For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூழ்காத ஷிப்தான் பிரண்ட்ஷிப்... நாளை உலக நண்பேண்டா தினம்!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு உலக நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ம் தேதி "உலக நண்பர்கள் தினம்" கொண்டாடப்படுகிறது.

நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. எல்லோருக்கும் எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரிக்கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள்.

honour your friends and celebrate friendship day 2017 on august 6 sunday

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் போலும் வள்ளுவர்

"அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

என அறிவுறுத்துகின்றார்.

ஒருவரை ஒருவர் பார்க்காமல் நட்பு:

பார்க்காமலே காதலை பற்றி கேட்டால்

அஜித் அவர்கள் நடித்த "காதல் கோட்டை" படம் ஞாபம் வந்திடும். ஆனால் பார்க்காமலே நட்பு பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை .

இன்றைக்கு முகநூலில் பார்க்காமலே நட்பு பாராட்டும் பலருக்கும் இவர்களின் நட்புதான் முன்னோடியாகும்.

பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. இத்தகு நண்பர்களை நம்மால் மறக்க இயலுமா?

கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர் . சில ஆண்டுகள் கழித்துசோழன் வடக்கிருக்க ( சாப்பிடாமல் இறைவனை நினைத்து உயிர் துறப்பது ) முடிவு செய்தான்.

இதனை அறிந்து அவனுடன் மேலும் சிலர் வடகிருக்க முடிவு செய்தனர் .சோழன் புலவருக்காக இடம் அங்கு ஒதுக்கினான்

சோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காக த் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.,

மகாபாரதத்தில் நட்பு:

1. துரியோதனன் - கர்ணண் நட்பு

பாரத கதையில் தான் செஞ்சோற்று கடனை அடைக்க சகோதரர்களுக்கு எதிராக நண்பன் தீய செயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரை அவனுடனிருந்து உயிர் விட்ட கர்ணன் நட்பின் சிறந்த உதாரணம் ஆகும்.

2. நட்பிற்கு ஆண் பெண் வேறுபாடு கிடையாது ,இதற்க்கு கர்ணன் துரியோதனன் மனைவி நட்பை உதரணமாக சொல்லலாம் . இருவரும் விளையாடும் போது கழுத்தில் உள்ள ஆபரண முத்துக்கள் சிதறிவிட்டது அப்போது வந்த துரியோதனனிடன் எடுக்கவோ கோர்க்கவோ என கூறினான் பதற்றம் இல்லாமல் .

இதைத்தவிர ஸ்ரீக்ருஷ்ணன் - குசேலர் நட்பு, ஸ்ரீ க்ருஷ்ணன் - விதுரர் நட்பு, ஸ்ரீ ராமர் - குகன் நட்பு, ஸ்ரீராமர் - சுக்ரிவன் நட்பு, ஔவையார்- அதியமான் நட்பு போன்றவே புராண இதிகாசம் மற்றம் சங்க இலக்கியங்களில் புகழ்பெற்ற நட்புக்களாகும்.

ஜோதிடத்தில் நட்பிற்க்கான காரக கிரகம்

ஜோதிடத்தில் நட்புறவுக்கும் காரக கிரகம் புதனும் சுக்கிரனும் தான்

புதன்:

கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை, வசீகரத்தன்மை, அறிவாற்றல், தந்திரம், கலகலப்பானவர், கோழைத்தனம் ஆகியவற்றின் காரகனான புதன்தான் நட்பை வளர்க்கவும் காரக கிரகம் ஆகிறது.

சுக்கிரன்:

ஜோதிடத்தில் சுக்கிரனை ஜென வசிய கிரஹம் என போற்றப்படுகிறது. சுக்கிரன் பலமாக ஒருவருக்கு ஆட்சி உச்சமாக இருந்துவிட்டால் அவரை தேடி தேடி வந்து நட்பு பாராட்டுவர். ஒருவருக்கு சுக்கிரன் 6-8-12 அதிபதிகளாகிவிட்டால் கூடா நட்பு கேடாய் முடிந்துவிடும்.

மிதுனம் :

அதேப்போல் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமான மிதுனம் புதனுக்குறிய வீடாகி அதுவே நட்பையும்

தகவல் தொடர்பை குறிக்கும் பாவமாகிறது. எனவே ஒருவரின் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாம் வீடு, கன்னி, மிதுனம், புதனிருக்கும் வீடு ஆகியவற்றை கொண்டு ஒருவரின் நட்பையும் தகவல் தொடர்பையும் தீர்மானிக்க முடியும். மேலும் காமம், புத்திசாலித்தனம், கல்வி, கவர்ச்சி, ரகசியத் தொடர்பு, போட்டி, இணக்கமாக இருத்தல் ஆகியவற்றை குறிக்குமிடமாகவும் அமைகிறது.

மூன்றாம் பாவம் :

இந்த மூன்றாம் பாவகத்தை ஜெயஸ்தானம், வீரியஸ்தானம், சகோதிர ஸ்தானம், என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும். இந்த மூன்றாம் பாவம் அமைந்துள்ள ராசியின் அதிபதியை சகோதிர ஸ்தானாதிபதி, ஜெயாதிபதி, (அ) மூன்றாமதிபதி என்று அழைக்கப் படுவார்.

எழாம் பாவம்

காலபுருஷனுக்கு ஏழாம்பாவமான துலாம் ராசி சுக்கிரனின் வீடாகும். மேலும் இது ஜென வசிய ராசி என போற்றப்படுகிறது.

ஏழாம் பாவத்தை ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு உரிய பாவமாக நம் முன்னோர்கள் கூறினார்கள். கணவன், மனைவி உறவினை தவிர்த்து மற்ற உறவு முறைகளான அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா, மாமி, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, குழந்தை போன்ற உறவுகள்.

ஏழாம் பாவம் என்பது ஜாதகருக்கு சமமான நபர்களை குறிப்பதால் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதல், வாடிக்கையாளரையும், ஜாதகருக்கு உள்ள பொதுஜன தொடர்பினையும், ஜாதகருக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தையும், ஜாதகர் மற்றவரிடம் சகஜமாக பழகுபவரா அல்லது பொருளாதார ரீதியில் பழகுபவரா என்பதையும், மற்றவர்களால் ஜாதகர் ஏமாற்ற படுவாரா என்பதையும் 7 ம் பாவம் மூலம் ஒருவரின் ஜாதகத்தில் அறியலாம்.

11ம் பாவம் :

ஒருவருடைய விருப்பம், அபிலாசைகள், குறிக்கோள், வெற்றிகள், ஜாதகரின் நெருங்கிய நண்பர்கள், ஜாதகரின் நலம் விரும்பிகள், ஜாதகரை முகஸ்துதி செய்பவர்கள், சேமிக்கும் பழக்க வழக்கங்கள், முயற்சிகள் சித்தியாதல், ஆசைகள் நிறைவேறிய பின் கிடைக்கும் திருப்தி, நீடித்த நட்பு, ஒருமித்த கருத்து உடையவர்களின் குழு, சங்கம், கூட்டம், மாநாடு, தந்தை வழி சித்தப்பா, பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், போன்றவைகளும் 11ம் பாவத்தின் காரகங்களாகும்.

ஒருவருக்கு ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் மூன்றாமிடம், ஏழாமிடம் மற்றும் பதினோறாமிடம் இந்த ஐந்தும் நல்ல நிலையில் தொடர்பு பெற்று அதன் அதிபதிகள் நட்பாகவும் அமைந்துவிட்டால் அவர்கள் அனைவரிடமும் சிறந்த நட்புடன் விளங்குவர். அதிலும் லக்னம் ஜன வசிய ராசியான துலாம் மற்றும் ரிஷபமாக இருந்துவிட்டால் அனைவரும் தானை வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

நட்பு பாராட்டும் அமைப்பு:

1. ஒருவர் ஜாதகத்தில் லக்னம்,ராசி, காரகாம்சம், மூன்றாம் வீடு ஆகியவை புதன் வீடுகளாகவோ அல்லது சுக்ரனின் வீடுகளாகவோ அமைந்து அவர்கள் ஆட்சி உச்சம் அல்லது ஆத்மகாரகனாக அமைந்துவிட்டால் அவர்கள் எல்லோரிடமும் எளிதில் நண்பராகிவிடுவார்கள்.

2. எந்த ராசி/ லக்னமாக இருந்தாலும் லக்னத்தில், ராசியில், மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய இடங்களில் புதன் சுக்ரன் அமர்ந்துவிட்டால் அவர்கள் நட்பு பாராட்டுவதில் இனியவர்கள்.

3. உங்கள் ராசி/லக்னம் புதனின் ராசிகளாகவும் உங்களுடன் பழகுபவர் ராசி/லக்னம் சுக்கிரனின் ராசிகளாக அமைந்துவிட்டால் நட்பு எளிதில் கை கூடும்.

4. உங்கள் ராசி/லக்னமும் உங்களுடன் பழகுபவர் ராசி லக்னமும் நட்பு கிரகங்களின் ராசிகளாக அமைந்தால் மிகச்சிறந்த நட்பு அமைந்துவிடும்.

5. உங்கள் மூன்றாம் அதிபதி புதனாகவும் உங்களுடன் பழகுபவர்

பதினோராம் அதிபதி சுக்கிரனாகவும் அமைந்துவிட்டாலும் அல்லது உங்கள் பதினோராமதிபதி புதனாகவும் எதிராளியின் மூன்றாமதிபதி சுக்கிரனாகவும் அமைந்துவிட்டால் ஆழமான நட்பு அமைந்துவிடும்.

நட்பு வளர்க்கும் பாண்டவ தூத பெருமாள்:

உங்களுக்கு அக்கம் பக்கத்தார், உடன் பணிபுரிபவர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் பகைமை ஏற்பட்டு பிரச்சனை ஏற்படுகிறதா? நீங்கள் செல்ல வேண்டிய திருக்கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது.

புதனின் அதிதேவதையான விஷ்னு ஸ்வருபமான கிருஷ்ணரே பாண்டவ தூத பெருமாளாக கோயில் கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவில், (ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரக் கோவில் )- காஞ்சிபுரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் புன்னகையோடு காட்சி யளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.

கோயிலில் வந்து வணங்குவது அவர்களின் பகைவர்களும் பகைமை மறந்து நட்பு பாராட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவல்லிகேணி பார்த்த சாரதி பெருமாள்:

இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டி (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.

அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்த அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் புதன் அல்லது சுக்கிரன் ஆறாம் அதிிபதியாகிவிட்டால் அவர்கள் இந்த

தமிழர்களின் வாழ்வில் நட்பு என்பது வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இப்போதுபோல நண்பர்கள் தினம் என்று தனியாக இல்லை.

நமக்கு நல்ல நண்பர்களை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி ,நம் நண்பர்களுடன் நேரிலோ ,தொலைபேசியிலோ நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவேண்டும்.

சிலகருத்து வேறுபாடுகளால் நம்மை விட்டு பிரிந்து போன நண்பர்களுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, அவற்றை மறந்துவிட்டு சிறிய நினைவு பரிசு கொடுத்து அவர்களுடன் மீண்டும் நட்பை புதுப்பிக்கும் நாளாக கொண்டாடலாம்.

English summary
Human beings are social creatures and have always valued the importance of friends in their lives. To celebrate this noble feeling it was deemed fit to have a day dedicated to friends and friendship. Accordingly, first Sunday of August is being celebrated world wide. This beautiful idea of celebrating Friendship Day was joyfully accepted by several other countries across the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X