• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபாகரனுக்கு தீர்க்க ஆயுள்... அடித்துச்சொல்லும் ஜோதிடர்கள் #Prabhakaran

|

சென்னை: தமிழீழ விடுதலைக்கு போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் இருக்கும் வால்வெட்டித் துறையில் நவம்பர் 26ம் தேதி, 1954ம் ஆண்டு பிறந்தார். இன்று அவருடைய 65வது பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவரது ஜாதகத்தை கணித்த பலரும் அவருக்கு தீர்க்க ஆயுள் என்றே கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது கடந்த 2009ஆம் ஆண்டு மே 17ம் தேதி பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே பழ.நெடுமாறன் கூறி வருகிறார். ஈழ இறுதிப்போரின்போது பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டது உறுதி எனில், சர்வதேச ஊடகங்கள் முன் பிரபாகரனின் உடலை காட்டாதது ஏன்? என்றும் நெடுமாறன் கூறியுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பிரபாகரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பொதுவாக குற்றாச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மரண சான்றிதழ் பெறப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், சிங்கள அரசு இன்னும் பிரபாகரன் இறப்பு சான்றிதழ் வழங்காதது ஏன் என்றும் கூறியுள்ளார் பழ. நெடுமாறன்

பிரபாகரன் உடலுக்கு டிஎன்ஏ டெஸ்ட் நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றால், பிரபாகரனுடைய பெற்றோர் அல்லது பிள்ளைகளின் ரத்த மாதிரி சேகரித்து அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் சோதனை நடத்த முடியும். இறுதிப்போர் நடந்த காலக்கட்டத்தில் பிரபாகரனின் பெற்றோரும் இலங்கையில்தான் இருந்தனர். ஆனால் அவர்களிடம் இதுவரை ரத்த மாதிரிகள் எடுக்கவே இல்லை.

இதுவரை மரபணு சோதனை நடத்தப்படவில்லை. அத்துடன், மரணச் சான்றிதழ்கூட இன்று வரையிலும் வழங்கப்படவில்லை. தலைவர் பிரபாகரனுடைய உடல் கடலில் வீசப்பட்டுவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆகையால் அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரப்பூர்வமான தகவல் ஏதும் அரசாங்கத் தரப்பிடம் இல்லை என்று இலங்கையிலும் கூறியுள்ளனர். சரி பிரபாகரன் ஜாதகம் பற்றி ஜோதிடர்கள் சொல்வதை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம் படியுங்கள்.

பிரபாகரன் பிறந்த முகூர்த்தம் அபிஜித் முகூர்த்தம் 26-11-1954 நாளன்று கும்ப லக்னம், விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் விருச்சிகத்தில் சேர்ந்திருந்தாலும் அவர் பிறந்தது பிரதமை திதி. கார்த்திகை 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை. பிறக்கும் போது புதன் மகாதிசை 14 ஆண்டுகள் ஏழு மாதம் 13 நாட்கள் இருந்துள்ளது. அவருக்கு 2002ஆம் ஆண்டு சந்திர தசை தொடங்கியது. சந்திரதசை 10 ஆண்டுகள். இந்த கால கட்டத்தில்தான் அதாவது 2008 மே 7 ஆம் தேதி முதல் 2009 ஆண்டு அக்டோபர் 7 வரை சந்திர தசை புதன் புத்தி நடந்த காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கடலில் வீசப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம் இது புத்திசாலித்தனமான புதனின் நட்சத்திரம். விருச்சிக ராசிக்கு உரிய அடையாளம் தேள். பொதுவாக தேள் எப்படி இறுதி வரை போராடுமோ அதேபோல் அந்த ராசிக்காரர்களுக்கும் அந்த குணம் உண்டு. பிற உயிரினத்துடனான சண்டையின் போது உடல் பாகங்களை இழந்தாலும் தேள் மீண்டும் மீண்டும் போரிடும். ஜீவராசிகளில் இதுபோன்ற உக்கிரத்தன்மையை தேளிடம் மட்டுமே அதிகம் பார்க்க முடியும். விருச்சிக ராசியை உடையவர்களுக்கும் இந்தத் தன்மை இருக்கும் என்பதால் தமிழீழத்திற்காக அவர் இறுதி வரை போராடினார்.

போர்க்குணம் கொண்டவர்

போர்க்குணம் கொண்டவர்

உச்சனை உச்சன் பார்த்தா - கெட்டுப்போன நேரத்துல பிச்சை கூட கிடைக்காதுங்கறது விதி. அதுபோலத்தான் பிரபாகரன் ஜாதகத்தில் சனி உச்சம், உச்சமடைந்த சனி கடக ராசியில் உச்சமடைந்த குருவை பார்ப்பதால் உதவி எங்கேயும் கிடைக்காமல் போனது. லக்னத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் போர் குணம் கொண்டவர். இவர் சதா சர்வ காலமும் ஆயுதம் தாங்கியே வாழ்ந்தார்.

80 வயது வரை ஆயுள்

80 வயது வரை ஆயுள்

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி சனி உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

தமிழீழ அதிபர்

தமிழீழ அதிபர்

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற மிகவும் விசேஷமான ஜாதகம்! பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். தனித் தமிழீழம் என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார் என்றும் கூறியுள்ளார். பிரபாகரன் 07-07-2012க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஆனால் இந்த நாள்வரை அது நடக்கவில்லை.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

பிரபாகரன் ஜாதகத்தில் சூரியன திக் பலத்தை கொடுக்கக்கூடிய 10 மிடத்தில் இருப்பதும் சிறப்பு அதனுடன் ஆறாம் அதிபதி சந்திரன் நீசமாக யோகத்துடன் இருக்கிறார். இவர் ஜாதகத்தில் தனாதிபதி குருபகவான் 6-ல் உச்சம் இது மிகப்பெரிய யோக அமைப்பாகும் அதாவது குடும்ப ஸ்தானதியாகிய குருபகவான் உச்சமாக இருந்ததால்தான் போராளி இயக்கத்தில் இருந்தாலும் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்தார் மேலும் இவர் வாக்கு வன்மை பெற்ற தீர்க்கத்தரசி என்று கணித்துள்ளார் மற்றொரு ஜோதிடர்.

ராணுவ கட்டமைப்பு

ராணுவ கட்டமைப்பு

தைரிய,வீர ஸ்தானமான செவ்வாய் லக்கினத்தில் இருப்பதால் எதற்கும் அஞ்சாத வீரம் கொண்டவர் அவர் லாபாதிபதி ஆனதால்தான் தன் வீரத்தால் ஒரு ராணுவத்தையே உருவாக்க முடிந்தது. பொதுவாகவே லக்கினாதிபதி சனி உச்சம் பெற்றால் தீர்க்காயுள் அது மட்டுமல்லாமல் அதனுடன் பாக்கியாதிபதி சேர்ந்ததால் ஆயுளுக்கு எந்த குறையும் இல்லாத நிலை ஏற்படும் அது மட்டுமல்லாமல் பூர்வ புண்ணியாதிபதியும் சேர்ந்துள்ளார்.

கொள்கையில் பிடிவாதம்

கொள்கையில் பிடிவாதம்

பிரபாகரன் பிறந்த தேதி 26 அதாவது கூட்டுத்தொகை 8 சனி பகவான் எண்,இவர் லக்கினமும் சனிபகவானுடையது இந்த அமைப்பு பெற்றவர்கள் தன்னை எதிர்த்தால் பழிவாங்காமல் விடமாட்டார்கள் இவர்களிடம் பகைத்தால் சனீஸ்வரனிடம் மாட்டியதுபோலத்தான். அதுமில்லாமல் கும்ப லக்கினக்காரர்கள் கொண்ட கொள்கையில் பிடிவாதம் கொண்டவர் யாருக்காகவும் தன் கொள்கையை மாற்றிகொள்ளாதவர்கள்,நேர்மையானவர்கள் தன் லட்சியத்திற்காக எதையும் இழப்பார்கள்.

உயிரோடு இருக்கலாம்

உயிரோடு இருக்கலாம்

இவர் ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளது அதாவது தன் ஆயுள் காலத்திலேயே குழந்தைகள் காலமாவதை பார்க்கும் அமைப்பு உள்ளது. இலங்கையின் இறுதிப்போரின்போது இவருக்கு சந்திர திசையில் புதன் புத்தி நடந்தது அதாவது சந்திரனும் நீர்காரகன்,புதன் எட்டாம் அதியாக இருந்தாலும் சுபர்தான் அதனால் கண்டம் ஏற்பட்டியிருந்தாலும் இன்னொன்றையும் நாம் பார்க்க வேண்டும் "உத்திர காலாமிர்த்தத்தில்" மஹாகவி காளிதாசர்,சூரியனும்,சந்திரனும் உலகத்தில் உயிர்களை வாழவைப்பவர்கள் அதனால் இவர்கள் திசையில் ஆயுள் பாதகம் ஏற்படாது என சொல்லியிருக்கிறார் அந்த வகையில் பார்க்க போனால் இவர் ஜாதகத்துக்கு சந்திரன் பாவியாக இருந்தாலும் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். இந்த கணிப்பு 2015ஆம் கணித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Describing about famous person Velupillai Prabhakaran from SriLanka and analyzing his birth horoscope how planets provided exemplary fame based on his ascendant.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X