• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பகவான் காலடி மண்ணெடுத்து நெத்தியிலே பொட்டு வெச்சி....

By Staff
|

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

காஞ்சி பெரியவரை பற்றிய கதை:

ஒரு முறை "மகாபெரியவா" துங்கபத்ராவுல மூழ்கி ஸ்நானம் பண்ணியபோது ஒரு பக்தர் கங்கை ஜலத்தையும் கொண்டுவந்து தந்திருந்தார். கங்கா ஜலத்தையும் ஸிரஸில் ஊற்றி குளித்தார்.

ஸ்நானம்,அனுஷ்டானம் எல்லாம் முடிஞ்சதும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த ஸ்தானத்துக்குப் புறப்பட்டார்.

Holy Mud Heals Diseases

இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை கொண்டு வந்து தந்திருந்த பக்தர், மகாபெரியவாளோட திருப்பாதம் பதிந்திருக்கும் தடத்தைப் பார்த்தார்.

அந்த பக்தருக்கு எதோ பொறிதட்னார்போல் இருந்தது.

பரமாசார்யார் இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக

பிரசாதம் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. உடனே அவர் பெரியவா பாதம்

பதிந்திருந்த மண்ணை அப்படியே சேகரித்து எடுத்து, தன்னிடம்

இருந்த பட்டுத்துணி ஒன்றில் வைத்து முடித்து கட்டி

எடுத்துக்கொண்டார்.

அதை அப்படியே வீட்டுக்குக் கொண்டுபோய் பூஜை அறையில பத்திரமா வைத்தார். தினமும் சுவாமிக்கு பூஜை ஆரத்தி பண்ணும்போது அந்தத் திருவடித் தூளிக்கும் காட்டுவார். மனசார மகாபெரியவாளை வேண்டிப்பார். பரமாசார்யா அனுகிரஹத்தால் வாழ்க்கை எந்த சிரமும் இல்லாம ஓடிண்டே இருந்தது.

இந்த சமயத்துல ஒருநாள் அவருக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வந்தது. அது, அவரோட நண்பர் ஒருவர் கடுமையான ஹார்ட் அட்டாக்கினால பாதிக்கப்பட்டு, மெட்ராஸில் ஒரு ஆஸ்பத்ரியில அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல்.

Holy Mud Heals Diseases

குஜராத் காரரான அந்த நண்பர், தன்னோட குலதெய்வமா மகாபெரியவாளை கும்பிடக்கூடியவர். மகாபெரியவாளோட ஆணைப்படி ஹிந்து தர்ம சாஸ்திரத்தை சமஸ்கிருதத்துல இருந்து குஜராத்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தவர். அவருக்குத்தான் இப்படி ஒரு சோதனை வந்திருந்தது.

உடனே நண்பரைப் பார்க்க புறப்பட்டார். 'பரமாசார்யாளோட பாததூளியை கூட எடுத்துக்கொண்டு செல்வோம். எதற்கும் பாதுகாப்பாக இருக்கும்!' என தோன்றியதால் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

நண்பரைப் பார்க்க மருத்துவமனைக்குப் போனார் இவர். அங்கே அவர் ரொம்ப நிலைகுலைஞ்சு மனசு உடைஞ்சு படுத்துகொண்டு இருந்தார். மூன்றாவது முறையா ரொம்பவே சிவியரா மாரடைப்பு வந்திருக்கறதால டாக்டர்கள் பெரிய ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லி இருக்கறதாகவும், அந்த ஆபரேஷன் பண்ணினாலும் பிழைக்கறதுக்கு உத்திரவாதம் இல்லை!'ன்னும் சொல்லி வேதனைப்பட்டார்.

எல்லாத்தையும் கேட்டுண்டு இருந்தவருக்கு இப்பவும் ஒரு எண்ணம் தோன்றியது "நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு வந்திருக்கேன். இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு சொல்றதைவிட, பரமாசார்யா என் மூலமா அனுப்பி வைச்சிருக்கார்னுதான் சொல்லணும்!" சொன்னவர், மகாபெரியவாளோட பாததூளியை எடுத்து, ஜயஜய சங்கரஹரஹர சங்கரன்னு சொல்லிண்டே நண்பரோட மார்புல தடவிவிட்டார். வலி குறையாட்டாலும் மனசுலேர்ந்து ஏதோ பாரம் குறைஞ்ச உணர்வுல அப்படியே தூங்கிப்போனார் குஜராத்திக்காரர்.

மறுநாள் கார்த்தால, ஆபரேஷனுக்கு முன்னால செய்யக்கூடிய வழக்கமான பரிசோதனைகளைச் செய்ய ஆரம்பிச்ச மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

அவசர அவசரமா ரிப்போர்ட்டுகளை எடுத்துக்கொண்டு போய் பெரிய டாக்டர்கள்கிட்டே காட்டினர். அவர்களுக்கும் என்ன ஏது? எப்படி இது நடந்ததுன்னு புரியலை. ஏன்னா, எல்லா ரிசல்டும்,அவர் பூரண ஆரோக்யமா இருக்கறதாகவும் அவரோட இதயம் ரொம்ப சீராக இயங்கறதாகவும் காட்டியது

"என்ன இது ஆச்சரியம்! நீங்க அட்மிட் ஆனப்போ, ரொம்ப

சீரியஸ் கண்டிஷன்ல இருந்தீங்க! இப்போ எல்லாமே நார்மல்

ஆயிட்டதா ரிசல்ட் வருதே. எங்களுக்குத் தெரியாம

வெளிலேர்ந்து வேற ஆயுர்வேதா,அது இதுன்னு ஏதாவது

மருந்து எடுத்துக்கிட்டீங்களா!?"

மருத்துவர்கள் அவர்கிட்டே கேட்கக் கேட்க, அவருக்கு ஒரு விஷயம் முழுசா புரிய ஆரம்பிச்சுது. மகாபெரியவா மேல தான் வைச்சிருந்த நம்பிக்கை, அதோட நண்பர் எடுத்துண்டு வந்து தன் மார்புல தடவின மகாபெரியவாளோட பாததூளியோட மகிமை எல்லாமா சேர்ந்து தன்னை குணப்படுத்திடுத்து என்பதை அவர் புரிஞ்சுண்ட கணத்துல அவரோட கண்ணுலேர்ந்து நீர் பெருகி வழிய ஆரம்பிச்சுது.

Holy Mud Heals Diseases

மண் குளியல் சிகிச்சை:

மண் குளியல் சிகிச்சை என்பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் முழுவதிலுமே கடைபிடிக்கப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட களிமண் ,அல்லது புற்று மண் இதனை ஊறவைத்து நன்றாக பேஸ்ட் மாதிரி செய்து தேவைப்படும் இடங்களில் பூசி மருத்துவம் செய்யப்படுகிறது.

தசை இறுக்கத்தை நீக்க, உடல் வலிகளை போக்க, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, தோல் ஒவ்வாமைகளை போக்க மற்றும் தோலை மிருதுவாக்க என்று பல பயன்களை தர கூடியது. மண்குளியல்.

புண் இல்லாத தோல் நோய் ,நரம்பு தளர்ச்சி ,தூக்க மின்மை , முடக்கு வியாதி ஆகியவற்றுக்கு மண் சிகிச்சை பலன் அளிக்கும்.

மண் சிகிச்சை சீசன்

வெயில் காலத்தில் இயற்கை மருத்துவமனைகள், அழகுக்கலை நிலையங்களில் மண் சிகிச்சை சீசன் நடைபெறுகிறது. வெறும் அழகுக்காக மட்டுமின்றி, கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையைக் குறைக்கவும் மண் சிகிச்சை சிறந்ததாகும். மாற்று மருத்துவ முறைகளில், இயற்கை மருத்துவ முறையில் மண் சிகிச்சை முக்கிய இடம் பெற்று உள்ளது. தமிழகத்திலும், கேரளாவிலும் இந்த மண் சிகிச்சை பரவலாகி வருகிறது. மண் சிகிச்சைக்குப் புற்றுமண் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சுத்தமான ஆற்றங்கரையில் உள்ள மிகச் சுத்தமான மண் பரிந்துரை செ#யப்படுகிறது. மண் பூச்சு, மண் பற்று, மண் புதையல், மண் குளியல் என மண் சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. உலர்ந்த வண்டல் மண், குளியலில் பயன் படுத்தப்படுகிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் மண் சிகிச்சை உதவுகிறது

பாததூளியும் பஞ்சபூத தத்துவமும்:

பஞ்சபூத தத்துவத்தில் மண் நில தத்துவத்தை குறிக்கிறது.

பஞ்ச பூதம்

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

மண்ணின் கூறுகள் :

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பாத மண்ணும் ஜோதிடமும்:

ஜோதிடத்தில் மண்ணை குறிக்கும் கிரகம் சனைஸ்வரன் எனும் சனீஸ்வர பகவானாவார். மண்ணில் உதித்த உயிர்களெல்லாம் மண்ணோடு மண்ணாக மாறுவதை குறிக்கும் வகையில் ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

நவ கிரகங்கள் ஆயுள் காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் சிறப்பாக அமைந்தால் ராஜ போக வாழ்வு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் மகரம் கும்பத்தில் அமைந்து ஆட்சி பெற்றோ, சனி துலாத்தில் அமைந்து உச்சம் பெற்று இருந்து சனி அமைந்த வீடு லக்கின கேந்திரமாகவே, சந்திர கேந்திரமாகவோ இருந்தால் சச யோகம் உண்டாகிறது. சச யோகம் ஆனது பஞ்சமகா புருஷ யோகத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆயுள் காரகனான சனியால் இந்த யோகம் உண்டாவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார்.

மண் மருத்துவம் என்றாலே சனைஸ்வரர் மற்றும் கேதுவின் இணைவு இருக்கும். மண்ணின் காரகர் சனைஸ்வரர். இயற்கை மருத்துவத்தின் காரகர் கேது. மண் மருத்துவத்தில் புற்றுமண் முதலிடம் வகிக்கிறது. புற்றின் காரகர் கேது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் பாத தூளி புனிதமாக அமையவேண்டுமானால் அவர் மிகச்சிறந்த ஆன்மீகவாதியாகவும் சன்னியாசியாகவும் இருக்கவேண்டும். சன்னியாசத்தின் காரகர்களும் சனியும் கேதுவும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் தெய்வமாக போற்றப்படும் காஞ்சி பெரியவரின் ஜாதகத்தில் நில ராசியான கன்னியில் சனியும் கேதுவும் இனைவு பெற்றது அவர் பாத தூளி மகத்துவத்தை விளக்க போதுமானதாகும்.

ம்ருத்திகா ப்ருந்தாவணங்கள் கொண்ட புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகத்தில் இந்த சனி-கேது இனைவு நிச்சயமாக பலம் வாய்ந்ததாக காணப்படும்.

இவ்வளவு ஏன்! "எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியிலே பொட்டு வெச்சி" எனற புகழ்பெற்ற பாடலுக்கு சொந்தகாரரும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தராகவும் அவராகவே நடித்த சூப்பர் திரு ரஜினிகாந்த் அவர்களின் ஜாதகத்தில் நில ராசியாகிய கன்னியில் சனி கேது பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு சிறந்த ஆன்மீக வாதி என்பதும் அனைவரும் அறிந்ததே!

ஜோதிடத்தில் க்ருஸ்தவத்தின் காரகராக கேதுவை கூறப்பட்டுள்ளது. இதை விளக்கும்வண்ணம் ஜான்: 9: 1-7 எனும் அதிகாரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு கிறிஸ்தவ மதத்தின் புனிதரான ஏசு கிறிஸ்து அவர்கள் தன் வாயிலிருந்து புனித மண்ணை உமிழ்ந்து பார்வை கிடைக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Mud is an important element of nature. It contains important minerals which have positive effects on human health. Mud can absorb toxins from human body therefore is very useful in preventing many diseases. It is also known for its healing properties. It also helps in cooling and relaxing body as it can hold moisture for a long time. Mud baths have existed for thousands of years, and can be found now in high-end spas in many countries of the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more