For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2019: தனுசு ராசிக்காரர் ப.சிதம்பரத்திற்கு ஜென்ம குரு - பலன்கள் எப்படி

குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் 12 லக்னகாரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறோம். அரசியல் தலைவர்களுக்கு இந

Google Oneindia Tamil News

Recommended Video

    Guru Peyarchi 2019

    சென்னை: நிகழும் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12ஆம் தேதி 29 10 2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி 48 நிமிடத்தில் குருபகவான் வாக்கியப்படி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. ரிஷபம். கடகம். கன்னி. துலாம் தனுசு. மகரம். மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சில மாதங்களாக சிறையில் இருக்கும் ப. சிதம்பரத்திற்கு தனுசு ராசி, மீனம் லக்னம். இந்த குரு பெயர்ச்சி சிறையில் உள்ள சிதம்பரத்திற்கு சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா என்று பார்க்கலாம்.

    குரு பகவான் தனுசு ராசியில் அமரப்போகிறார். இது தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு. 'ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்'ஜென்ம குரு நல்லதல்ல என்று சொன்னாலும் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் குரு நன்மையே செய்வார் என்று பல கணிப்புகளும் கூறியுள்ளன. அதே நேரத்தில் தசாபுத்தி சரியாக இருந்தால் கோச்சார கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

    ப. சிதம்பரத்திற்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மீனம் லக்னம். மிதுனத்தில் ராகு, செவ்வாய், சனி, கடகத்தில் சுக்கிரன், சிம்மத்தில் புதன், கன்னியில் சூரியன் குரு, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன. பிறக்கும் போது சுக்கிரதிசை குரு புத்தி இருந்துள்ளது. அதன் பின் வரிசையாக சூரியன், சந்திரன், செவ்வாய். ராகு, வியாழ திசைகள் முடிந்து 2011ஆம் ஆண்டு முதல் சனி திசை தொடங்கி நடைபெற்று வருகிறது. சில மாதங்களாக சிறையில் இருக்கும் ப. சிதம்பரத்திற்கு தனுசு ராசி மீனம் லக்னம். ராசிப்படி ஜென்ம குரு லக்னபடி பத்தாம் வீட்டில் குரு அமர்கிறார்.

    குரு பெயர்ச்சி 2019: மீன ராசிக்காரர் சசிகலாவிற்கு பத்தில் குரு - பலன்கள் எப்படிகுரு பெயர்ச்சி 2019: மீன ராசிக்காரர் சசிகலாவிற்கு பத்தில் குரு - பலன்கள் எப்படி

    மீனம் லக்னம் தனுசு ராசி

    மீனம் லக்னம் தனுசு ராசி

    தனுசு ராசிக்கு குரு ஜென்மத்தில் அமர்வது ஆட்சி பெற்ற அமைப்புதான் என்றாலும் ஹம்ச யோகம் அமைப்புதான் என்றாலும் மீனம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோக அமைப்பு முழுமையான பலனை தருவதில்லை என்பதுதான் உண்மை. தனுசு ராசிக்காரர் சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஏழரை சனி வேறு படுத்தி எடுக்கிறது. மகனால் சிறைக்கு சென்றுள்ளார் ப. சிதம்பரம். அவருக்கு ஜாமீன் கிடைத்தும் வெளி வர முடியாத நிலை காரணம் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

    சிறையில் வாடும் சிதம்பம்

    சிறையில் வாடும் சிதம்பம்

    முன்னாள் நிதியமைச்சரும் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவ்வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது. கைது செய்யப்பட்டு 61 நாட்களுக்கு பின்னர் ஒரு வழக்கில் மட்டும் சிதம்பரத்துக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் கிடைத்திருக்கிறது.

    தீபாவளிக்கு வீட்டிற்கு வருவாரா

    தீபாவளிக்கு வீட்டிற்கு வருவாரா

    அதேநேரத்தில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ப. சிதம்பரம் தொடர்ந்தும் சிறையில் இருப்பார் என கூறப்படுகிறது.

    ப.சிதம்பரத்துக்கான அமலாக்கப்பிரிவின் காவல் வரும் 24ஆம் தேதிதான் முடிவடைகிறது. அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் ப. சிதம்பரம் தொடர்ந்து சிறையில் இருப்பார். திகாரில் இருந்து தீபாவளிக்கு வீட்டிற்கு திரும்பி விடுவார் சிதம்பரம் என்று அவரது உறவினர்களும் நண்பர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

    சிதம்பரத்திற்கு ஜென்ம குரு

    சிதம்பரத்திற்கு ஜென்ம குரு

    ப. சிதம்பரத்திற்கு இப்போது ராசியில் ஜென்ம சனி கேது இரண்டுமே பாவ கிரகங்கள் அமர்ந்துள்ளன. கூடவே சுப கிரகமாக குரு இணையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் அவருக்கு சந்தோஷமும் இல்லை சங்கடமும் இல்லை. காரணம் குரு தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்தாலும் குருவின் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளை பார்வையிடுகிறார். எதிர்பாராத பாக்யங்கள் தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் என்பது பலன். ப. சிதம்பரத்திற்கு சனியால் ஏற்பட்ட சங்கடம் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சிக்கு பிறகே தீரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

    English summary
    Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. Guru is the Lord for Dhanus rasi and Meenam rasi. here is the prediction for P.Chidambaram Dhanusu rasi and Meenam lagnam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X