திலிருப்பது அடிக்கடி பயணம் செய்யும் நிலையை கொடுக்கும். சனி ஒன்பதாமிடத்தில் இருப்பது உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் வழியைக் காட்டும். ராகு நான்காமிடத்தில் இருப்பதால் மாணவர்கள் கவனத்தோடு படிப்ப வேண்டும். படிப்பது மறக்காமல் இருக்க லட்சுமி ஹயக்ரீவரை வணங்குங்கள். கேது இந்த ஆண்டு முழுவதும் பத்தாமிடத்திலிருப்பது எல்லா வெற்றியைக் கொடுக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஏழாமிடத்திலேயே அமர்ந்திருப்பது வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் இம்மாதம் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடுகளை சிறப்படையச் செய்யும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலையைக் கொடுக்கும். குரு ஆறாம் இடத்திலிருப்பது அடிக்கடி குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சனி இந்த ஆண்டு முழுவதும் எட்டாமிடத்தில் இருப்பது உடலில் அசதி கொடுக்கும். ராகு இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்தில் இருப்பது மனதில் குழப்பத்தைக் கொடுக்கும். கேது இந்த ஆண்டு முழுவதும் ஒன்பதாமிடத்திலிருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆறாமிடத்திலேயே அமர்ந்திருப்பது நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. புதன் இம்மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது ஒப்பந்தத் தொழிலை சிறப்படையச் செய்யும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது குல தெய்வக் கோயிலுக்குச் செல்லும் நிலையைக் கொடுக்கும். குரு ஐந்தாம் இடத்திலிருப்பது அடிக்கடி பரம்பரை சொத்திலிருந்து பண வரவைக் கொடுக்கும். சனி இந்த ஆண்டு முழுவதும் ஏழாமிடத்தில் இருப்பது வியாபார வாடிக்கையாளர்களிடம் நல்லுறவை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் இரண்டாமிடத்தில் இருப்பது வங்கியில் டெபாசிட் சேமிப்பு அதிகரிக்கும். கேது இந்த ஆண்டு முழுவதும் எட்டாமிடத்திலிருப்பது எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை அதிகரிக்கச் செய்யும்.

கடகம்

கடகம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களால் மனக் கஷ்டம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஐந்தாமிடத்திலேயே அமர்ந்திருப்பது கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் புதன் இம்மாதம் 15ஆம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி எட்டாமிடத்திற்கு மறைவது மனைவியின் உறவினர்களால் மனக்கஷ்டம் உண்டாகும். குரு நான்காம் இடத்திலிருப்பது புதிதாக வாகனம் வாங்கும் அதிர்ஷ்டத்தை தரும். சனி இந்த ஆண்டு முழுவதும் ஆறாமிடத்தில் இருப்பது உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்யும். ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது புத்தியில் குழப்பத்தை கொடுக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் ஏழாமிடத்திலிருப்பதால் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிமித்தம் வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் 4ஆம் இடத்திலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் இம்மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது மனைவியால் நன்மை உண்டாகும்.
குரு மூன்றாம் இடத்திலிருப்பது அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலையைக் கொடுக்கும்.
சனி இந்த ஆண்டு முழுவதும் ஐந்தாமிடத்தில் இருப்பது மன சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது செலவுகள் அதிகரிக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் ஆறாமிடத்திலிருப்பது கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கன்னி

கன்னி

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் செய்யும் தொழிலில் கவனம் தேவை. செவ்வாய் இம்மாதம் முழுவதும் மூன்றாம் இடத்திலேயே இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் இம்மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது மனைவியுடன் சச்சரவுஉண்டாகும். குரு இரண்டாம் இடத்திலிருப்பது செல்வ நிலையை அதிகரித்துக் கொடுக்கும். சனி இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்தில் இருப்பது மன வெளியூர் பிரயாணத்தை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் பண வரவு தாராளமாக இருக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் ஆறாமிடத்திலிருப்பது உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

துலாம்

துலாம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் செல்வீர்கள் . செவ்வாய் இம்மாதம் முழுவதும் ராசிக்கு இரண்டாமிடத்திலேயே அமர்ந்திருப்பது வீட்டு வாடகை மூலம் பண வரவு கிடைக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகள் .லாபத்தைத் தரும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது பொழுதுபோக்கு விஷயங்க்களில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும். குரு ஜென்ம ராசியில் இருப்பது மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
சனி இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்தில் இருப்பது இடமாற்றத்தைக் கொடுக்கும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் எடுத்த காரியமெல்லாம் வெற்றி பெறச் செய்யும் கேது இந்த ஆண்டு முழுவதும் நான்காமிடத்திலிருப்பது வீடு கட்டும் யோகத்தைக் கொடுக்கும்

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்திவிடுவது நல்லது. செவ்வாய் இம்மாதம் முழுவதும்
ஜென்ம ராசியிலேயே அமர்ந்திருப்பதால் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதன் இம்மாதம் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் .சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி இந்த ஆண்டு முழுவதும் இரண்டாமிடத்தில் இருப்பது பொருளாதார சிக்கலைக் கொடுக்கும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பது பரம்பரை சொத்துக்களிலில் வில்லங்கத்தைக் கொடுக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்திலிருப்பது மன சஞ்சலத்தைக் கொடுக்கும்.

தனுசு

தனுசு

சூரியன் இம்மாதம் 13ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் பன்னிரெண்டாமிடத்திலேயே அமர்ந்திருப்பது நிலம் வீடு வகைகளில் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் புதன் இம்மாதம் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வெளியூருக்கு அடிக்கடி பிரயானம் செல்லும் நிலையைக் கொடுக்கும். குரு பதினொன்றாமிடத்தில் இருப்பது பண புழக்கம் சரளமாக இருக்கும்
சனி இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பது தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும் கேது இந்த ஆண்டு முழுவதும் இரண்டாமிடத்திலிருப்பது குடும்பத்தில் சிறு சிறு சச்சரவைக் கொடுக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சினில் அதிகாரம் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் பதினொன்றாமிடத்தில் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வியாபாரத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குரு பத்தாமிடத்தில் இருப்பது தொழில் நிலை சிறப்பாக இருக்கும் சனி இந்த ஆண்டு முழுவதும் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது தொழில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பது அனைவரிடமும் நல்லுறவை நிலவச் செய்யும் கேது இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

கும்பம்

கும்பம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் பத்தாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையினருக்கு பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். புதன் இம்மாதம் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறலாம் சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் சந்தோஷம் அதிகரிக்கச் செய்யும். குரு ஒன்பதாமிடத்தில் இருப்பது பொருளாதார விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும்
சனி இந்த ஆண்டு முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருப்பது தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருப்பது இதுவரை பட்ட கடன்களை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுவீர்கள் கேது இந்த ஆண்டு முழுவதும் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது ஆன்மீகத்திற்காக செலவுகளைஅதிகரிக்கச் செய்யும்.

மீனம்

மீனம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். குரு எட்டாமிடத்தில் இருப்பது பண வரவில் தாமதமாகும். சனி இந்த ஆண்டு முழுவதும் பத்தாமிடத்தில் இருப்பது கடுமையான உழைக்க வேண்டியிருக்கும். ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருப்பது பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருப்பது பல நாட்களாக நினைத்திருந்த எண்ணங்கள் நிறைவேறும்.

English summary
February 2018 Sun, Mercury, and Venus transit Aquarius – sign that can behave unexpectedly – and because in the middle of the month there’s a solar eclipse (also in Aquarius), and eclipses in and of themselves can come with surprises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X