For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2019: மோடி ராசிக்கு எப்படி - குரு பார்வையும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்

குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இன்னும் சில தினங்களில் நிகழப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் அரசியல் தலைவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். விருச்சிக ராசி விருச்சிக லக்னத்தில் பிறந்த

Google Oneindia Tamil News

Recommended Video

    Guru Peyarchi 2019

    சென்னை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் தினங்களில் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்கள், லக்னகாரர்களுக்கும் பொதுவான பலன்களை பார்த்திருக்கிறோம். 27 நட்சத்திரகாரர்களுக்கும் குரு பெயர்ச்சி பலன்களை பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். நாட்டின் நலனுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

    நரேந்திர மோடி 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம்தேதி பகல் 11 மணிக்கு பிறந்துள்ளார் அவரது ஜென்ம லக்னம் விருச்சிகம் ராசி விருச்சிகம் வளர்பிறை சஷ்டியில் அனுஷம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் பிறந்தவர். அவர் பிறந்த நேரத்தில் புதன் திசை நடந்தது. மோடிக்கு தற்போது சந்திர திசை நடக்கிறது. அதாவது 2021ஆம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெறும் சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது. இந்த இரு கிரகங்களின் சேர்க்கைதான் இன்று நரேந்திர மோடியை பிரதமர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது. இந்த கிரக சேர்க்கை காரணமாக தற்போது நரேந்திர மோடிக்கு மகாராஜ யோகம் கிடைத்துள்ளது.

    கோச்சாரப்படி கிரகங்களின் சஞ்சாரமும் மோடிக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குரு பகவான் ஜென்ம ராசி லக்னத்தில் இருந்து இரண்டாம் வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு விருச்சிக ராசிக்கு இரண்டாம் இடமான குடும்பம், தனம், வாக்கு ஸ்தான அதிபதி. அதே போல ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. இந்த குரு பெயர்ச்சி பிரதமர் மோடிக்கு அற்புதமான பலன்களை அள்ளித்தரப்போகிறது.

    முகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்கமுகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்க

    குரு பார்வை எப்படி

    குரு பார்வை எப்படி

    குருவின் பார்வை தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு ஆறாம் இடம், எட்டாம் இடம், பத்தாம் இடங்களின் மீது விழுகிறது. குருபகவான் விருச்சிக ராசிக்கு இரண்டாம் வீட்டிற்குள் அமர்ந்து ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீடு, ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீடு, தொழில் ஜீவன ஸ்தானமான பத்தாம் வீடுகளை குருபகவான் பார்வையிடுகிறார். குரு அமரப்போகும் இடம் அற்புதமானதாக அமையும் அதே நேரத்தில் அவர் பார்க்கும் இடங்களும் பொன்னாக ஜொலிக்கப்போகிறது.

    யோகக்காரர் மோடி

    யோகக்காரர் மோடி

    மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன. நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தேடித்தந்து பிரதமர் நாற்காலியில் அமர வைத்துள்ளது. மோடியின் ஜாதகத்தில் 10ஆம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இது 'சண்டாள யோகம்' அமைப்பாகும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது. மோடி ராசிக்கு கோச்சார பலன்களும் அற்புதமாக அமைந்துள்ளது.

    வளம் வளர்ச்சி

    வளம் வளர்ச்சி

    இந்த குரு பெயர்ச்சியினால் மோடிக்கு லாபமே. எந்த பிரதமருக்கும் கிடைக்காத புகழும் கீர்த்தியும் மோடிக்கு கிடைக்கும். சமர்ப்பிப்பார். இவரது ஆட்சி காலத்தில் நாடு அபரிமிதான வளர்ச்சியை அடையும். நாட்டின் பொருளாதார மந்தநிலை மாறி வளர்ச்சியடையும். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். எதிரி மாதிரி நினைத்தவர்கள் நண்பர்களாவார்கள். அன்பு ஆதரவை பலரும் விரும்புவார்கள்.

    ஆயுள் ஆரோக்கியம் கூடும்

    ஆயுள் ஆரோக்கியம் கூடும்

    குரு தனது ஏழாம்பார்வையாக ராசிக்கு எட்டாம் வீட்டினை பார்க்கிறார். எட்டாம் வீடு ஆயுள் ஸ்தானம் அந்த வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் கண்டங்கள் விலகும். இதுநாள் வரை தேவையில்லாமல் ஏற்பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரும். புது முயற்சிகள் கைகூடும். எடுத்த காரியங்களை இனி எதிரிகளின் தொல்லையில்லாமல் தைரியமாக முடிப்பார்.

    புதிய வேலை கிடைக்கும்

    புதிய வேலை கிடைக்கும்

    குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு 10 ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். வெளிநாட்டு பயணங்கள் அதிக வெற்றியைத் தேடித்தரும். உலக அரங்கில் வெற்றிகரமான தலைவராக வலம் வலப்போகிறார் பிரதமர் மோடி. இந்த நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடியின் செல்வாக்கு அவரது பிரச்சார யுக்தி வாக்கு வன்மை வெற்றியைத் தேடித்தரப்போகிறது.

    முயற்சிகள் வெற்றி

    முயற்சிகள் வெற்றி

    குரு பெயர்ச்சி மட்டுமல்லாது சனி பெயர்ச்சியும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. சனிபகவான் ஏழரை சனி காலத்தை முடித்துக்கொண்டு மூன்றாம் வீட்டை நோக்கி நகர்கிறார். வாக்கில் இருந்த சனி விலகப்போகிறது. அந்த வீட்டில் குரு கேது சேர்க்கையால் நன்மை நடக்கப் போகிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முறியடிப்பார் பிரதமர் மோடி. எதிரி நாட்டினர் மோதல் போக்கை விட்டு நேசக்கரம் நீட்டுவார்கள்.

    நாட்டின் வளர்ச்சியும் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கும். பொருளாதார மந்தநிலை முடிவுக்கு வரும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும்.

    English summary
    Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. PM Modi is running Mars Maha Dasa from Mar 2018 through March 2025. There is no doubt Mars Maha Dasa is supporting him to rule the country as Prime Minister.Based on gochar planets, Jupiter transit on Dhanusu rasi is good. Saturn transit on Dhanushu Rasi to Makaram Rasi Good.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X