• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

குரு பெயர்ச்சி 2019-20: குரு பார்வையால் நூற்றுக்கு நூறு நன்மையடையப்போகும் ராசிக்காரர்கள்

|
    19-09-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Boldsky Tamil

    சென்னை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தனுசு ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளைப் பார்க்கிறார். குரு பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை அதிகம் பலனடையும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

    குருவிற்கு ஐந்து,ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உண்டு. இந்த பார்வைகளால் அந்த ராசிகள் சிறப்பான பலன்களை அடைவதோடு ஒவ்வொரு ராசிக்கும் அமையும் வீடுகளைப் பொருத்து பலன்கள் மாறுபடும். இந்த குரு பெயர்ச்சியால் சிலருக்கு சொந்த வீடு அமையும், சொத்து சுகம் வாங்குவார்கள்.

    குருவின் பார்வையால் சிலருக்கு ஆரோக்கியம் கூடும் ஆயுள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பணவரவும் அதிகமாக கிடைக்கும். குருவின் பார்வையால் நூற்றுக்கு நூறு பலனடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

    குதூகலமான குரு பார்வை

    குதூகலமான குரு பார்வை

    மேஷம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதில் குரு முயற்சிக்கு சுபமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டமான குரு பெயர்ச்சி. உங்க ராசியை பார்க்கிறார். குரு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீட்டினை பார்க்கிறார். பெயர் புகழ் கிடைக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளால் அதிக நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காரணம் அவர் உங்க ராசி லக்னத்தை பார்க்கிறார். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். மூன்றாம் வீட்டில் உள்ள ராகு குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் இனி குழப்பத்தை நீக்குவார் குரு.

    பொன்னான குரு பார்வை

    பொன்னான குரு பார்வை

    எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் நிறைய பணம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உற்சாகத்தை தரும். குருபகவான் உங்க ராசிக்கு எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்தில் இருந்து உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, 12ஆம் வீடுகளைப் பார்க்கிறார். நன்மையை தரக்கூடிய பார்வை. இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம். கையில் பணம் அபரிமிதமாக புரளும். நான்காம் வீட்டினை குரு பார்ப்பதால் சொந்தமாக வீடு வாங்கலாம். அதற்கான காலகட்டம் வந்து விட்டது. வண்டி வாகனம் வாங்கலாம். மோட்ச ஸ்தானம் 12ஆம் வீடு மனதில் நிம்மதி ஏற்படும். வெளிநாடு பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சுற்றுப்பயணத்திற்காகவாவது விமானம் ஏறுவீர்கள். சுப விரையம் ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமும் நிம்மதியும் ஏற்படும்.

    லாபம் தரும் குரு பார்வை

    லாபம் தரும் குரு பார்வை

    மிதுனம் பெயர் புகழ் திருமணம் நடக்கும் தொழில் உற்சாகமடையும். கல்வி செல்வம் அதிகரிக்கும் பதவி கிடைக்கும். குரு உங்களுக்கு ஏழு மற்றும் பத்தாம் வீட்டிற்கு மாறுகிறார். ஏழாம் வீட்டில் குரு அற்புதமானது. திருமண தடைகள் நீங்கும். காதல் திருமணங்கள் நடக்கும். குரு உங்க ராசியையும் மூன்றாம் வீடு லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குரு பார்வையால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். எதையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முடிப்பீர்கள்.

    வெற்றி தரும் குரு பார்வை

    வெற்றி தரும் குரு பார்வை

    கடகத்திற்கு குரு ஆறுக்கு உடையவன் ஆறாம் வீட்டிற்கு போகிறார். ஆறாம் வீடு மறைவு ஸ்தானம். அங்கிருந்து குரு கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் தொழிலில் இருந்த நெருக்கடி தீரும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். குரு இரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். கடன் வாங்க கூடாது ஆனாலும் கடன் மூலம்தான் பணம் அதிகம் வரும். இருந்தாலும் அந்த கடனை அடைக்க உதவி செய்வார். போட்டி பந்தையங்களில் வெற்றியை தருகிறார். குரு 12ஆம் வீட்டினை பார்க்கிறார். சுப செலவுகள் ஏற்படும். வெளிநாடு யோகம் வரும். வீடு வாங்கலாம்.

    யோகம் தரும் குரு பார்வை

    யோகம் தரும் குரு பார்வை

    சிம்மம் ஐந்தாம் வீட்டில் குரு அற்புத பலன்களை தரும். சுகம், முன்னேற்றம் சந்தோஷங்களை தரும். ஆனந்தமான குரு பெயர்ச்சி. குருவின் பார்வை உங்க ராசி லக்னத்தின் மீது விழுகிறது. தைரியம் அதிகரிக்கும் ஆரோக்கியம் கூடும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஒன்பதாம் வீட்டை பார்ப்பது அதிர்ஷ்டம். தெய்வ கடாட்சம் கிடைக்கும். வெளிநாட்டு யோகம் வரப்போகுது. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி அமையும். உங்க லாப ஸ்தானத்தை பார்க்கிறார். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரருடன் உறவு பலப்படும். வீடு வாங்குவீர்கள்.

    ஆசைகளை நிறைவேற்றும் குருபார்வை

    ஆசைகளை நிறைவேற்றும் குருபார்வை

    கன்னி ராசிக்காரர்களே மூன்றாம் வீட்டில் இருந்த குரு நான்காம் வீட்டில் இடம்பெயர்கிறார். நான்குக்கு உடையவன் நான்காம் வீட்டிற்கு வருகிறார். வீடு மாற்றம் வண்டி வாகன மாற்றம் ஏற்படும். நான்காம் வீட்டில் இருந்து குரு பார்வை 12ஆம் வீடு, எட்டாம் வீடு,பத்தாம் வீடுகளை குரு பார்க்கிறார்.

    பார்க்கும் இடங்கள் பலனடையும். நிறைய பயணங்கள் செல்வீர்கள். மனைவியின் ஆசைகள், சகோதரிகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவரவும் அதிகம் இருக்கும். செலவுகள் கட்டுப்படும். எட்டாம் வீட்டினை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவீனங்கள், தடைகள் நீங்கும். இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். செய்யும் தொழிலில் சாதனை படைப்பீர்கள். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சுப விரையங்கள் ஏற்படும். வண்டி வாகனம் வீடு வாங்கும் யோகம் வரும். வீடுகளை அழகுபடுத்துவீர்கள். சந்தோசத்தையும், நிறைவையும் இந்த குரு தரப்போகிறார்.

    அதிர்ஷ்டம் தரும் குரு

    அதிர்ஷ்டம் தரும் குரு

    துலாம் மூன்றுக்கு உடையவன் மூன்றாம் வீட்டில் அமரும் போது சகோதரர்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மூன்றில் குரு புகழ், கீர்த்தியை அதிகரிப்பார். மூன்றாம் வீடு மறைவு ஸ்தானம். இதனால் பாதிப்பு வராது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்தான். குரு பார்வை ஏழாம் வீடு திருமணம் நடைபெறும். சிறப்பான திருமணம் மனதிற்குப் பிடித்த வரன் கிடைக்கும். காரணம் குருவின் நேரடி பார்வை உங்க ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. குரு பார்வை பாக்ய ஸ்தானத்தின் மீது விழுகிறது. ஆரோக்கியமும் சுபிட்சமும் அதிகரிக்கும். அப்பாவிற்கு நன்மை கிடைக்கும். புண்ணிய பயணங்கள் செல்வீர்கள். வெளிநாட்டு யோகம் வரும். அதிர்ஷ்டம் வீட்டு கதவைத் தட்டப்போகிறது. லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல நண்பர்கள் தேடி வருவார்கள். கவலை வேண்டாம்.

    ஆயுளை அதிகரிக்கும் குரு

    ஆயுளை அதிகரிக்கும் குரு

    ஜென்ம குரு இப்போது இரண்டாம் வீட்டிற்குப் போகிறார். விருச்சிகத்திற்கு நல்ல குருப்பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையை தீர்த்து வைப்பார். பணவருமானம் அதிகரிப்பார். நல்ல வேலையை கொடுப்பார். அதிர்ஷ்டத்தை தருவார். குரு பலமாக அமர்கிறார். குரு பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீட்டினை பார்க்கிறார். கடன் நோய்கள் தீரும். உடல் வலிமையைத் தரும். நோயற்ற வாழ்க்கையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். கடன் தொந்தரவு, எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். மன நிறைவாக இருப்பீர்கள். எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தை குருபார்ப்பதால் தடைகள் விலகி அதிர்ஷ்டம் கூடும். ஆயுள் கூடும். பத்தாம் வீட்டினை குரு பார்ப்பதால் தொழில் வருமானம் கூடும். நிரந்தர தொழிலை ஏற்படுத்தி தருவார் குரு.

    தடைகள் நீக்கும் குரு பார்வை

    தடைகள் நீக்கும் குரு பார்வை

    தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஜென்ம குரு அற்புதமான பலனை தருவார். சொந்த வீட்டில் அமரும் குரு தனது ராசியில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளை குரு பார்க்கிறார். நிம்மதி கிடைக்கும் திருமணம் இல்லாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஐந்தாம் வீட்டை குரு பார்க்கும் பார்க்கும் போது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். சிறப்புகள் நன்மைகள் நடக்கும் வேலையில் புரமோசன் கிடைக்கும். புகழும் கிடைக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமண தடைகள் நீங்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும் உற்சாகம் சந்தோஷம் ஏற்படும். ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பதால் வம்ச விருத்தி ஏற்படும். தசாபுத்தி நன்றாக இருந்தால் நிறைய நன்மைகள் ஏற்படும். வெளிநாடு பயணம் செல்வீர்கள். அப்பாவிற்கு உயர்வு ஏற்படும்.

    ஆயுள் அதிகரிக்கும் குரு

    ஆயுள் அதிகரிக்கும் குரு

    மகரத்தின் ராசி அதிபதி சனி. மூன்றாம் வீடு 12ஆம் வீட்டு அதிபதி குருபகவான். மோட்ச ஸ்தான அதிபதி தனது வீடான 12ஆம் வீட்டிற்கு வருகிறார் சுப விரைய செலவுகள் ஏற்படும். ஆனந்தமான பயணங்களை தருகிறார் குருபகவான். நல்லவர்களுக்கு விபரீத ராஜயோகத்தை தருவார். தர்ம சிந்தனைகள் அதிகம் கிடைக்கும். குரு பார்க்கும் இடங்கள் நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளை பார்க்கிறார். நான்காம் வீடு சுகஸ்தானம், கல்வி, அம்மா, இந்த வீட்டினை குரு பார்ப்பதார் பெரிய திருப்பங்கள் ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கலாம். ஆறாம் வீட்டினை குரு பார்ப்பதால் கடன்கள் தீரும் நோய்கள் விலகி ஆரோக்கியம் அதிகரிக்கும். எட்டாம் வீட்டினை குரு பார்ப்பதால் ஆயுள் கூடும் நிம்மதி ஏற்படும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    சந்தோஷம் தரும் குரு பார்வை

    சந்தோஷம் தரும் குரு பார்வை

    சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பத்திற்கு குரு இரண்டு மற்றும் 11ஆம் வீட்டிற்கு அதிபதி. இந்த குரு பெயர்ச்சி கும்பத்திற்கு பத்தில் இருந்து லாப குருவாக 11ஆம் வீட்டில் பலமான குருவாக அமர்கிறார். வேலையில் பிரச்சினை ஏற்பட்டது. தொழிலில் லாபம் வரும் வராத பணமும் தேடி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கும்பத்திற்கு அற்புதமான குருப்பெயர்ச்சி. குரு பார்வை பார்த்தால் உங்க ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடுகளை குரு பார்க்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தைரியம் கூடும், முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். திருமணம் தட்டிப்போனவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திருப்புமுனையை ஏற்படுத்தும் குரு பெயர்ச்சி.

    மீனம்

    மீனம்

    குருபகவான் உங்க ராசிக்கு அதிபதி. உங்க ராசி அதிபதி பத்தாம் வீட்டிற்கு அதிபதி பத்தாம் வீட்டிற்கு வருவதால் உயர்ந்த பதவி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். இரண்டு,நான்கு ஆறாம் வீடுகளை குரு பார்க்கிறார் முன்னேற்றமான மாற்றங்களை குரு தருகிறார். உங்களின் வளர்ச்சிக்கு குருப்பெயர்ச்சி உதவும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. நிறைய பணவரவு இருக்கும், குடும்பத்தில் குதூகலமும் உற்சாகமும் இருக்கும் வீடு சொத்துக்களை வாங்குவீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வருகிறது. நிறைய பணவரவு இருக்கும். கடன்கள் அடைபடும். நோய் நொடிகள் தீரும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam.All planets watch 7th house from its own house.Guru also watches 5th and 9th house from its own house.Benefits of guru vision for 12 Zodiac signs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more