For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay

நாம் சாப்பிடும் உணவு நமக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். சிலருக்கு பசிக்காக சாப்பிடுவார்கள் சிலர் ருசிக்காக சாப்பிடுவார்கள். உணவு எல்லோருக்கும் பசியாற கிடைக்க வேண்டும் என்பதற்காகவே

Google Oneindia Tamil News

சென்னை: நாம் உண்ணும் உணவுதான் கடவுள். பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எந்த உயிரினமாக இருந்தாலும் சரி அதற்கு உணவு கொடுப்பது புண்ணியம். உலக உயிர்கள் அனைத்திற்கு உணவு கிடைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உணவு தினமாக கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஜாதகப்படி உணவை வீணாக்குபவர்கள் யார் என்று என்றும் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த உணவு பிடிக்கும் ருசிக்காக சாப்பிடுபவர்கள் யார் பசிக்காக சாப்பிடுபவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் பல கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 20 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும், பசியால் யாரும் வாடக்கூடாது, உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் உலக உணவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் தொடங்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு ஐநா சபையின் 20வது பொது மாநாட்டில் அக்டோபர் 16ஆம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. 40 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்

வீணாகும் உணவு

வீணாகும் உணவு

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். திருமண மண்டபங்கள், விருந்து நடைபெறும் இடங்கள், கேளிக்கை விடுதிகளில் சராசரியாக ஐம்பது முதல் 100 பேர் உண்ணும் அளவிலான உணவுப்பொருள் வீண் செய்யப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாடம் பல டன் உணவுகளை தெரிந்தோ தெரியாமலேயே வீண் செய்கின்றனர். இவை அனைத்திற்குமே உணவுப் பொருள் குறித்த விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதே. உணவை வீணாக்காமல் இருந்தாலே பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும்.

உணவு வீணாவது எப்படி

உணவு வீணாவது எப்படி

எப்போதும் வீட்டிலிருக்கும் வரை நமக்கு நம் அன்னையிடும் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வேலைக்காகவோ படிப்பிற்காகவோ வெளியூர் சென்று தங்க நேர்ந்தால் வீட்டு சாப்பாட்டின் அருமையும் அம்மாவின் பெருமையும் தெரியும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்களை வீணாக்குவார்களாம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான, காரமான சாப்பாடு வகைகளைக் கூட வீணாக்கி விடுவார்.

பழங்கள் வீணாகும்

பழங்கள் வீணாகும்

ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுப கிரகத்தின் தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். மேலும் தேவைக்கு அதிகமாக நொறுக்கு தீனிகளை வாங்கி வீணடிப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டாம் வீட்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகளையும், பழங்களையும் வீணடிப்பார்.

ருசியான உணவுகள்

ருசியான உணவுகள்

சூடாகவும் சுவையாகவும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மேஷ ராசிக்காரர்கள். வேகமாக சாப்பிட்டு விடுவார்கள். இனிப்பு, துவர்ப்பு காரமான உணவுகள் ரொம்ப பிடிக்கும். அதே நேரம் ரிஷப ராசிக்காரர்கள் அறுசுவை உணவுகளையும் ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிடுவார்கள். இனிப்பு, உவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்குமாம்.

உணவும் தண்ணீரும்

உணவும் தண்ணீரும்

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இனிப்பு, துவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்கும் குடும்பத்தோடு சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவார்கள். கடக ராசிக்காரர்கள் ரொம்ப டேஸ்டா ஹைஜீனிக்காக சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டில் சமைத்து சுடச்சுட சாப்பிடுவார்கள். பக்கத்தில் தண்ணீர்பாட்டில் ரெடியாக இருக்க வேண்டும் அப்போதான் உணவு உள்ளே இறங்கும்.

சுவையோ சுவை

சுவையோ சுவை

சிம்ம ராசிக்காரர்கள் வெரைட்டியாக சாப்பிடுவார்கள். ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் ரொம்ப டேஸ்ட்டா இருக்குப்பா என்று பாராட்டிக்கொண்டே சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சூடாகவும் காரகமாகவும் சாப்பிடுவார்கள். ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இனிப்பு துவர்ப்பு பிடிக்கும். அதுவும் தனியாகத்தான் சாப்பிடுவார்கள். இவர்கள் தான் தின்னி தனிக்காட்டு ராஜாக்கள்.

உணவு வீணாகாது

உணவு வீணாகாது

துலாம் ராசிக்காரர்களும், விருச்சிக ராசிக்காரர்களும் உணவுக்கு மரியாதை கொடுப்பார்கள். உணவை வீணாக்க மாட்டார்கள். பழைய உணவைக்கூட பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். ஊறுகாய், காரமான உணவுகள் பிடிக்கும். இனிப்பு துவர்ப்பு ரொம்ப பிடிக்கும். அதே போல செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் பசிக்காக சாப்பிடுவார்கள். சூடாகவும் அதே நேரம் துவர்ப்பு சுவையுள்ள உணவும் ரொம்ப பிடிக்குமாம்.

கசப்பு ரொம்ப பிடிக்கும்

கசப்பு ரொம்ப பிடிக்கும்

தனுசு ராசிக்காரர்களுக்கும் மகரம் ராசிக்காரர்களுக்கும் கசப்பு ரொம்ப பிடிக்கும். நன்றாக பசித்த பின்னர் வேகமாக மென்று சாப்பிடுவார்கள். காய்கறிகள், கீரை, பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதே போல கசப்பு சுவை ரொம்பவே பிடிக்கும் பழைய உணவு கூட ரொம்ப பிடிக்கும் உணவு வீணாகாது.

சுவையான உணவு

சுவையான உணவு

கும்பம் ராசிக்காரர்களுக்கு பல ஊர் உணவுகள் ரொம்ப பிடிக்கும் தேடி தேடி ருசியாக சாப்பிடுவார்கள். உண்ட மயக்கம் அப்படியே ரெஸ்ட் எடுப்பது பிடிக்கும். அறுசுவையும் அற்புதமாக சரி சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே போல மீனம் ராசிக்காரர்கள் சூடாக சாப்பிடுவார். வேகமாக சாப்பிடுவார். காரம், இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு ரொம்பவே பிடிக்கும்.

English summary
According To Astrology food connection with your zodiac sign. Food link with Rasi. Some people like to stick to one favorite food and pretty much only ever eat that But whether or not you have one favorite food or a hundred, it probably falls into one of two categories healthy and not so healthy.Rice is an important ce
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X