For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க அறிவாளியா? கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கா? - உங்க கால் பெருவிரல் ரேகை சொல்லும் ரகசியம்

ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால் அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந்தால் அவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வர்.

Google Oneindia Tamil News

மதுரை: பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல் பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்படையும், புகழையும் பெறுவர் என்பது நிச்சயம். கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றவை என்பது கண்கூடான உண்மை. ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால் அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந்தால் அவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள் என்கிறார் ஆராய்ச்சியாளர் ஸ்ரீவிஜய் ஸ்வாமிஜி

ஆசியாவிலேயே மிகப் பெரிய வைரவர் ஆலயத்தை, ஈரோடு மாவட்டம்அவல்பூந்துறை அருகே, உள்ள இராட்டைசுற்றிபாளையத்தில் கட்டி வருகிறார் ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி. கால் கட்டை விரல் ரேகைகளின் அம்சம் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். பல்வேறு மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற கால் பெருவிரல் அச்சு ரேகைகளை எடுத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது. அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் ஏற்பட்டதே இந்த கால் பெருவிரல் கை ஜோதிடம்.

ஒவ்வொரு மனிதனின் விதி,அவன் உடல் சார்ந்த தெய்வம், எந்தத் தொழிலை அவர் செய்தால் மேன்மையடையலாம், அதன் மூலம் அவருடைய வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய பலன்கள் அனைத்தும் அவருடைய கால் பெருவிரல் ரேகையில் மட்டுமே உள்ளது. இது பல்வேறு மனிதனின் கால் பெருவிரல் ரேகைகளைப் பதிவு செய்து ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை.

பங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும் பங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும்

 வாழ்க்கையை நிர்ணயிக்கும் கோடுகள்

வாழ்க்கையை நிர்ணயிக்கும் கோடுகள்

கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றவை என்பது கண்கூடான உண்மை. கால் பெருவிரல் ரேகையை எடுத்து ஒவ்வொரு கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், எதிர்காலத்தன்மையும் கூறக்கேட்டு அவர்கள் அடைந்த முன்னேற்றங்களை நேரில் வந்து சொல்லிச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதை பிறருக்கும் கூறுவதால் அன்றாடம் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர் என்பதே இதற்கு சாட்சி.

 கால் பெருவிரல் ரேகை கோடுகள்

கால் பெருவிரல் ரேகை கோடுகள்

கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கொடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.

பணவரவு அதிகரிக்கும்

பணவரவு அதிகரிக்கும்

ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சுரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை.

வளமான வாழ்க்கை

வளமான வாழ்க்கை

வாகைக்கோடுகள் அமையப்பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் இரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.

கோடீஸ்வர யோகம்

கோடீஸ்வர யோகம்

ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந்தால் அவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வர். கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கொடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.

புகழ் கிடைக்கும்

புகழ் கிடைக்கும்

கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அல்லது சுரியக்கோடுகள் பெற்றிருந்தால் புகழ் அடைவார்கள். ஆண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கோமுகம் பெற்று சந்திரக்கோடுகள்அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச்செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.

பரிகாரம் இருக்கு

பரிகாரம் இருக்கு

கால் பெருவிரலில் உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், இராசிகளுக்கும், நன்மையையும், தீமைகளையும் கொடுக்ககூடியது. கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூஜைப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பௌர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை ஒளிமயமாகும்.

 பிரச்சினைகளுக்கு தீர்வு

பிரச்சினைகளுக்கு தீர்வு

கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? - இல்லையா? என்பதையும் கணிக்க முடியும். இக்கணிப்பில் யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில்,வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களுக்கும், திருமணம் தடைபட்டவர்களுக்கும், குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழி கிடைக்கும் என்கிறார் ஸ்ரீவிஜய் ஸ்வாமிஜி. கட்டை விரல் ரேகை பற்றியும் ஜோதிடம் பற்றியும் அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 9842499006,9443351497

English summary
Foot thump print and astrology, know the nature according to foot print World Famous Foot Print Astrologer Sri Vijaai Swamiji The founder of Sri Bairava foundation is specialized in foot thumb Astrology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X