For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு காலத்தில் விளக்கேற்றி பூஜை பண்ணுங்க... தடைகள் நீங்கும் செல்வ வளம் பெருகும்

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

Google Oneindia Tamil News

சென்னை: ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம். பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள். அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்.

ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை. ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும். இப்போது ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியில் குரு சனியோடும் சேர்ந்து இருக்கின்றனர். ராகுவிற்கு குருவின் பார்வை கிடைத்துள்ளது. சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை நோக்கி தவமிருந்து நவகிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.

செவ்வாயும் ராகுவும்

செவ்வாயும் ராகுவும்

செவ்வாய்க்க மங்களன் என்ற பெயர் உள்ளது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நல்ல பலன் தரும்.

ராகு கால விரதம்

ராகு கால விரதம்

துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பானது.

ராகு கால துர்க்கை பூஜையை கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதுதான் நல்லது. ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம். கோவிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

அரளி பூக்கள்

அரளி பூக்கள்

துர்க்கைக்கு அரளி பூ பிடித்தமானது. ராகு கால பூஜைக்கு பூஜைக்கு செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

தயிர் சாதம், பால் பாயாசம் என நம்மால் இயன்ற நிவேதனங்களோடு, எலுமிச்சை ஜூஸ் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகு காலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.

கடன் பிரச்சினை

கடன் பிரச்சினை

வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம். அதன்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

பொன் பொருள் சேர்க்கை

பொன் பொருள் சேர்க்கை

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

எலுமிச்சை விளக்கு

எலுமிச்சை விளக்கு

ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வரு கிறது. விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம். ராகுகால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.

ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது.

லட்சுமி சரஸ்வதி பார்வதி

லட்சுமி சரஸ்வதி பார்வதி

எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய க்ரீம் என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது க்லீம் என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது சாமுண்டாயை விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். இந்தச் சொல்லுக்கு முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க என்று பொருள்.

English summary
Tuesdays are considered as auspicious for paying obeisance to Mother Durga. Those who pray to her on Tuesdays during rahu kaal 3 pm to 4.30 pm are assured of freedom from obstacles. But the only thing is that do not expect results overnight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X