For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதுகம்மா திருவிழா: ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தராராஜன் கும்மியடித்து கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் மாளிகையில் பதுகம்மா திருவிழாவை கும்மியடித்து கொண்டாடிய தமிழிசை சௌந்தராராஜன்-வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை 'பதுகம்மா பண்டிகை' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் உற்சாகமாக மலர்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். தெலுங்கானாவில் ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதுகம்மா விழாவை உற்சாகமாக கொண்டாடினார். உள்ளூர்மக்களுடன் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் பதுகம்மா விழாவை பாரம்பரியமான முறையில் மலர்களால் அலங்கரித்து கொண்டாடினர்.

    நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். பாடல்களைப் பாடி சுண்டல் படைத்து அம்மனை அழைக்கின்றனர். ஆடல் பாடல்கள் களைகட்டும்.

    தெலுங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

    பதுகம்மா பண்டிகை

    பதுகம்மா பண்டிகை

    தெலுங்கானாவில் பித்ருபட்சம் அமாவாசை தொடங்கி துர்காஷ்டமி வரை கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் சதுலா பதுகம்பா, பெட்ட பதுகம்மா என்று கொண்டாடுகின்றனர். மலர்களை அழகாக அலங்கரித்து காவல் தெய்வமான மகா கவுரியை வழிபடுகின்றனர். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ஆளுநர் மாளிகையில் மலர்குவியல்களை அலங்கரித்து பெண்களுடன் கும்மியடித்து அம்மனை வணங்கினார்.

    அடுக்கான மலர்கூட்டம்

    அடுக்கான மலர்கூட்டம்

    அழகாக மலர்களை அடுக்கி வைத்து அம்மனே வருக என்று அழைக்கின்றனர். இந்த விழாவின் போது பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு நகைகளை அணிந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தெலுங்கானாவில் இந்த பண்டிகை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது.

    குஜராத்தில் நவராத்திரி

    குஜராத்தில் நவராத்திரி

    நவராத்திரி பல மாநிலங்களில் பலவிதமாக கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் தாண்டியா ஆட்டம் களைகட்டும். மகா சக்தி வழிபாடு செய்வார்கள். ஆண்களும் பெண்களும் தாண்டியா ஆடி மகிழ்ச்சியடைவார்கள்.

    மகாராஷ்டிராவில் பரிசுகள்

    மகாராஷ்டிராவில் பரிசுகள்

    மகாராஷ்டிராவில் நவராத்திரி பண்டிகை சமயத்தில் புதிய சொத்துக்களை வாங்குவார்கள. திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து ஆசி வழங்குவதோடு பரிசுகளை கொடுத்து அனுப்புவார்கள். இரவு நேரங்களில் தாண்டியா நடனமாடுவார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஒன்பது நாட்களும் விழா களைகட்டும். ஒன்பது கன்னிப்பெண்களை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து பரிசுகளை கொடுப்பார்கள்.

    கங்கையில் துர்கா

    கங்கையில் துர்கா

    நாட்டின் சில பகுதிகளில் துர்காபூஜையாக கொண்டாடுகின்றனர். மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த துர்க்கையை கொண்டாடுகின்றனர். உயரமான துர்கா சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் கங்கையில் கரைக்கின்றனர். அசுரனை வதம் செய்து விட்டு அன்னை இமயமலைக்கு திரும்பி செல்வதாக ஐதீகம். மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் துர்கா பூஜை பிரசித்தம். அதே போல ஹிமாசலபிரதேசத்ல் குல்லு துஸ்ரா என்று கொண்டுகின்றனர். ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாளே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    English summary
    Telangana Governor Tamilisai Soundararajan on Monday kick started the week long Bathukamma celebrations at Raj Bhavan Hyderabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X