For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாம்பத்ய வாழ்வில் ரதி-மன்மதனை போல மகிழ்ச்சியாக இருக்கனுமா?

Google Oneindia Tamil News

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: இன்று இந்தியா முழுவதும் நெற்று முதல் ஹோலிப்பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை. தென் மாநிலங்களில் இந்த பண்டிகையை கொண்டாடுவது கொஞ்சம் குறைவுதான். இருப்பினும் இந்த பண்டிகை புராணக் கதையோடு தொடர்பு கொண்டது என்பது, இந்த விழாவை முன்னுரிமை பெற்றதாக மாற்றுகிறது.

ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும். கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர். சில இடங்களில் காம தகன தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

holi is one of the most popular hindu festivals and it is celebrated by people both young and old

குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும்

ஹோலிகா தகனம்:

இரண்யகசிபு என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை. இரணியன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

holi is one of the most popular hindu festivals and it is celebrated by people both young and old

இரணியன் தன் சகோதரி நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான். தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொடுட்டு இரணியன் பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் அமரும்படி கூறினான்.

மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்.

holi is one of the most popular hindu festivals and it is celebrated by people both young and old

காம தகனம்:

காம ஆசைகளைத் தூண்டிவிடும் தேவனுக்குப் பெயர் காமன். கண்ணனுக்குத், தன் மீது ஆசை தோன்றச் செய்ய வேண்டும் என்று ஆண்டாள் காமனையும் அவன் தம்பி சோமனையும் வேண்டுவதாக அமைந்துள்ளது நாச்சியார் திருமொழி. இதற்காக, காமனும் அவன் மனைவி ரதியும் தேவர்களால் மட்டுமல்லாமல் மனிதர்களாலும் போற்றப்பட்டனர்.

அந்த வகையில் சிவன் மீது காமக் கணைகள் தொடுக்குமாறு பார்வதி தேவி வேண்டுகிறாள் காமனை. கணை தொடுத்தான் காமன். தவம் கலைந்து கண் விழித்தார் சிவன். தவத்தைக் கலைத்ததால் சிவனுக்குத் தலைக்கேறியது கோபம், அதனால் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்கத் தீப்பொறி பறந்தது. காமனைச் சுட்டு எரித்தது. சாம்பலானான் காமன். காமனின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வண்ணத்தில் காமனை உயிர்ப்பித்தார் சிவன்.

வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ் கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.

holi is one of the most popular hindu festivals and it is celebrated by people both young and old

இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.

ஹோலிப்பண்டிகையும் ஜோதிடமும்:

எந்த ஒரு விஷயத்தையும் ஜோதிடத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கும் எனக்கு ஹோலிப்பண்டிகைக்கு ஜோதிடத்தோடு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என யோசிக்குப்போது நமது வாழ்வோடும் ஜோதிடத்தோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.

holi is one of the most popular hindu festivals and it is celebrated by people both young and old

ஹோலிப்பண்டிகையின் காரகர் யார் தெரியுமா? நமது இன்றைய ஹீரோ சுக்கிர பகவான் தாங்க! ஆமாம்! வண்ணங்களில் காரகர் சுக்கிர பகவான் தான். பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் கவலைகளை மறந்து உற்சாகமாக வாழவேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்ப்டுகின்றன. ஜோதிடத்தில் மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஆரவாரம், உற்ச்சாகம், பொழுதுபோக்கு போன்ற அனைத்திற்க்கும் காரகர் சுக்கிர பகவானாவர்.

எந்தொரு பிரச்சனையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்க்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன்.

holi is one of the most popular hindu festivals and it is celebrated by people both young and old

ரோமானியர்களும்கூட வீனஸ் தேவதையை (அதாங்க நம்ம ஊர் சுக்கிரன்) குணமளிக்கும் கடவுளாக ('Temple of Divine Goddess Healing and Balancing.) போற்றுகின்றனர். அவர்களும் வீனஸ் தேவதையை தாய் மற்றும் திருமணத்திற்க்கான பெண்தெய்வமாக போற்றி வணங்குகின்றனர். வீனஸ் தேவதை கடல் நுரையில் தோன்றியதாக கூறுகின்றனர். நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலகக்ஷமி தாயார் பார்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா.

காமமும் சுக்கிரனும்:

கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையை நிறைவடைய செய்யும் காதல் மற்றும் காமத்தின் காரகரும் சுக்கிர பகவனேதான். சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்பு மற்றும் நீசம், வக்ரம், பாவர்கள் தொடர்பு பெற்றுவிட்டால் அவர் வாழ்க்கையில் படுக்கை சுகமும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் எட்டாகனிதான்.

காலையில் இருந்து எத்தனை விஷயங்களில் வெற்றி பெற்றுவிட்டாலும் இரவில் படுக்கையில் ஒருவர் தோற்றுவிட்டால் அவர் நிலையை யோசித்து பார்க்கவே முடியாது. ஒருவர் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து நின்றுவிட்டாலோ, சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நின்று விட்டாலோ அவர்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்துவிடும்.

தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமைய சுக்கிர பகவானையே வணங்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின் காரகத்துவம் பெற்ற ரதி-மன்மதனை இந்த ஹோலி பண்டிகை நாளில் வணங்கவாழ்வில் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனை தீர்க்கும் பரிகாரங்க:

1. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்கு கோயில் உள்ளது.

2. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

3.சேலம் மாவட்டம் ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன் ஈசனைப் பூஜித்ததால் இறைவன் அருள்மிகு காம நாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

4. குமார சம்பவம் அதாவது முருகனின் திருஅவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின் மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட தர்மபுரியாகும்.

5.மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர் மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகாள நாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான்.

6. துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மனதிற்க்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம். எனவே பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய அடானா ராகத்தையும் மனதை வசீகரிக்க, மயக்க ஆனந்த பைரவி, உசேனி, கரகரப்பிரியா ராகத்தையும் கணவன் மனைவி இருவரும் கேட்பது கூட மிகுந்த பலனளிக்கும்.

English summary
Every festival Either it’s religious or national it contains a legend behind it. Holi also had its legend. It is believed that a King named Hiranyakashyap had a son named Prahlad respectively. Prahlad was the prime devotee of Lord Vishnu, and Hiranyakashyap was the rebel and had supernatural powers that he could be neither killed by human or not by animal neither indoor not outdoor, neither by any of the weaponry.From lighting the Holika bonfire, to playing colors, to visiting with friends and family, Holi is a wonderful celebration to bring the community together and celebrate the triumph of good over evil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X