For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம், இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார். குரு தனுசு, மீனம் ராசிகளில் ஆட்சி பெறுகிறார். கடகத்தில் உச்சமடைகிறார். அதே நேரம் மகரம் ராசியில் நீசமடைகிறார். என்னதான் குரு சுப கிரகமாக இருந்தாலும் குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. சில லக்னகாரர்களுக்கு குரு பாதகம் செய்வார். சிலருக்கு யோகத்தை அள்ளி வழங்குவார். குரு தசையில் யோகம் பெரும் லக்னகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த உள்ள வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் 'குரு நின்ற இடம் பாழ்' என்கின்றனர் ஜோதிடர்கள். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும். இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அதே போல ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில பாவ கிரகங்களாகவும் உள்ளன. எல்லாருக்கும் எல்லா கிரகங்களும் நன்மையோ தீமையோ செய்வதில்லை.

முழு சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் உங்களுக்கு நன்மையைத் தருவாரா, குருவின் செயல்கள் என்ன, இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம், குரு பார்வை, குரு யோகம் உங்களுக்கு எப்படி உள்ளது என்று பார்க்கலாம். எந்த லக்னகாரர்களுக்கு குரு தசை காலத்தில் யோகம் செய்வார் யாருக்கு பாதகம் செய்வார் என பார்க்கலாம்.

குரு தசையில் என்ன நடக்கும்

குரு தசையில் என்ன நடக்கும்


ஒருவருக்கு குரு தசை 16 ஆண்டுகள் நடக்கும். ராகு தசை முடிந்து குரு திசை தொடங்கும். ஜனன ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் குரு தசை காலத்தில் சொந்த வீடு வாங்கலாம். திருமணம் கைகூடும், சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும். பெயர் புகழ் கிடைக்கும். பணவரவு அபரிமிதாக இருக்கும். ஜனன ஜாதகத்தில் குரு பலமிழந்தோ பகை, நீசம் பெற்றோ இருந்தாலோ, பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றாலோ குரு தசை காலத்தில் கடுமையான பண நெருக்கடி ஏற்படும். கடன் தொல்லை அதிகரிக்கும்.

குருவின் காரகம்

குருவின் காரகம்

குரு பொன்னவன் பரிபூரண சுப கிரகம். அசுபருடன் சேர்ந்தாலும் நீச்சம் பெற்றாலும் கெடுதல் செய்யமாட்டார். ஒருவேலை அவர் பாதகாதிபதியாக இருந்தாலும் பாடம் கற்றுத்தருவார். பணம் புழங்கும் இடங்களில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், கணக்குத்துறை வல்லுனர்கள், நிதித்துறை வல்லுனர்கள் குரு ஆதிக்கம் பெற்றவர்கள். தங்க நகைகள் விற்பனையாளர்கள். வித்தையைச் சொல்லிக்கொடுக்கும் துறைக்கும் குருவே காரணமாவார். தன்னுடைய பெயரையே குரு என்று கொண்டதனால் தனக்குத் தெரிந்த வித்தைகளைச் சொல்லிக் கொடுக்கும் குருமார்களை உருவாக்குபவரும் குருதான். குரு வயிறுக்கு அதிபதி. குரு பாதிக்கப்பட்டால் நீரிழிவு நோய், வயிறு பிரச்சினை. கேஸ் பிரச்சினை தருவார்.

கோடீஸ்வரர் யோகம்

கோடீஸ்வரர் யோகம்

நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர். கேது ஞான மோட்சகாரகன். ஒருவருக்கு பணம் கோடி கோடியாக கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து குரு பகவான் கேது உடன் இணைந்து சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தினால் இந்த கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் கோடீஸ்வரர் ஆகும் யோகம் பெறுவார்கள்.

மேஷம் விருச்சிகம்

மேஷம் விருச்சிகம்

குரு சில லக்னகாரர்களுக்கு யோகத்தை தருவார். மேஷ லக்னகாரர்களுக்கு குரு பாக்யாதிபதி, விரைய ஸ்தானதிபதி. மேஷம் ராசி, லக்னகாரர்களுக்கு குரு தசை நன்மை செய்யும். பொருளாதார உயர்வை தருவார். காரணம் அவர் யோகாதிபதி. குரு தசை காலத்தில் பதவி உயர்வை தருவார். செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட விருச்சிக லக்னங்களுக்கு குரு இரண்டு மற்றும் ஐந்துக்குடையவராகி யோக நிலை பெற்று தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். நல்லதே செய்வார்.

சுக்ரனுக்கு எதிரி குரு

சுக்ரனுக்கு எதிரி குரு

ரிஷபம் துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். இவருக்கும் குருவிற்கு ஆகாவே ஆகாது. காரணம் சுக்கிரன் அசுர குரு, குரு தேவ குரு. ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. அவர், துலாம் லக்னத்துக்கு 6ஆம் வீட்டிலும், ரிஷப லக்னத்துக்கு 8ஆம் வீட்டில் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுபகிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் விபரீத ராஜயோகத்தை தருவார். வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகத்தை வழங்கி செல்வம் செழிக்கச் செய்வார். அதே போல துலாம் லக்னத்துக்கு 11ஆம் இடத்தில் குரு இருப்பது நல்லது. லாபத்தையும் வருமானத்தையும் தருவார்.

தோஷம் தரும் குரு

தோஷம் தரும் குரு

மிதுனம் லக்னகாரர்களுக்கு குரு கேந்திராதிபதி தோஷம் செய்வார். மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கும் குரு கேந்திராதிபதி தோஷத்தை ஏற்படுத்துவார். 7 , 4 மற்றும் 10 ஆம் வீட்டில் குரு பகவான் அமரும்போது யோகம் தருவார். அதிலும் குறிப்பாக, 7 ஆம் வீட்டில் சுப கிரகங்களின் சேர்க்கை பார்வையில் அமரும் போது நல்ல வாழ்க்கைத்துணை, புகழ் சேர்க்கும் பிள்ளைகளை அமைத்துத் தருவார்.

யோகம் செய்யும் குரு

யோகம் செய்யும் குரு

சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடகத்தில் குரு உச்சமடைகிறார். கடக லக்னகாரர்களுக்கு குரு ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதி, அதே போல பாக்யாதிபதி. கடகத்திற்கு யோகங்களையும் நிறைய அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தருவார் குரு.

அரசாளும் யோகம்

அரசாளும் யோகம்

சிம்ம லக்னத்துக்குப் பூர்வ புண்ணியஸ்தானாதிபதியாக அமைந்து யோகம் தருவார் குரு. சிம்மம் குரு லக்னத்தில் நின்றால் அரசாளும் யோகம். ஐந்தில் குரு நின்றால் புண்ணியம். அந்த புண்ணியங்கள் பலனாக உங்களுக்குக் கிடைக்கும். குரு தான் நின்ற இடத்தில் இருந்து ஐந்து ஒன்பதாம் இடங்களைப் பார்த்தால் அம்சமான குழந்தைகள் பிறக்கும். பேரும் புகழும் கிடைக்கும்.

புகழ் பெயர்

புகழ் பெயர்

மகரம், கும்ப லக்னத்துக்கு குரு யோகாதிபதியாக இல்லாவிட்டாலும், மகர லக்னத்துக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து குரு லக்னத்தைப் பார்க்கும்போது, குரு தசையில் ஏராளமான நன்மைகளைச் செய்து ஜாதகரைப் புகழடையச் செய்வார். கும்ப லக்னக்காரர்களுக்கு 11ஆம் வீடான தனுசில் குரு பகவான் அமரும் போது தொழிலில் புகழடையச் செய்து பல வகையிலும் லாபம் ஈட்டித் தருவார். தனுசு ராசிக்கு வரப்போகும் லாப குரு பல நன்மைகளை செய்யப்போகிறார்.

பலன் தரும் லக்னாதிபதி

பலன் தரும் லக்னாதிபதி

தனுசு லக்னத்திற்கு குரு லக்னாதிபதி கேந்திராதிபதி நல்லதே செய்வார். மீனம் குருவிற்கு ஆட்சி அதிபதி. நல்ல பலன்களைத் தருவார்.

மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ஆறு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையில் குரு பகை, நீசம் பெற்றிருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

English summary
Guru is a subha gragam in astrology. Guru join kethu is a good yogam in Kodeeswara Jathagam.Guru mahadasha 16 years. Guru’s placement in the Lagna is highly extolled as it is the greatest protection for all evils in the horoscope.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X