• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி

|

தேனி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பாபாஜி சிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் நோய்க்கு எங்குமே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் அந்த நோயை மூன்றே நாட்களில் குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார் பாபாஜி

சீனாவில் திடீரென பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ள நிலையில் மேலும் பல ஆயிரம் பேர் இந்நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ உலகமே விழி பிதுங்கி நிற்கும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் வசிக்கும் ஒரு சித்தர் இந்த நோயை மூன்றே நாட்களில் குணமாக்கி காட்டுவேன் என்று சவால் விட்டுள்ளார்.

I will cure coronavirus virus in 3 days - Theni Babaji Challenge

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசபட்டி என்னும் இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் சித்தர் ஸ்ரீ ஜி ஜி லாஅல் சித் பாபாஜி அட்டமா சித்திகளை அடைந்து ஜடாமுடியுடன் சிவப்பு கோவனத்துடனும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்களுக்கு அருள்புரிந்து அவர்கள் வேண்டியதை அளித்து வருவதாலும், பாபாஜி இடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுவதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இவரை நாள்தோறும் தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

உடல் மற்றும் உள்ளதால் ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவம் அல்லா மகத்துவ முறையில் ஞான மார்க்கத்தின் அடிப்படையில் தீர்வு கொடுப்பவர். அதாவது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய், குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை வரம், நுன் கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்கள் சர்க்கரை நோய் மற்றும் மனிதருக்கு ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கு எங்குமே தீர்வு கிடைக்காத மக்களுக்கு தேவையான மருத்துவத்தை வழங்கி குணப்படுத்தி வருவதாக இவரால் பலன் பெற்று மீண்டும் இவரைக் காண வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பாபாஜி சிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் நோய்க்கு எங்குமே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் அந்த நோயை மூன்றே நாட்களில் குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார் பாபாஜி . மேலும் அரசாங்கம் தனது உதவியை நாடினால் அரசாங்கத்திற்கு கொரனா வைரஸ் நோய் தொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தேவைப்பட்டால் சீனாவிற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சர்க்கரைநோய் மற்றும் புற்றுநோய், குழந்தையின்மை என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார். 2020 ஆம் ஆண்டு யுத்த காலமென்றும், அக்னி ஜுவாலை வீசும் என்றும் மழை இல்லாமல் கடும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

 
 
 
English summary
Sri GG Laal Sid Babaji said in a short while that healed patients who had been infected by the coronavirus attack that threatened the world would be cured in three days.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X