• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடீஸ்வரர் ஆக ஆசையா? - குபேரன் அருள் கிடைக்க இதை எல்லாம் செய்யுங்கள்

|

மதுரை: பணக்காரர் ஆகவேண்டும் மகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் வரவேண்டும், குபேரன் அருள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். கோடீஸ்வரர் ஆகவும் குபேரனின் அருள் கிடைக்கவும் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கிறீர்களா? ரொம்ப சிம்பிள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிற்குத் தேவையாக கல் உப்பு வாங்குங்கள் விதம் விதமாக ஊறுகாய் வாங்கி வையுங்கள் குபேரன் அருள் நிச்சயம் கிடைக்கும்.

அம்பானி, அதானி போல நாமும் எப்போது பணக்காரர்கள் ஆவோம் என்ற ஏக்கம் பலருக்கு உண்டு. கோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி பணக்காரர் ஆவது குபேரனின் அருள் நமக்குக் கிடைக்குமா என்றும் ஏங்குகின்றனர். செல்வம் சேரும் இடத்தில்தான் சேரும். செல்வத்தை ஈர்க்க சில வழிகள் உள்ளன. பசுவும், வெண் புறாக்களும், சில உணவுப்பொருட்களும், வாசனை பொருட்களும் செல்வத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குபேரனை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர் இதை செய்தால் குபேரன் அருள் எளிதாக கிடைக்கும்.

குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்குநோக்கி வைப்பது சிறப்பு. குபேரரின் அருளால் தொழிலில் லாபமும், செல்வ வளமும் பெருகும். புதன்கிழமை சிறப்பானது. பச்சை நிறம், பாசிப்பயறு குபேரனுக்கு பிடித்தமானது.

குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வ செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துகளை கீரி விரட்டுவது போல, பணகஷ்டத்தால் நமக்கு வரும் இடையூறுகளை நீக்குவதை குறிக்கும் விதத்தில் கீரியை தாங்கியிருக்கிறார் குபேரர்.

இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

திருப்பதி பெருமாள்

திருப்பதி பெருமாள்

தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கள் கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோடீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

 அருகம்புல் அர்ச்சனை

அருகம்புல் அர்ச்சனை

கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமையில் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும். பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும். வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும்.

குபேரனை ஈர்க்கும் வெள்ளை மொச்சை

குபேரனை ஈர்க்கும் வெள்ளை மொச்சை

குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

பசுவின் கோமியம் லட்சுமி கடாட்சம்

பசுவின் கோமியம் லட்சுமி கடாட்சம்

தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் நன்மைகள் நடக்கும்.

யாருக்கும் கொடுக்காதீங்க

யாருக்கும் கொடுக்காதீங்க

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும். வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் பணமும் வெளியேறி விடும்.

 வெள்ளிக்கிழமை சுக்கிரன்

வெள்ளிக்கிழமை சுக்கிரன்

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாக பணம் வரும்.

பகல் 12 மணியளவில் அபிஜித் நட்சத்திரத்தில் திருநங்கைக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

 பணப்பிரச்சினை தீர வழி

பணப்பிரச்சினை தீர வழி

முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை பசுவிற்கும் பறவைக்கும் அளித்திட பணத்தடை நீங்கும்.பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும். பணப் பிரச்சனை தீரும்.

அவல் தானம் செய்யுங்கள்

அவல் தானம் செய்யுங்கள்

சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழைகளால் ஆன அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். இதனால் தான் சித்திரை முதல் நாள், சித்ரா பவுர்ணமி, அட்சய திரிதியை நாட்களில் வெல்லம் அல்லது கருப்பட்டி பாகுடன் சேர்த்த அவல் சாப்பிடும் பழக்கம் உள்ளது.

கஜலட்சுமி அருள்

கஜலட்சுமி அருள்

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள். குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

செல்வம் சேரும் வழி

செல்வம் சேரும் வழி

கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும். மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும். சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும். மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும். வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

பணம் வரும்

பணம் வரும்

அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.

தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும். குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.

குத்து விளக்கு வழிபாடு

குத்து விளக்கு வழிபாடு

துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்ச்சனை செய்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

லட்சுமி அருள்

லட்சுமி அருள்

வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம்.

மொச்சை பயிர்

மொச்சை பயிர்

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மாளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது. அதே போல சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் பெருகும்.

 பணப்புழக்கம் அதிகரிக்க வழி

பணப்புழக்கம் அதிகரிக்க வழி

லட்சுமி குபேரர் படத்துடன் குபேர யந்திரத்துடன் 48 நாட்கள் பூஜிக்க செல்வம் பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Lord Kubera is also often seen holding a mongoose in his hand. The mongoose is often made of gold and it spits precious gems when it opens its mouth.He rides the Pushpaka Vimana. It was gifted to him by none other than Lord Brahma.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more