For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிப்பெருக்கு, நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம்...ஆகஸ்ட் மாத முக்கிய விரத தினங்கள் - முகூர்த்த நாட்கள்

ஆகஸ்ட் மாதத்தில் நிறைய கோவில் திருவிழாக்கள் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு, நாக பஞ்சமி, நாக சதுர்த்தி, வரலட்சுமி நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி என எண்ணற்ற விஷேச தினங்கள் வரப்போகின்றன. ஆகஸ்ட் 17

Google Oneindia Tamil News

மதுரை: ஆகஸ்ட் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம். நம் நாட்டில் மாதந்தோறும் பண்டிகைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆடி மாதம் தொடங்கி ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் குறைவில்லாது இருக்கும். ஆடி ஆவணி என இரு மாதங்களும் பாதி பாதி இணைந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய பண்டிகைகளான ஆடிப்பெருக்கு, நாக பஞ்சமி வரலட்சுமி நோன்பு, ரக்ஷா பந்தன், கோகுலாஷ்டமி என பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. ஆடியில் திருமண முகூர்த்தம் இல்லை என்றாலும் ஆவணியில் முகூர்த்த நாட்களுக்கு பஞ்சமில்லை.

ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு. இந்த நாளில் நம் நாட்டில் பாயும் புனித நதிகளுக்கு பூஜை செய்து பெண்கள் திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வார்கள். பெண்கள் கணவனின் நலனுக்காக பிரார்த்தனை செய்வார்கள். ஸ்வர்ண கௌரி விரதம் இருந்து கௌரிபூஜை செய்ய ஏற்ற நாள்.

Festivals and important days in August 2019

ஆகஸ்ட் 4 நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

திருவாடிப்பூரம் இன்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்த தலத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். ஆண்டாளை தரிசனம் செய்ய திருமண தடைகள் நீங்கும் மனதிற்கு பிடித்த கணவனை கை பிடிக்கலாம்.

ஆகஸ்ட் 5 நாக பஞ்சமி, கருடபஞ்சமி கொண்டாடப்படுகிறது. நாகபூஜை செய்யலாம். கருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட நாக தோஷம் நீங்கும். திருமண தடை, குழந்தை பாக்கியத்தடை விலகும்.

ஆகஸ்ட் 9 வரலட்சுமி பூஜை பெண்கள் வரலட்சுமி பூஜை செய்ய, துளசி பூஜை செய்ய ஏற்ற நாள். தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.

ஆகஸ்ட் 15 ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. சகோதர சகோதரிகளின் பாசத்தை பிணைப்பை உணர்த்தும் நாள் இந்த ரக்ஷா பந்தன்.

ஆகஸ்ட் 19 மகா சங்கடஹர சதுர்த்தி இன்றைய நாள் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நல்ல நாள்.

ஆகஸ்ட் 23 கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பகவான் விஷ்ணு ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர நாளில் கிருஷ்ணராக மண்ணில் அவதரித்தார். இந்த நாளை இந்துக்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றன. இந்த நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு படையல் இட்டு வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆகஸ்ட் 24 சனி ஜெயந்தி. சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர் சாற்றி எள் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க சனி தோஷம் விலகும்.

ஆகஸ்ட் 25 ஆவணி முழக்கம் பங்காளிகள் ஒன்று கூடி குலதெய்வ பூஜை செய்ய ஏற்ற நாள்.

ஆகஸ்ட் 31 செவ்வாய் ஜெயந்தி. நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி சிகப்பு அரளி பூக்கள் போட்டு அர்ச்சனை செய்யலாம். நெய் விளக்கு ஏற்ற செவ்வாய் தோஷம் விலகும்.

முகூர்த்த நாட்கள்

திருமணம், சீமந்தம், வாசல்கால் வைக்க, கிரக ஆரம்பம், சாந்தி முகூர்த்தம் காதுகுத்த ஏற்ற நாள்

ஆகஸ்ட் 28 புதன்கிழமை பூசம் நட்சத்திரம் சித்த யோகம் காலை 9.30 முதல் 10.30 மணிவரை துலாம் நட்சத்திரம் தேய்பிறை

கடன் தீர்க்க நல்ல நாட்கள்

ஆகஸ்ட் 3,4,6,9,10,14,17,19, 24, 27, 29

ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆகஸ்ட் 3,4,5,6,7,9,14,17 நல்ல நாட்கள்.

English summary
Each festival in India is celebrated in its own unique way according to their! Here is a list of important days in August 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X