For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புளியோதரை சர்க்கரைப்பொங்கல், பாயசம் எந்த கடவுளுக்கு என்ன நைவேத்தியம் படைக்கலாம்

:கடவுளுக்கு தினசரியும் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். கடவுளுக்கு படைக்கப்படும் போது அந்த நைவேத்தியம் பிரசாதமாகிறது. சிவபெருமான், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பார்வதி என பல கடவுளுக்கும் அவர்களுக்கு பிடித

Google Oneindia Tamil News

சென்னை: நாம் வயிராற சாப்பிட உணவு கொடுக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். இறை நம்பிக்கை உள்ள அனைவரும் தினசரி பூஜை செய்யும் போது கடவுளுக்கு பிடித்தமான ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். கடவுளுக்கு 18 வகை பலகாரங்கள் படைத்து வழிபடவேண்டும் என்று இல்லை சாதாரண கல்கண்டோ, சர்க்கரையோ கூட படைத்து வழிபடலாம்.

நாம் வாங்கும் எந்தப்பொருளையும் இறைவன் பாதத்தில் வைத்து வணங்கி நன்றி சொல்வது சிறப்பு. இறைவனுக்கு படைக்கப்படும் அனைத்துமே பிரசாதமாகிவிடும். பழங்கள், உலர்திராட்சை, கற்கண்டு, பேரிட்சை, பால் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை படைக்க வேண்டும்.

இதேபோல தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்

கோவில் பிரசாதங்கள்

கோவில் பிரசாதங்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க ச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம். திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் பொங்கல் படைக்கப்படுகிறது. அழகர் கோவில் அற்புதமாக இருக்கும்.

சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல்

கணபதிக்கு பிடித்தமானது சர்க்கரைப்பொங்கல், மோதகம், அவல், கொண்டைக்கடலை, அப்பம் படைக்கலாம். அவரது மாமன் மகாவிஷ்ணுவிற்கு எல்லாமே பிடிக்கும். மஞ்சள் நிற நைவேத்திய உணவுப்பொருட்களை படையலாக போடலாம். லட்டு, பொங்கல், புளியோதரை படைக்கலாம். கண்ணனுக்கு வெண்ணெய், அவல் படைக்கலாம்.

வெண் பெங்கல்

வெண் பெங்கல்

சிவபெருமானுக்கு வெண் பொங்கல், வடை, சாதம், பாலில் குங்குமப்பூ சேர்த்து படைக்கலாம். கல்விக்கு அதிபதியான சாரதாம்பிகைக்கு பிடித்தமானது வெண் பொங்கல்தான்.

தேன் தினைமாவு

தேன் தினைமாவு

அழகன் முருகனுக்கு பிடித்தமானது வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்த தாளித்த கடலை பருப்பு, தினை மாவு பழங்கள், வெல்லம், பஞ்சாமிர்தம் போன்றவை படைக்கலாம். ஐயப்பனுக்கு பிடித்தமானது அரவணைப்பாயசம்.

பாயாசம்

பாயாசம்

அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமானது அரிசி பாயாசம், அனைத்து வகையான இனிப்புகளும் அன்னை மகாலட்சுமிக்கு இஷ்டமானது. துர்க்கை அன்னைக்கு பிடித்தமானது பாயாசம் சர்க்கரைப்பொங்கல் உளுந்த வடை. அனுமனுக்கு சிவப்பு நிற பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்யப்படும் பண்டங்கள் விருப்பமானது. வடையும் பிடித்தமானது.

ஆடிக்கூழ் பிடிக்கும்

ஆடிக்கூழ் பிடிக்கும்

ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் படைப்பார்கள். தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிக்கூழ் படைத்து வழிபடுவது சிறப்பு. ராகு, கேது, சனி பகவானுக்கு கருப்பு எள், உளுந்து ஆகியவற்றில் செய்த பலகாரங்களை படைக்கலாம். குபேரனுக்கு பிடித்தமானது பச்சை நிற சீதாப்பழ பாயாசம் லட்டு. இவற்றை படைத்து வழிபட செல்வம் பெருகும்.

English summary
Here is a very good explanation about Neivedyam to God. Naivedyam is the Food offered to a Hindu deity as part of a worship ritual, before eating it. As such, tasting during preparation or eating the food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X