For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று குருப்பெயர்ச்சி: குரு பரிகாரத்தலங்களில் பக்தர்கள் கூட்டம் - சிறப்பு யாகங்கள்

குரு பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று 29.10.2018 செவ்வாய்கிழமை அதிகாலை இடப்பெயர்ச்சி அடைந்தார். குரு பரிகார தலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிற

Google Oneindia Tamil News

சென்னை: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று குருப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் குருவுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடைபெற்றன. குரு பரிகார தலங்களில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் குருப் பெயர்ச்சி மகா யாகம் இன்றும் நவம்பர் 4ஆம் தேதியும் நடைபெறுகிறது.

மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை தருகிறது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம், ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். குருபகவானுக்குரிய மஞ்சள் நிற ஆடை, சரக்கொன்றை,முல்லை மலர்கள், கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை செலுத்தி குருபகவானின் அருளை பெறலாம்.

மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குரு பகவான். அறிவு, வித்யை, ஞானம் ஆகியவற்றுக்கு இவரே காரகத்துவம் வகிக்கிறார். இவரை 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள். தேவர்கள் அனைவருக்கும் குருவாகத் திகழ்வதால், 'தேவகுரு' என்றும் அழைப்பார்கள். புகழ், பதவி, அந்தஸ்து, திருமணம், புத்திர பாக்கியம் என ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தீர்மானிப்பதில் குரு பகவானுக்கு முக்கியப் பங்குண்டு.

குரு தோஷ நிவர்த்தி

குரு தோஷ நிவர்த்தி

குருவின் பார்வை உச்சத்தில் இருக்கும் ஒருவன், வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவான். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு சுமாரான பலன்களை தருகிறார்.

சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

குரு பகவான் இன்று இரவு அதிகாலையில் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதையொட்டி குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் குரு பகவான் வீற்றிருக்கும் தலங்களில் சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள குருவித்துறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் வீற்றிருக்கும் அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவிலில் சுயம்புவாக வீற்றிருக்கும் குருபகவான் சன்னதியில் குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.
குருவித்துறையில் குருபகவானுக்கு கடந்த 4 நாட்களாக லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இன்று பரிஹார மஹாயாகம், மஹாபூர்ணஹூதி மற்றும் திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மஹா ஆரத்தி பெற்றது.

சிறப்பு மகா யாகம்

சிறப்பு மகா யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள், தன்வந்திரி பீடத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை தருகிறது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம், ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். குருபகவானுக்குரிய மஞ்சள் நிற ஆடை, சரக்கொன்றை,முல்லை மலர்கள், கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை செலுத்தி குருபகவானின் அருளை பெறலாம்.

ஆலங்குடி குரு பரிகார தலம்

ஆலங்குடி குரு பரிகார தலம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இன்று அதிகாலை 3.49 மணிக்கு நடைபெற்ற குருபெயர்ச்சியின்போது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

சிறப்பு லட்சார்ச்சனை

சிறப்பு லட்சார்ச்சனை

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு, குரு பரிகார யாகங்கள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குரு பகவானை தரிசனம் செய்தனர். குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு, குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடைபெற்றது.

நவம்பர் 4ஆம் தேதி குரு பெயர்ச்சி
பரிகார யாகங்களில் பங்கேற்கலாம்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 4ஆம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி குருபுத்தி, குருதிசை, நடைபெறும்

English summary
Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. Guru is the Lord for Dhanus rasi and Meenam rasi. Guru peyarchi Parikaram yagam in Guru and Dhachinamurthi temples in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X