For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவிலில் சாமியை பார்க்கும் முன் தானம் செய்யுங்க - நல்லது உடனே நடக்கும் !

கோவிலுக்கு சென்று சாமியை கும்பிடும் முன்பாக கோவில் வாசலில் அமர்ந்து இருப்பவர்களுக்கு நிறைய தானம் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.

Google Oneindia Tamil News

சென்னை: கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட சாமி கும்பிடும் முன்பாக தானம் செய்வதால் புண்ணியம் அதிகரிக்கும்.

கோவிலுக்கு எப்போதும் வெறும் கையுடன் கோயிலுக்கு செல்லக்கூடாது. பழம், பூ, எண்ணெய், காணிக்கை இதில் எதாவது ஒன்றை வலது கையில் கொண்டு செல்ல வேண்டும்.

உடல், ஆடை,மனம் எல்லம் தூய்மையாக இருக்க வேண்டும். பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும் மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி கும்பிட்டுக் கூடாது. வாகனங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.

How to Pray in Hindu Temples
  • கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோபுரத்தினை ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளையும் குவித்தும். பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்கவேண்டும்.
  • வேண்டுதல்களை கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். கொடி மரம் இல்லாத கோவில்களில் பிள்ளையாரை துதித்து விட்டு பிரகாரத்துக்குள் நுழையா வேண்டும்.
  • பலி பீடத்திற்கு அருகில் சென்று வணங்கி நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியும் என்னும் ஆறு தீய குணங்களை பலி கொடுத்ததாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
  • அம்மன் கோவிலில் பலி பீடத்தில் சிறிது உப்பு, மிளகைக் கொட்டி பிராத்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம். பலி பீடத்தை குறைத்தது மூன்று முறை அல்லது ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
  • பிள்ளையாரை வணங்கும்போது தோப்புகரணம் போட்டு, நெற்றி பொட்டுகளில் லேசாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இதனால் காது மற்றும் முக்கிய ஜீவப் புள்ளிகள் தூண்டப்பட்டு, புத்துணர்வு கொள்வதாக விஞ்ஞானம் சொல்கிறது.
  • ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது. தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம். தெய்வ வாகனங்களின் வாலை பக்தியிடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டம்.
How to Pray in Hindu Temples
  • கோவிலில் பிரகாரங்களை வலம் வரும்போது வேகமாக நடக்கக்கூடாது. மெல்ல நடக்க வேண்டும். திருக்கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்திலும், மூடியிருக்கும் நேரத்திலும், திருவிழாவில் சுவாமி உலா வரும் நேரத்திலும் கோவிலில் தெய்வத்தை வணங்குவதோ, பிரதட்சணம் செய்வதோ கூடாது. அபிஷேகம் நடந்தால் பிரகாரத்தை சுற்ற கூடாது, அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.
  • விநாயகருக்கு ஒரு பிரதட்சணமும், லிங்கம், முருகன், தக்ஷிணாமூர்த்தி, அம்மன் போன்ற மூர்த்திகளுக்கு மூன்று பிரதட்சணமும், விஷ்ணுவுக்கும் தாயாருக்கும் நான்கு பிரதட்சணமும், அரச மரத்திற்கு. ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும்.
  • மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து. துவாரபாலகர்களின் முன் சென்று, இறைவனை தரிசிக்க அனுமதி தந்து அருளுங்கள் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். சிவன் கோயிலாக இருந்தால் முதலில் சிவனையும் பிறகு அம்பாளையும் வணங்க வேண்டும். பெருமாள் கோவிலில் முதலில் மகாலக்ஷ்மியை வணங்கி, பிறகு பெருமாளை வணங்க வேண்டும்.
  • சாமிக்கு அர்ச்சனை செய்து, ஆரத்தி காட்டியதும் பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும். பிரசாதம், தீர்த்தம், சடாரி, நைவேத்தியம் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு வருவது நல்லது. விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை கோயில்களின் தூண்களில் பூசுவதோ, திர்தத்தை தரையில் சிந்த விடுவதோ கூடாது. அதனால் தான் தீர்த்தம் பெரும் சமயம் கைகளுக்குக் கீழே புடவையோ அல்லது மேல் துண்டையோ வைத்துக் கொள்கிறோம்.
  • பெருமாள் கோவில்களில் நவக்கிரக வழிபாடு இல்லை. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரங்களை வணங்கிய பலன் கிடைக்கும். சிவன் கோவில்களில் நவக்கிரங்களுக்கு தனி சந்நிதி இருக்கும். மூலவரைத் தரிசித்து வெளியே வந்ததும், நவக்கிரக தரிசனம் செய்து ஒன்பது முறை பிரதட்சணம் செய்வது நலம்.
  • சிவன் கோவில்களில், கடைசியாக வணங்க வேண்டியவர் சண்டிகேஸ்வரர் ஈசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரை தரிசித்து சத்தம் எழுப்பாமல் வணங்க வேண்டும்.

கோவில்களில் செய்யக் கூடாதவை:

  • கோவிலை அசுத்தம் செய்யக் கூடாது. எச்சில் துப்பக்கூடாது, தூங்கக் கூடாது, நம்மைவிட சிறியவர் கையிலிருந்து விபூதியை எடுத்து நாம் தரிக்கக் கூடாது. கோயிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது. சத்தமாக சிரிக்க கூடாது, மொபைலில் பேசவும் கூடாது.
  • சிவன் கோயிலாக இருந்தால் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து சிவகனங்களை அங்கேயே விட்டு செல்ல வேண்டும். பெருமாள் கோயிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் சென்றால் லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம். பிரதான துவராபைகர்களை மறுபடியும் மணசீகமாக வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு, மறுபடியும் கொடி மரத்திற்கு எதிரில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வெளியில் வர வேண்டும்.
  • கோவிலில் தூங்க கூடாது. கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது. குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது. கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
  • மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது. படிகளில் உட்கார கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
  • வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது. கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
  • கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது . புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
  • கோவிலுக்கு போய்விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது. வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாது , வீட்டிற்குள் அப்படியே செல்ல வேண்டும். அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் பெற்ற வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.
English summary
Visiting a Hindu temple can be a powerful cultural and religious experience. However, you need to prepare so that you are respectful of those worshiping. It is important to understand the rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X