For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனீஸ்வர பகவானும் சரக்கு மற்றும் சேவை வரியும்!

இன்று காலையில் காபி குடித்தார்ககளோ இல்லையோ! ஆனால் ஜிஎஸ்டி பற்றி பேசாதவர்களே இருக்கமுடியாது.

By Staff
Google Oneindia Tamil News

அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: இன்று முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இன்று காலையில் காபி குடித்தார்களோ இல்லையோ! ஆனால் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியைப் பற்றி பேசாதவர்களே இருக்கமுடியாது.

Gst Is Implementing From 1st July 2017 All Over India

ஜிஎஸ்டி:

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி. இது ஒரு மதிப்பு கூடுதல் வரியாகும். ஜிஎஸ்டியின் மூலமாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநிலங்களின் இரண்டு சமமான கூறுகளை கொண்டதுதான் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி வரி பணம் நுகர்வோருக்கு சொந்தமாகும்.

Gst Is Implementing From 1st July 2017 All Over India

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அனைத்து பொருட்கள் மற்றும் சர்வீஸ்களுக்கும் பொருந்தும். தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு ஒரு வரியின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் ஜிஎஸ்டி.

ஜோதிடமும் வரியும்:

இந்த ஜிஎஸ்டி மற்றும் பலவித வரிகளுக்கும் ஜோதிடத்தில் இடமிருக்கிறதா என்றால் இருக்கிறது என கூறுகிறது பாரம்பரிய ஜோதிடம். அனைத்துவிதமான வரிகளுக்கும் காரகர் இன்றைய நாயகர் சனைஸ்வர பகவான் என கூறுகிறது பாரம்பரிய ஜோதிடம்.

வரியை குறிக்கும் பாவம் காலபுருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகமாகும். மேலும் பாவாத்பாவ முறையில் எட்டுக்கு எட்டாம் பாவம் எனப்படும் மூன்றாம் பாவம் ஆகிய மிதுனமும் அதன் அதிபதியும் வரியோடு தொடர்புடைய பாவம் மற்றும் கிரகமாகும்.

Gst Is Implementing From 1st July 2017 All Over India

சனி, எட்டாம் பாவம் அதன் அதிபதி மற்றும் அதில் இருக்கும் கிரகம் தொடர்பு கொள்ளும் கிரகம் ஆகியவற்றினை கொண்டு ஒருவர் செலுத்தும் வரியினை பற்றியும் வரியினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அறிய முடியும்.

புதன், மூன்றாம் பாவம், அதிபதி, அதோடு தொடர்புடைய கிரகம் ஆகியவற்றை கொண்டு வரி கணக்குகள், வரி குறித்த ஆவணங்கள், கடித போக்குவரத்துகள் ஆகியவற்றை பற்றி அறிய முடியும்.

ஜோதிடத்தில் விருச்சிக ராசியை கால புருஷனுக்கு எட்டாம் வீடு என கூறுவார்கள். நீர் ராசி. அதை விஷ ஜந்துக்கள் வாழும் ஆழ்கடலென்றும் கூறுவார்கள்.

அந்த விருச்சிக ராசியை ஒவ்வோரு கிரகமும் கடக்கும்போது தன் இயல்புநிலை மாறிதான் செயல்படுகின்றன. அப்பப்பா! கடந்த வருடம் கார்த்திகை மாதத்தில் கிரகங்கள் விருச்சிக ராசியைக் கடக்கும்போது நமக்கு எத்தனை எத்தனை பிரச்சனைகள்?

கடந்த வருடம் முழுவதும் சனி பகவான் விருச்சிகத்தில்தான் பயணம் செய்தார். அதன் விளைவாக ரூபாய் நோட்டு மாற்றம், வங்கிகளில் பிரச்சனை, வியாபார முடக்கம், பிரபலத்தின் மரணம், வர்தா புயல் என பல பிரளயங்களை ஏற்படுத்தியது மறக்க முடியுமா?

ஒருவழியாக உத்திராயணத்தின் ஆரம்பத்தில் தனுர் ராசிக்கு அதிசார கதியில் பிரவேசம் செய்தபின் பிரச்சினைகள் படிப்படியாக ஓய்ந்தது. அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. உத்திராயணம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த மாதம் 20ம் தேதி மீண்டும் வக்ர கதியில் விருச்சிக ராசிக்கே வந்துவிட்டார். 25/10/2017 வரை விருச்சிகத்தில்நான் இருக்கபோகிறார்.

செவ்வாயும் சனியும் சேர்க்கை பெரும்போதெல்லாம் பல பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கின்றன. இந்த நான்கு மாதகாலம் விருச்சிகத்தில் சனி பகவான் இருக்கும்போது ஜிஎஸ்டியால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி பல படிப்பினைகளை தந்து தர்மத்தை நிலைநாட்டிவிட்டு 26/10/2017அன்று 'இதுவும் கடந்துபோகும் என்று' என்னும்படியாக குருவின் வீட்டை அடைந்த உடன் பிரச்சனைகள் மறைந்து ஒரு நல்ல தீபாவளி அனைவருக்கும் அமையும் என்பது உறுதி!

வரி பிரச்சனைக்கான பரிகாரங்கள்:

1. வரியினால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வணங்க வேண்டிய தெய்வம் சனைஸ்வர பகவான்தான். அவரை திருநள்ளாறு, குச்சனூர், சனி சிங்கனாபூர் ஆகிய ஸ்தலங்களில் சென்று வணங்குவது வரியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

வரியினால் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் எல்லாம் அனைகமாக அஷ்டம சனி காலங்களில் மற்றும் லக்னத்திற்ககு எட்டில் சனி வரும்போது சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூன் 30 நள்ளிரவில் அமலானது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது

English summary
GST is a single tax on the supply of goods and services, right from the manufacturer to the consumer. The final consumer will thus bear only the GST charged by the last dealer in the supply chain, with set-off benefits at all the previous stages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X