For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி செய்தால் உங்க பிள்ளைகளின் புத்திக்கூர்மை அதிகமாகி தேர்வில் நல்ல மார்க் வாங்குவாங்க

தேர்வு நேரம் நெருங்கி விட்டது படிச்சது மறந்து போச்சே என்று பல மாணவர்கள் பதறுவார்கள். அந்த டென்சனிலேயே தேர்வு எழுதுவதில் கவனம் செலுத்த முடியாது. மாணவர்களின் மன அழுத்தம் நீங்கி தேர்வில் நல்ல மதிப்பெண்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்வு காலம் நெருங்கிவிட்டது. பிள்ளைகள் பலரும் தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து வருகின்றனர். சிலருக்கு பதற்றமும், பயமும் தொற்றிக்கொள்ள படித்தது மறந்து போச்சே என்று அழத்தொடங்கிவிடுவார்கள். பிள்ளைகளின் பயத்தையும் பதற்றத்தையும் போக்க சிறந்த பரிகாரம் உள்ளது. மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த கோமதி சக்கரத்தை நெற்றியில் வைத்து பிரார்த்தனை செய்தால் பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகமாகும் பதற்றம் நீங்கும் என்பது நம்பிக்கை. கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளியிருக்கிறார். கோமதி சக்கரத்தை நம்முடைய வீட்டில் வைத்து வணங்குவதன் மூலம் அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், உஜ்ஜயினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.

லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கோமதி சக்கரம்

கோமதி சக்கரம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.

வாஸ்து கோளாறுகள் நீங்கும்

வாஸ்து கோளாறுகள் நீங்கும்

பணக்காரர்கள் வீடுகளில் கோமதி சக்கரம் வாங்கி வைத்திருப்பார்கள். கோமதி சக்கரத்தை பூஜையில் வைத்து பிரார்த்தனை செய்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். கோமதி சக்கரம் வீட்டில் வைத்திருந்தால் நிறைய மாற்றங்கள் வரும். கோமதி சக்கரம் வாங்கி வீட்டின் பூஜை ரூமிலும் பீரோவிலும் வைத்திருந்தால் பண பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும். நமது வீட்டில் வாஸ்து கோளாறுகள் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை

வெற்றி தரும் சக்கரம்

வெற்றி தரும் சக்கரம்

நாம் ஒரு காரியத்திற்காக வெளியே செல்லும் போது பாக்கெட்டில் இரட்டைப்படை எண்ணிக்கையில் கோமதி சக்கரத்தை வைத்துக்கொண்டு போனால் வெற்றிகள் தேடி வரும். பிசினஸ் விசயமாக யாரையாவது சந்திக்க சென்றால் கோமதி சக்கரத்தை இரட்டைப்படை எண்ணிக்கையில் கோமதி சக்கரத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு போகலாம்.

கண் திருஷ்டி நீங்கும்

கண் திருஷ்டி நீங்கும்

வாஸ்து கோளாறுகள் நீங்கி வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள். 11 கோமதி சக்கரம் எடுத்து குல தெய்வத்தின் முன் வைத்து வணங்க வேண்டும் மஞ்சள் துணியில் முடிந்து நிலை வாசலுக்கு வெளிப்பக்கமாக கட்ட வேண்டும். திருஷ்டிகள் நீங்கும். வாஸ்து கோளாறுகள் நீங்கி அந்த மனையில் வீடு கட்டலாம். அதிக கண் திருஷ்டியால் நோய் ஏற்பட்டு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் 3 கோமதி சக்கரத்தை எடுத்து தலையில் வைத்து திருஷ்டி கழித்து தூர வீசி விட வேண்டும்.

தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை

வீட்டில் நாம் சமைக்கும் பொருட்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைத்தால் 11 கோமதி சக்கரத்தில் மஞ்சள் துணியில் முடிந்து அரிசி டப்பாவில் போட்டு வைக்கலாம். குறைவில்லாத அரிசி நிறைந்திருக்கும். சிலரது வீடுகளில் கணவன் மனைவி பிரச்சினை அதிகமாக இருக்கும். சிலரோ விவாகரத்து வரைக்கும் சென்று விடுவார்கள். 11 கோமதி சக்கரத்தை எடுத்து சிவப்பு நிற துணியில் கட்டி பூஜை அறையில் வைக்கலாம். இதன் மூலம் கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஒற்றுமை ஏற்படும்

மாணவர்களுக்கு பரிகாரம்

மாணவர்களுக்கு பரிகாரம்

குழந்தையுடைய ஞாபக சக்தி திறன் மிகவும் குறைவாக உள்ளது. படிப்பில் அதிக கவனம் இருப்பதில்லை. கோமதி சக்கரத்தில் உள்ள சுழி குழந்தைகளின் மூளை செயல்படும் தன்மையை சீர்படுத்த முடியும் என்று சித்தர்கள் அருளியுள்ளனர். கோமதி சக்கரத்தை குழந்தைகளின் இரு புருவத்திற்கும் மத்தியில், பொட்டு வைக்கும் இடத்தில் அரை மணிநேரம் வைத்துவிட வேண்டும். ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம். இரண்டு, மூன்று வயது குழந்தைகள் எல்லாம் விழித்திருக்கும்போது இப்படி செய்தால் ஏற்றுக்கொள்ளாது. தூங்கும் சமயத்தில் அரை மணி நேரம் நெற்றிப்பொட்டில் நடுவில் இந்த சக்கரத்தை வைத்து விடுங்கள்.

அதிக மதிப்பெண் பெறலாம்

அதிக மதிப்பெண் பெறலாம்

சில குழந்தைகள் அதிக வேகத்தோடு இருப்பார்கள். சில குழந்தைகள் மந்த புத்தியோடு இருப்பார்கள். குழந்தைகளின் அதி வேகத்தை கட்டுப்படுத்தவும் மந்த புத்தியை நீக்கவும் இந்த கோமதி சக்கரம் உதவுகிறது. மூளையை தூண்டி நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் படித்தது மறக்காமல் தேர்வில் நன்றாக எழுத முடியும். அதிக மதிப்பெண்களும் பெறலாம்.

கோமதி சக்கரத்தை பரிசாக கொடுங்க

கோமதி சக்கரத்தை பரிசாக கொடுங்க

கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது நல்லது. உறவினர்களுக்கு அன்பளிப்பாகவும் கொடுக்கலாம்.

English summary
Found in the Gomati River, the Gomati chakra stones are popular remedies for many problems people face in their day to day lives.Gomati Chakra looks like the Sudarshan Chakra or Discus of Lord Krishna
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X