• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருவுடன் சுக்கிரன் கூட்டணி சேர்ந்தால் என்ன பலன்கள் - பரிகாரங்கள்

|
  04-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

  சென்னை: நவ கிரகங்களில் குருபகவான் இயற்கை சுபர் தேவர்களுக்கு குருபிரகஸ்பதி. அதே போல மற்றொரு சுப கிரகமான சுக்கிரன் அசுரர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர். குரு வேத மந்திரங்களுக்கு எல்லாம் உரியவர். சுக்கிரன் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் மாந்திரீக தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர். குருபகவான் மனித வாழ்க்கையில் திருமணம், புத்திர பாக்கியம், ஆஸ்தி, சொத்து சுகம், முன்னோர்கள் நிலையான புகழ், அரசியல் வெற்றி, பொதுமக்கள் சேவை அனைவரும் விரும்பும் மனிதராக இருப்பது ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கிறார். குருவும் சுக்கிரனும் ஜாதகத்தில் இணைந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ என்ன பலன் என்று பார்க்கலாம்.

  சுக்கிர பகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்.

  சுக்கிரன் இல்லாமல் சுகங்கள் என்பது ஒருவருக்கு கனவிலும் கிடையாது. சுக்கிரன் என்றாலே யோகம்தான். 'வறிய நிலையில் இருப்பவரைக்கூட மாட மாளிகையில் தங்க வைத்து மூன்று வேளையும் அறுசுவை உணவும் எந்த நேரமும் கையில் பணமும் இருக்கச் செய்வார். போதாக்குறைக்கு சேவை செய்ய ஆட்கள், சொகுசு வீடு, சொகுசு வாகனம், துன்பம் இல்லாத மனம், பெண்கள் மூலம் ஆதாயம், பெண்கள் ஆதரவு, உல்லாச வாழ்வு, மது, மாமிச வேட்கை, வைரம் ,வைடுரீயம் அணிதல், அரசனுக்கே உதவி செய்தல், ஊரே மெச்சும் அளவில் வாழ்தல் ஆகியவற்றுக்கு சுக்கிரன் காரகத்துவம் பெற்று பொறுப்பேற்கிறார். எதிரியின் வீடான குருவின் வீட்டில் மீனம் ராசியில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான்.

  விருச்சிகத்தில் குரு சுக்கிரன்

  விருச்சிகத்தில் குரு சுக்கிரன்

  இப்போது சிம்ம ராசியில் உள்ள சுக்கிரன் இன்னும் சில நாட்களில் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செப்டம்பர் இறுதியில் துலாம் ராசியில் ஆட்சியில் அமரும் சுக்கிரன், அக்டோபர் இறுதியில் விருச்சிக ராசியில் உள்ள குரு உடன் இணையப்போகிறார். இந்த கூட்டணி 12 ராசிக்காரர்களுக்கு சில மாற்றங்களை ஏற்படுத்தும். மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவோடு எட்டாவது வீட்டில் சுக்கிரனும் மறைவதால் உங்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். முக்கிய முடிவுகளை ஒத்திப்போடுவது நல்லது. ரிஷப ராசிக்கு 7வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைவதால் தேவையில்லாத பேச்சுக்களில் நேரத்தை செலவிட வேண்டாம். பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

  காதல் மலரும் காலம்

  காதல் மலரும் காலம்

  மிதுனம் ராசிக்காரர்களுக்கு 6வது வீட்டில் குருவுடன் சுக்கிரன் இணைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். தனிமையாக உணர்வீர்கள். கடகம் ராசிக்காரர்களுக்கு மனது முழுக்க காதல் உணர்வுகள் நிரம்பி வழியும். 5வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து இருப்பதால் காதலர்கள் இணைந்து இருக்கக் கூடிய காலம் இதுவாகும். சிம்மம் ராசிக்காரர்களுக்கு 4வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணையப்போவதால் பயணங்களினால் பலன் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. காதலர்கள் பொறுமையாக இருங்க.

  பணவரவு அதிகரிக்கும்

  பணவரவு அதிகரிக்கும்

  கன்னி ராசிக்காரர்களே முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணையப்போகின்றனர். சிறு பயணங்களால் பலன்கள் கிடைக்கும். உங்களைப் பற்றி புறம் பேசுபவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீடான லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் இணையப்போவதால் குடும்பம், பணம் விசயங்களில் சாதகமான செயல்களால் நன்மைகள் நடக்கும். விருச்சிக ராசிக்காரர்களே உங்க ஜென்ம ராசியில் குரு உடன் சுக்கிரன் இணையப்போவதால் பிரிந்து சென்ற உறவுகள் இணையும் காலம் இது. சந்தோஷ தருணங்கள் அதிகம் நடைபெறும் காலம்

  குதூகலமாக இருப்பீங்க

  குதூகலமாக இருப்பீங்க

  தனுசு ராசிக்காரர்களே விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குரு, சுக்கிரன் இணையப்போவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மகரம் ராசிக்காரர்கள லாப ஸ்தானத்தில் குருவும், சுக்கிரனும் இணைவதால் தம்பதியரிடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். கும்பம் ராசிக்காரர்களே சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும் காலம் இது. இசை, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மீனம் ராசிக்காரர்களே 9வது வீட்டில் குருவோடு சுக்கிரன் இணைந்திருப்பது குதூகலமான அமைப்பாகும். வெளிநாட்டு பயணம் நன்மையை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

  கேந்திரத்தில் சுப பலன்

  கேந்திரத்தில் சுப பலன்

  ஜோதிட சாஸ்திரத்தில் பகையாக இருக்கும் குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், சுப பலனை தருகிறார். குருவும் சுக்கிரனும் 5, 9, 11ஆம் இடங்களில் நின்று இருந்தால் அவரவர் உரிய சுப பலனைத் தருவார்கள்.குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை.

  பார்வைக்கு கிடைக்கும் பலன்கள்

  பார்வைக்கு கிடைக்கும் பலன்கள்

  குருவுக்கு தான் நின்ற ராசியில் இருந்து 5, 7 மற்றும் 9 ம் பார்வையாக பிற ராசிகளைப் பார்ப்பார். இதில் விசேஷப் பார்வையாக 5, 9 ஆம் ராசியை பார்ப்பார். 'குருபார்க்க கோடி புண்ணியம்' என்பார்கள். இதன் பலனை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 ஆம் பார்வையாக பிற ராசியைப் பார்ப்பார். இந்த இரண்டு கிரகங்கள் பகையாக இருந்தாலும், இருவரும் ஓருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டால் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

  குரு சுக்கிரன் பார்வை

  குரு சுக்கிரன் பார்வை

  குரு-சுக்கிரன் இருவரும் 7ஆம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்ததுக் கொண்டால், இருவரும் எந்த ராசியில் எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். பொதுவாக குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்க்கும் வகையில் ஜாதகம் அமைந்த அன்பர்களுக்கு மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். குரு, சுக்கிரன் நேரடி பார்வை பெற்ற ஜாதகர்கள் தன் சுய உழைப்பால் வெற்றி பெற்று வசதியான வாழ்க்கை அமையும்.

  சுப பலன் தரும் சுக்கிரன்

  சுப பலன் தரும் சுக்கிரன்

  குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் நின்று 5, 9 ஆம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் பகை, நீசம் நிலையை அடைந்து இருந்தாலும், சுக்கிரன் தனக்குரிய சுப பலனைத் தருவார். குரு, பகை ராசிகளான ரிஷபம், துலாம், மிதுனம் ராசிகளில் நின்று 5, 9ஆம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், அரை பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார். அதே நேரம் கும்பம் ராசியில் நின்று சுக்கிரனை 5, 9ஆம் பார்வையாக பார்த்தால் முக்கால்பங்கு சுப பலன் கிடைக்கும். குரு பகவான் மகரத்தில் நின்று 5, 9 ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். இதில் சுக்ரன் ஆட்சி, நட்பு ராசியில் இருந்தால் சுக்கிரனே முழு சுப பலனையும் தந்து விடுவார். உங்க ஜாதகத்தில் குரு சுக்கிரன் எங்கே எப்படி இருக்காங்க. சரியில்லாத நிலையில் இருந்தால் குரு பகவானையும், சுக்கிரபகவானையும் சரணடையுங்கள் சரியாகிவிடும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Jupiter, venus Conjunction 2 Planets Conjunction Jupiter with Venus in a house is thought to be highly auspicious in Vedic Astrology.How does the rare Jupiter-Venus conjunction benefit your sign. Jupiter and Venus, the planet of opportunity and the planet of relationships, both meet in the finance sign of Scorpio on Monday 28th October, 2019.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more