For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

படிப்பு, பதவி, சொத்து... அகங்காரம் யாருக்கு ஏற்படும் தெரியுமா?

சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.

By Staff
Google Oneindia Tamil News

அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஜோதிடத்தில் அகங்காரத்தையும் மம காரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகங்காரத்தையும் மம காரத்தையும் குறிக்கும் பாவம் லக்னபாவம் என குறிப்பிடுகிறது.

சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.

ஜோதிடத்தில் அகங்காரமும் மமகாரமும்:

ஜோதிடத்தில் அகங்காரமும் மமகாரமும்:

ஒருவர் ஜாதகத்தில் சூரியனது வீடு லக்னமாகவோ, ராசியாகவோ அமைந்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் சூரியன் ஆத்மகாரகனாக அமைந்துவிட்டாலும் லக்னத்திற்க்கு சூரியன் பார்வை பெற்றுவிட்டாலும் அவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு அகங்காரம் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் சூரியனை குரு பார்த்துவிட்டாலும் குருவை சூரியன் பார்த்துவிட்டாலும் அகங்காரம் தகர்ந்துவிடும்.

சூரியன் எந்த கிரகத்தில் நிற்கிறது என்பதை பொருத்தும் எந்த கிரகத்தோடு சேர்க்கை பெறுகிறது என்பதை பொறுத்தும் அகங்காரம் அமைந்துவிடுகிறது.

சூரியன் புதன் சுக்கிரன் இம்மூன்றும் முக்கூட்டு கிரகங்கள் எனப்படும். இவை மூன்றும் குறிப்பிட்ட பாகையில் இடைவிடாமல் ஒன்றைஒன்று தொடர்ந்து இணைந்தே செல்லும்.

புதன் சூரியன் சேர்க்கை

புதன் சூரியன் சேர்க்கை

ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அறிவு சார்ந்த கர்வம் மற்றும் அகங்காரம் ஏற்பட்டுவிடும். உலகில் உள்ள 95 % பேருக்கு இந்த புத ஆதித்ய யோகம் அமைந்துவிடும். அனைவருக்கும் கல்வியறிவு பெறவேண்டும் எனும் இறைவனின் கருனையால் ஏற்பட்ட இந்த யோகம் உலகில் பலரையும் அகங்காரத்தோடு விளங்க காரணமாகிவிடுகிறது.

அகங்காரத்தின் விளைவு

அகங்காரத்தின் விளைவு

புத ஆதித்ய யோகத்தினால் அனைவருக்கும் அகங்காரம் ஏற்பட்டாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் புதன் நிற்கும் நிலையை பொறுத்து அங்காரத்தின் விளைவுகள் மாறுபட்டு அமைந்துவிடும். இன்று சமூகத்தில் கல்வியில் சிறந்தவர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள் இவர்களுக்குள் எப்போதும் ஒரு கர்வ நிலை இருப்பதற்கு இதுவே ஒரு காரணமாகிவிடுகிறது.

செல்வத்தினால் கர்வம்

செல்வத்தினால் கர்வம்

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு செல்வ செழிப்பினால் கர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. சூரியனை கடந்து சுக்கிரன் நின்று சுப வெசி யோகம் ஏற்படும்போது அவர்களுக்கு செல்வ உயர்வு நிலை ஏற்படுவதோடு செல்வத்தால் சிறிது செறுக்கு ஏற்படவும் தவறுவதில்லை.

சூரியன் உச்சம்

சூரியன் உச்சம்

சூரியனுடன் சேரும் கிரகத்தை பொருத்து அமையும் அகங்காரத்தின் தன்மை:

சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.

கர்வம் தரும் பாடம்

கர்வம் தரும் பாடம்

சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் அமாவாசை யோகமும் பௌர்ணமி யோகமும் பல பதவிகளை தந்து உயர்வை ஏற்படுத்தினாலும் பதிவியினால் சிறிது அகங்காரத்தையும் தந்துவிடுகிறது.

சொத்து சேர்க்கை

சொத்து சேர்க்கை

சூரியன்-செவ்வாய் சேர்க்கை நிலம் சொத்து ரியல் எஸ்டேட் ஆகிய விஷயங்களில் அகங்காரம் மற்றும் மம காரத்தை ஏற்படுத்திவிடுகிறது. சூரியன் புதன் சேர்க்கை கல்வியறிவு, வியாபாரம் ஆகியவற்றின் காரணமாக அகங்காரம் அமைந்துவிடுகிறது.

ஆன்மீகத்தில் கர்வம்

ஆன்மீகத்தில் கர்வம்

சூரியன் குரு சேர்க்கை உயர்நிலை ஆன்மீகத்தை தந்தாலும் இருவரில் ஒருவர் 6/8/12 அதிபதிகளாகிவிட்டால் ஆன்மீகத்தில் கர்வம் ஏற்பட காரணமாகிவிடுகிறது.

சூரியன் நீசம்

சூரியன் நீசம்

சூரியன் சுக்கிரன் இணைவு பணம், செல்வ நிலை பெண்கள் ஆகியவற்றில் செழிப்பை ஏற்படுத்தி அகங்காரத்தால் பிரச்சனைகளையும் தந்துவிடுகிறது. சூரியன் சுக்கிரனின் வீட்டில் நீசமடைந்துவிடுவதால் சுக்கிரனோடு இணைவு கர்வ பங்கத்தை ஏற்படுத்திவிடும்.

சூரியனோடு சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் இணைவு சூரியனுக்கு நீச நிலையே ஏற்படுத்தி கர்வ பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

அகங்காரம் நீங்க பரிகாரங்கள்:

அகங்காரம் நீங்க பரிகாரங்கள்:

அகங்காரம் ஒழிய ஆன்மீகமும் தண்டனையும் வழிசெய்கிறது. எல்லா நேரங்களில் தண்டனை ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆன்மீக வழி சிறந்தது என ஏற்று கொள்ளபட்டிருக்கிறது.

ஆன்மீக வழியில் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் ஜ்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தையே" என குட்டிக்கொள்வதும் தோபிகரணம் எனும் யோக பயிற்சியும் செய்வது அகங்காரத்தை அழிக்கும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது.

கேதுவிற்க்கு அதிதேவதை விநாயகர் என்பதும் சூரியனோடு கேது சேர்க்கை கர்வபங்கம் ஏற்படும் என மேலே குறிப்பிட்டிருப்பதை இங்கு ஞாபக படுத்த விரும்புகிறேன்.

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். சைவம் மற்றும் வைணவத்தை ஒருங்கிணைக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் எங்கும் இல்லாத புதுமையாக சிவலிங்கம் இருக்கும் ஆவுடையாரின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் 108 திவ்ய தேசங்களில், 107-வது தலமாக திகழ்கிறது.

இந்த ஆலயம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. ஒரு முறை, சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவரது ஒளியும், அவரது கலைகளும் மறையத் தொடங்கின. இதைக் கண்டு வேதனையடைந்த சந்திரனின் மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, இந்த தலம் வந்து பெருமாளை வணங்கி, தவம் செய்தாள். இதையடுத்து பெருமாள் நேரில் காட்சி தந்து, சந்திர பகவானுக்கு சாபவிமோசனம் அளித்து அருள்புரிந்தார். அது முதற்கொண்டு இந்த தலம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. இங்கு தரிசிப்போருக்கு சந்திராஷ்டம தோஷங்கள், மன குழப்பங்கள், நட்சத்திர தோஷங்கள், செவ்வாய் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

English summary
Do you know the difference between your true self and your ego? Many people don’t. In fact, they don’t even realize that there is a difference between the two. The Ego is a little difficult for most people to identify. Most literature on it identifies symptoms of the Ego without really cutting to the core. The literature identifies arrogance, stubbornness, fear of judgement, fear of failure, amongst others, but it misses the key point.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X