For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தி ஜெயந்தி நாளில் தன்வந்திரி பீடத்தில் மனித நேய மஹா ஹோமம்

தன்வந்திரி பீடத்தில் சேவை செய்யும் சேவார்த்திகள், தன்வந்திரி குடும்பத்தினர்கள், வருகை புரியும் பக்தர்கள், இதர நபர்கள், அர்ச்சகர்கள் அனைவரும் மனித நேயத்தை கடை பிடித்து கடமையாற்ற வேண்டும்

Google Oneindia Tamil News

வேலூர்: கடவுளுக்கு சேவை செய்யும் பாக்யம் கிடைத்த நாம், அவருடைய பக்தர்களையும் மதிக்க கற்று கொள்ள வேண்டும். தேடி வரும் பக்தர்களுக்கும், சேவார்த்திகளுக்கும், பார்வையாளர்களுக்கும் நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் நமது செயல்பாடுகள், எண்ணம், பேச்சு, பணிவு ஆகியவை மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 02.10.2019 புதன்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதநல்லிணக்கம் வேண்டியும், மனித தர்மம் வளரவும், மனித நேயம் சிறந்து விளங்கி தீமைகள் களைய காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி மனித நேய மஹா ஹோமம் நடைபெறுகிறது.

மனித நேயம் பொதுவானது. ஆனால், இறை சேவையில் உள்ளவர்களுக்கும் மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் சற்று வித்தியாசம் உள்ளது. மக்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு தேடியே கடவுளையும், குரு மஹான்களையும் நாடி வருகின்றனர். கோவில், ஆசிரமம், சன்னிதானம், பீடம், மடம், போன்ற பல்வேறு ஆன்மீக இடங்களுக்கு வருபவர்களுக்கு அமைதியும், அன்பான உபசரிப்பும் தேவை.

Gandhi jayanthi Maha homam at Sri Dhanvantri peedam

கடவுளுக்கு சேவை செய்யும் பாக்யம் கிடைத்த நாம், அவருடைய பக்தர்களையும் மதிக்க கற்று கொள்ள வேண்டும். தேடி வரும் பக்தர்களுக்கும், சேவார்த்திகளுக்கும், பார்வையாளர்களுக்கும் நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் நமது செயல்பாடுகள், எண்ணம், பேச்சு, பணிவு ஆகியவை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்.

நம்மிடம் வரும் பக்தர்களை அன்போடு வரவேற்று, அவர்களுக்கு உதவிட வேண்டும். புனித இடம் என்பது தூய்மையாகவும் இருக்க வேண்டும். நாமும் அப்படியே இருக்க கற்று கொள்ள வேண்டும். உரிய முறையில் வரும் பக்தர்களுக்கு பூஜைகள், யாகங்கள், பிரார்த்தனைகள், ஜெபங்கள், அலங்காரங்கள், ஆகியவை அவரவர்கள் சம்பிரதாயப்படி நடத்திக்கொடுக்க உரிய முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இதனை மனதில் கொண்டு தன்வந்திரி பீடத்தில் சேவை செய்யும் சேவார்த்திகள், தன்வந்திரி குடும்பத்தினர்கள், வருகை புரியும் பக்தர்கள், இதர நபர்கள், அர்ச்சகர்கள் அனைவரும் மனித நேயத்தை கடை பிடித்து கடமையாற்ற வேண்டும் என்ற வகையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மனித நேய மஹா ஹோமம் நடைபெறுகிறது.

தாய் எனும் அன்பும், சேய் என்னும் அருளும் இருந்தால் மட்டுமே ஜீவகாருண்யத்தைப் போற்ற முடியும். இன்றைய நாகரீக வளர்ச்சியில் மனிதநேயம் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, இக்காலச் சூழலில் மனிதன் மற்ற உயிர்களையும், தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் நேசிக்கும் மாண்பு அதிகரிக்கவும், நேசம் பாசம், மற்று அனைத்து உயிர்கள் மீதும் ஏற்படவும், ஈகையாகவும், கருணை, பரிவு அதிகம் ஏற்பட்டு புனிதம் சேர்க்கவும் இயற்கையை நேசிக்கவும், மனிதன் தன்னையும், தன்னைப் போன்ற பிற உயிர்களையும் நேசிக்கவும் இந்த யாகத்தில் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

அன்பையும், அருளையும் கொடுத்து நேசிக்கும் பண்புள்ளவனே மனிதன். மற்ற உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் மனப்பக்குவம்தான் இன்னும் மனிதனைத் தன் நிலையிலிருந்து தாளாமல் மனிதனாகவே அடையாளம் காணப்படுகிறது. மனிதர்களின் சுக துக்கங்களையும் உள்வாங்கி அதனைத் தனதாக்கிக் கொண்டு உணர்தல் வேண்டும். இதுவே தன்மையும் மற்ற உயிர்களையும் பேணிப் பாதுகாக்கும் பண்பாக கொள்ளப்படுகின்றது. ஜாதி மதங்களுக்கு அப்பால்பட்டது வறுமைகளும் நோய்களும் துன்பங்களும். இத்தகைய தோஷங்கள் உள்ளவர்கள் விரைவில் நலமடையவும், மனித தர்மம், மனிதநேயப் பண்பு வலுப்பெறவும், காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் மனிதநேய மஹா யாகத்தில் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானை பிரார்த்திப்போம்.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்க தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

English summary
Gandhi jayanthi Maha Danvantri Homam at Sri Danvantri Arokya peedam, Walajapet Vellore District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X