For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2019: குருவினால் விபரீத ராஜயோகம் பெறும் ரிஷபம், கடகம், மகரம்

Google Oneindia Tamil News

மதுரை: உங்களுக்கு ராஜயோகம் வந்திருச்சு என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அதுவே விபரீத ராஜயோகம் வரப்போகிறது என்றால் அதென்ன விபரீத ராஜயோகம் என்று கேட்பார்கள். அது மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொறுத்து ஒருவருக்கு விபரீத ராஜயோகம் அமையும். இதைத்தான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள். எதிர்பாராத நேரத்தில் அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு, வருமானம் வரும் இதுவே விபரீத ராஜயோகம். திடீர் எதிர்ப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டு கடைசியில் வெற்றியில் முடியும் இதுவும் விபரீத ராஜயோகம்தான். ஒரு சிலருக்கு இந்த கால கட்டத்தில் அரசாளும் வாய்ப்பு கூட கிடைக்கும்.

ஜோதிடத்தில் 6,8,12ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள். இந்த வீடுகளின் அதிபதிகள் தங்களுக்கு கூட்டணி அமைத்தோ அல்லது பரிவர்த்தனை பெற்றோ அல்லது அந்தந்த வீட்டு அதிபதிகள் அதே வீடுகளில் ஆட்சி பெற்று அமர்வது அம்சமான விபரீத ராஜயோகமாகும். இந்த விபரீத ராஜயோகத்திலேயே சரளயோகம், விமலாயோகம் என வகை இருக்கிறது.

ஜாதகத்தில் 8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும். இந்த யோகம் பெற்றவர்கள் நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர். 12 ம் அதிபதி 12ல் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பது விமலா யோகம் ஆகும். சுதந்திரமாக வாழ்வர். பிறருக்கு நன்மையே செய்வர். எட்டாம் வீட்டில் 6,8,12ஆம் வீட்டு அதிபதிகள் அதுவும் அது பாவ கிரகமாக இருந்தால் அந்த ஸ்தானத்தை பாவ கிரகங்கள் பார்த்தாலோ அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுள், தைரியம், மரியாதை, முன்னேற்றம், கல்வி கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி, புத்திரர்களால் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

ராஜயோக காலம்

ராஜயோக காலம்

எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தால் நல்லது. "இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்" என வேதங்கள் கூறுகின்றன. அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். எனவேதான் எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும். சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். இது பொதுவானது. அதே நேரம் மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி எட்டில் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம்.

ரிஷபம்,கடகம், மகரம்

ரிஷபம்,கடகம், மகரம்

ஆறுக்குடையவன் ஆறில் ஆட்சி பெற்றாலோ எட்டுக்குடையவன் எட்டில் ஆட்சி பெற்றாலோ 12க்கு உடையவன் 12ல் ஆட்சி பெற்றாலோ அது விபரீத ராஜயோகம். ரிஷபம் ராசிக்கு குரு எட்டுக்கு உடையவன். எட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதேபோல கடகம் ராசிக்கு குரு ஆறுக்கு உடையவன் ஆறில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதேபோல மகரம் ராசிக்கு குரு 12க்கு உடையவன் 12ல் ஆட்சி பெற்று அமரப்போகிறார். நிகழப்போகும் குருப்பெயர்ச்சியினால் ரிஷபம், கடகம், மகரம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோக காலமாகும்.

பணவருமானம்

பணவருமானம்

ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். எட்டாம் வீடு மறைவு ஸ்தானம் ஆயுள் ஸ்தானம். எதிர்பாராத நபர்கள் மூலம் எதிர்ப்பு வரும். பிரச்சினை வரும் அந்த பிரச்சினையை தீர்க்க பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். பிரச்சினையை தீர்த்து ராஜயோகமாக மாறும். நீங்கள் விபரீதங்களில் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து ராஜயோகமாக மாற்றுவீர்கள். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும்.

லாபம் அதிகரிக்கும்

லாபம் அதிகரிக்கும்

சுக்கிரன் உங்க ராசி அதிபதி அவர் அசுர குரு அவருக்கு எதிரிதான் குருபகவான் தேவ குரு. உங்க ராசிக்கு 8 மற்றும் 11ஆம் அதிபதி அவரே. அவர் ஆட்சி பெற்று அமரும் காலத்தில் பல நன்மைகள் ரிஷபத்திற்கு நடைபெறப்போகிறது. அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தை அடைகிறார். ரிஷபத்தை விபரீத ராஜயோகம் கிடைக்கும். சனி கேது கூடவே இருந்தாலும் குரு பகவானால் நன்மைகள் நடைபெறும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது போல உங்களுக்கு கெடுதல் செய்யக்கூடிய குரு கெட்ட ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு போவதால் விபரீத ராஜயோகமாக நிறைய நன்மைகள் நடைபெறும்.

கடன்கள் வாங்கவேண்டாம்

கடன்கள் வாங்கவேண்டாம்

ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது. ஆறாம் இடம் போட்டி பந்தையம், எதிர்ப்பு நோய், கடன் ஸ்தானம், கடன்கள் அடைபட வருமானம் வரும் பொருட்கள் வாங்குவீர்கள், ஆறாம் வீட்டில் குரு அமரும் காலத்தில் குரு நோய்களை வெளிப்படுத்துவார் அதனால் உடலில் மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். மருத்துவ சிகிக்சை செய்து நோய்களை தீர்ப்பீர்கள். கடன் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் இருந்தும் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் நலனின் அக்கறை தேவை. அளவிற்கு மீறி கடன் வாங்க வேண்டாம். நோய்களை பயப்பட வேண்டாம். எதையும் எதிர்த்து போராடி வெல்வீர்கள்.

நன்மைகள் நடைபெறும்.

நன்மைகள் நடைபெறும்.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும். நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். 12ஆம் வீட்டில் அயன ஸ்தயனத்தில் அமர்ந்த ராசி அதிபதி சனி அமர்ந்து முடக்கிப் போட்டார். இனி குரு அங்கு வருவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட தீமைகளை குறைப்பார். நோய்களை கூட அடையாளம் காண முடியாமல் தவித்த உங்களுக்கு நோய் பாதிப்புகள் சரியாகும். நிவாரணம் கிடைக்கும். தூர தேச பயணங்கள் அமையும்.

வெளிநாடு பயணம்

வெளிநாடு பயணம்


வெளிநாடுகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விரையங்களை பசிஸ்டிவ் ஆக கொடுப்பார். சுப பயணங்கள், சுப விரையங்களை தருவார். வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்குவார். 12ஆம் வீட்டில் அமர்ந்து குரு ஆறாம் வீட்டை பார்ப்பதால் வியாதிகளை போக்குவார். ஆயுள் கண்டம் இருந்தவர்களுக்கு அந்த கண்டங்கள் விலகுகிறது. வயிறு சார்ந்த பிரச்சினை விலகும். கடன்களை அடைக்க குரு வழிகாட்டுவார்.

English summary
Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. Viparita Rajayogas are of course Rajayogas but these great yogas arise from the struggles.You have to go through negative events and gain success by overcoming that negativity.For this yoga, we count negative houses, ie, dursthana houses. They are 6, 8, and 12. These 3 houses are known to be negative houses in the chart.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X