For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகான கரு கரு கூந்தல் ஆசையிருக்கா? - சுக்கிரனை வணங்கி பரிகாரம் செய்யுங்க!

தலைமுடி பிரச்சினை இன்றைக்கு தலைபோகும் பிரச்சினையாக உள்ளது. ஜோதிட ரீதியாக காரணங்களும், அதற்கான பரிகாரங்களையும் கூறியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: கூந்தல் வளர வேண்டும் என்பதற்காக விளம்பரத்தில் வரும் தைலங்களை வாங்கி பூசுகின்றனர். கூந்தல் உதிர்வு பிரச்சினைக்கு ஜோதிட ரீதியான காரணங்கடிளயும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே"

தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். (அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.)

Hair Loss in Astrology remedies

தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்

இந்த பாடல் வரிகளும் அதன் பொருளும் நமக்கு உணர்த்துவது அழகான கூந்தலுக்கும் ஆழமான காதலுக்கும் காரகன் சுக்கிரன் என்பதுதான்.

இன்று பலரிடமும் அழகான கூந்தலும் இல்லை. ஆழமான காதலும் இல்லை. எல்லாம் அவசர காதல்தான். இன்று நீண்ட கருமையான கூந்தலை பற்றி சினிமா பாடலில்தான் கேட்கும் நிலையில் இருக்கிறது.

தலைக்கு முடி என்பது மிகவும் முக்கியமானதாகும். தலை நிறைய முடி இருந்தால் மட்டுமே முகத்திற்கும் அழகு உண்டாகும். தலை முடி நீளமாக அழகாக உள்ள பெண்களை எல்லா ஆண்களும் விரும்புவார்கள். தற்போது நிறைய முடி வளர்த்து குடுமி போட்டுக் கொள்ளும் ஆண்களும் உள்ளார்கள். தலைவாரி பூச்சூட்டிக் கொள்வது என்பது பெண்களுக்கே தனி அழகு தான். பெண்களுக்கு முடி கொட்டும் என்றாலும் வழுக்கை என்பது அவ்வளவாக ஏற்படாது. ஆனால் முடி கொட்டி வழுக்கையால் பாதிக்கப்படுவர்கள் அதிகம் ஆண்களே.

அழகான கருமையான முடியை பெற லக்கினமும் சுக்கிரனும் பலமாக இருக்கவேண்டும். சாதாரணமாக முடிக்கு காரகன் கேது என்றாலும் அழகிய கருமையாண கூந்தலுக்கு காரகன் சுக்கிரனாவார். எண்ணை வடியும் சிக்கு சேர்ந்த துர்நாற்றத்துடன் கூடிய கூந்தலுக்கு சனைஸ்வர பகவான் காரகனாவார்.

சுக்கிரன், சந்திரன் இருவரும் முக அழகிற்கு முக்கிய மானவர்கள். குறிப்பாக இவற்றிக்கு ஜென்ம இலக்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. இலக்னம் பலமாக இருந்தால் நல்ல உடலமைப்பு, முக அழகு, அழகான தலை முடி உண்டாகிறது.

Hair Loss in Astrology remedies

சூரியன், செவ்வாய், சந்திரனையோ சுக்கிரனையோ பார்வை செய்தால் முடி உதிர்ந்து வழுக்கை உண்டாகும். லக்னாதிபதி சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றாலும் வழுக்கை உண்டாகும். சுக்கிரனும் சந்திரனும் சூரியன் செவ்வாயால் பாதிக்கப்படுவது நல்லதல்ல. சனி செவ்வாயை பலமாக பார்த்தாலும் முறையற்ற முடி அமைப்பு உண்டாகின்றது.

முடி உதிர ஜோதிட ரீதியான காரணங்கள்:

1.காலபுருஷ ராசிப்படி தலைமுடியை குறிக்கும் பாவம் மேஷ ராசியாகும். மேஷ லக்னமும் அதன் அதிபதி செவ்வாயும் முடியை தீர்மானிக்கும் முக்கிய காரனிகளாவர்.

2.லக்னம் மற்றும் லக்னாதிபதியின் பலமும் முடிவளர்ச்சியை தீர்மானிக்கின்றன.

3. குரு மற்றும் செவ்வாயின் இனைவும் முடி வளர்ச்சியை தீர்மாணிக்கின்றது. முடிவளர்ச்சிக்கு தேவையான பயோடின் எனும் சத்திற்க்கு குரு காரகனாவார். இரும்பு சத்தினை குறிக்கும் போலிக் ஆசிட்டிற்க்கு காரகன் செவ்வாய் ஆவார். மேலும் முடிவளர்ச்சிக்கு தேவையான மற்றொரு வைட்டமின் B-6க்கு குரு காரகன் என்கிறது மருத்துவ ஜோதிடம். குருவும் செவ்வாயும் பலமிழந்தோ அல்லது அசுப தொடர்போ கொள்ளும்போது மேற்கண்ட சத்து விகித குறைபாடு ஏற்பட்டு முடி கொட்டுகிறது.

4. லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு 6/8/12 மற்றும் அசுப தொடர்புகள் ஏற்படும்போது முடி கொட்டுகிறது. மற்றும் மேஷ லக்னம் செவ்வாய் இவர்களோடு சனி ராகு சேர்க்கை ஏற்படும்போது முடி கொட்டுகிறது.

5.சூரியன் உச்சம் பெற்றாலும் நீசம் பெற்றாலும் சூரிய சுக்கிர சேர்க்கை நெருங்கிய பாகையில் ஏற்பட்டாலும் முடி கொட்டுகிறது.

6. சூரியன்-குரு-செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டாலும் முடி கொட்டுகிறது.

7. செவ்வாய் சனி சேர்க்கை முடி கொட்டுதல் மற்றும் வழுக்கையும் ஏற்படுகிறது.

8.லக்னத்தில் ராகு, மேஷத்தில் ராகு, செவ்வாயோடு ராகு, சுக்கிரனோனு ராகு சேர்க்கை பெற்றவர்கள் முடியை சாயம் இடுவது, பலவித கெமிக்கல்களை உபயோகப்படுத்துவது, நேர்படுத்துவது (Straiten), வெட்டிவிடுவது போன்ற செயல்களால் முடியை சேதப்படுத்துவர்.

9. தற்பொழுது வக்ரம் பெற்ற சுக்ரனுடன் சூரியன் கோசாரத்தில் இனைவு பெற்றிருப்பதால் ரிஷப துலாம் மற்றும் சிம்ம லக்ன காரர்களுக்கு கொத்து கொத்தாக முடியுதிர்வு ஏற்படும்.

முடியுதிர்வை தடுக்க பரிகாரங்கள்:

1.கேச என்னும் சொல் அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் 'கேச' என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை அதர்வண வேதத்தில் உள்ளது.

Hair Loss in Astrology remedies

2. அதிக முடியை கொண்டவன் எனும் பொருளுடைய கேசவ பெருமாளை வணங்குவது முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்.

3. கேது ஸ்வரூபமான வராக மூர்த்தியை வணங்குவதும் முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.

4. ரத்தம், இரும்புச்சத்து ஆகியவற்றின் காரகனான அங்காரகனை வைதீஸ்வரன் கோயிலில் வணங்குவது முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.

5. மருத்துவ ஜோதிடம் திருவாதிரையை முடியின் நக்ஷத்திரமாக கூறுகிறது. எனவே அடி முடி காண முடியாத லிங்கோத்பவரை திருவாதிரை நக்ஷத்திர நாளில் வணங்குவது முடிவளர்சியை அதிகரிக்கும்.

6. முடிவளரும் தைலத்திற்க்கு அஸ்வினி என பெயர் வைத்ததிலிருந்தே கேது முடிவளர்ச்சிக்கு முக்கியமானவர் எனபது புலனாகும்.

7. கருமையான கூந்தலுக்கு சனீஸ்வர பகவானை வணங்குவது, அவர் காரகம் பெற்ற நல்லெண்ணை ஸ்நானம் செய்வது, மற்றும் நீலி ப்ருங்காதி தைலம், ப்ருங்காமல தைலம், செம்பருத்யாதி தைலம், மருதானி தைலம், பொண்ணாங்கன்னி தைலம், கரிசலாங்கண்ணி தைலம் போன்றவற்றை கூந்தலில் உபயோகிப்பது நல்ல பயனளிக்கும்.

8.இவற்றோடு நம்ம ஹீரோ சுக்கிரனையும் கவனிக்கனுங்க. அப்பதான் அழகான கூந்தலை பெறமுடியும்.

English summary
First house of birth chart is of overall personality and physique of the person. First sign of natural kaalpurush chart Aries also represent head and when we study ones birth chart about hair loss or baldness we should observe both. Venus is also observed in studies in case of hair loss / baldness along with the signs and planets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X